India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அஜித்தின் குட் பேட் அக்லி, தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை இரண்டும் ஏப். 10ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அஜித் உடனான மோதலில் இருந்து தனுஷ் பின்வாங்கியதாக தெரிகிறது. ‘இட்லி கடை’ படப்பிடிப்பு இன்னும் 20% இருப்பதால், ரிலீசாவதில் தாமதம் ஏற்படும் என்றும், புதிய ரிலீஸ் தேதி 10 நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று IPL முதல் போட்டி நடக்கிறது. மழைக்கு வாய்ப்பு இருப்பதால் போட்டி பாதிக்கப்படலாம் என செய்தி வெளியாகி வந்தது. இந்நிலையில் கொல்கத்தா வானிலை மையம் தரப்பில், மழையால் இன்றைய போட்டிக்கு அச்சுறுத்தல் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானம் தெளிவாக இருப்பதாகவும், சூரியன் தென்படுவதாகவும் அது கூறியுள்ளது. முதல் போட்டியில் கேகேஆர், ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் தொடர் கோலாகலமாக இன்று தொடங்க இருக்கிறது. இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணிகள்தான், முதன்முதலில் ஐபிஎல் 2008ல் தொடங்கியபோது முதல் போட்டியிலும் விளையாடின. அந்த போட்டியில், கொல்கத்தா அணியில் களமிறங்கிய மெக்கல்லம் ருத்ரதாண்டவம் ஆடி 158 ரன்கள் அடித்ததை மறக்க முடியுமா?… RCB அணியை 140 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி KKR வெற்றி பெற்றிருந்தது. இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார்?
பிரபல நடிகை பாவனா கடந்த 2018ஆம் ஆண்டில் கன்னட படத் தயாரிப்பாளர் நவீனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அண்மைக் காலமாக அவர் தனது கணவருடன் இருக்கும் புகைபடங்களை பதிவிடுவதில்லை. இதை வைத்து 2 பேரும் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்கு பதிலளித்துள்ள பாவனா, அதில் எந்த உண்மையும் இல்லை என்றும், சிலர் பொய் செய்திகளை பரப்பி வருகிறார்கள் என்றும் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
நம்ம ஊரில் தெரு நாய்களுக்கு சோறு போடவே ஆள் இருக்காது. ஆனால் தானேவில் நோய்வாய்ப்பட்டிருந்த தெரு நாய்க்கு பெரும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. கனடாவில் இருந்து தனது பெற்றோரை பார்க்க வந்த சலீல் நவ்காரே, பரிதாபமான நிலையில் இருந்த ராணி என்ற தெரு நாயை கண்டுள்ளார். உடனடியாக NGO மூலம் நாய்க்கு மருத்துவ சிகிச்சை அளித்தார். பின்னர் தேவையான அனுமதி பெற்று ராணியை தானேவில் இருந்து Toronto அழைத்துச் சென்றார்.
தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தியுள்ளார். மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்பதே நோக்கம்; இக்கூட்டத்தின் தீர்மானங்கள் PM மோடியை சந்தித்து அளிக்கப்படும் எனக் கூறிய அவர், தொகுதி மறுசீரமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்தாமல், மத்திய அரசிடம் இருந்து தெளிவான விளக்கங்களையே நாங்கள் எதிர்பார்க்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.
படித்ததுமே ‘கரண்ட் கட்’ நியூஸ் என நினைத்து விடாதீர்கள். இன்று ‘வேர்ல்டு எர்த் ஹவர்’ கடைபிடிக்கப்படுவதை ஒட்டி, உலகம் முழுவதும் இரவு 8.30 முதல் 9.30 வரை (இந்திய நேரப்படி) மின்சார விளக்குகளை அணைக்குமாறு உலக நிதியம் அமைப்பு (WWF) கேட்டுக்கொண்டுள்ளது. பருவநிலை மாறுபாடுக்கு தீர்வு காண வேண்டிய தருணம் இது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இக்கோரிக்கையை அது வைத்துள்ளது. யாரெல்லாம் இதை செய்வீர்கள்?
சென்னையில் நடந்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பேசிய CM ஸ்டாலின், நாடாளுமன்றத்தில் போதிய அரசியல் வலிமை இல்லாத காரணத்தினால் தான் மணிப்பூர் மாநிலத்தால் நீதிக்கான குரலை ஓங்கி ஒலிக்க முடியவில்லை என விளக்கினார். நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவது என்பதை, நமது அரசியல் வலிமை குறைப்பு என்ற கோணத்தில் பார்க்க வேண்டும். நமது உரிமைகள், எதிர்காலத்தின் நலன்களைப் பற்றியது என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தேவேந்திர சர்மா (66) உடல்நலக்குறைவால் காலமானார். ஒடிசாவின் ஆவுல் (Aul) தொகுதியில் 2014 – 2019 வரை சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். தேவேந்திர சர்மாவின் மறைவுக்கு ஒடிசா CM மோகன் மாஜி, காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.