India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
18வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா – பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேப்டன் ரஹானே 56 ரன்களும், நரேன் 44 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 174 ரன்கள் எடுத்துள்ளது. பெங்களூரு அணி தரப்பில் க்ருணால் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வெல்லப் போவது யார்?
ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அரசு மறைப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான வழக்கில், இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு கூறியுள்ளது தவறான தகவல் என்றும், 84 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் உயிரிழப்பை தடுக்க இந்த விளையாட்டிற்கு உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
ரேஷன் கடைகளுக்கு மாதந்தோறும் முதல் 2 வார வெள்ளி, 3,4 வாரங்களில் ஞாயிறு விடுமுறை ஆகும். அதன்படி அவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதேபோல், அரசு விடுமுறை நாட்களிலும் விடுமுறை வழங்கப்படுகிறது. இந்நிலையில், அடுத்தவாரம் மார்ச் 30 தெலுங்கு வருட பிறப்பு ஆகும். அன்றைய தினத்தில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை ஆகும். மேலும், மார்ச் 31 ரம்ஜான் பண்டிகை. ஆதலால் அன்றைய தினமும் விடுமுறை.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதையொட்டி, அங்கு கண்கவர் கலைநிகழ்ச்சி, 18ஆம் ஆண்டு கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றன. கேக் வெட்டும் நிகழ்ச்சியில் ராஜீவ் சுக்லா, கேகேஆர் உரிமையாளர் ஷாருக், இந்தி நடிகை திஷா பதானி, பாடகி ஸ்ரேயா கோஷல் உள்ளிட்டோர் கலந்து காெண்டனர். அப்போது நடிகை திஷா பதானியின் பேஷன் ஆடையை பற்றி நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.
செல்போனை எந்நேரமும் கைகளில் வைத்திருப்பது வழக்கமாகி விட்டது. சிலர் சாப்பிடும்போதும் கூட, செல்போனை பார்த்தபடியே சாப்பிடுவர். இது மோசமான பழக்கம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சாப்பாட்டை ரசித்து சாப்பிட்டால் ஜீரணம் சிறப்பாக இருக்கும் என்றும், போனை பார்த்தபடி சாப்பிட்டால் கவனச்சிதறல் ஏற்படும். இதனால் சத்துகுறைபாடு, உடல் பருமன் ஏற்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜகிரி என்பவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தவில்லை எனக்கூறி ஜாமினில் வரக்கூடிய பிடிவாரண்டை பிறப்பித்து நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை ஏப்.4ஆம் தேதிக்கு அவர் ஒத்திவைத்துள்ளார்.
ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி கேப்டன் ரஹானே அரைசதம் அடித்து அசத்தினார். இதையடுத்து சுனில் நரேனும் அரைசதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 44 ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இதையடுத்து, கேப்டன் ரஹானேவும் 56 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ரஹானே விக்கெட்டை குருணால் பாண்டியாவும், நரேன் விக்கெட்டை சலாமும் வீழ்த்தினர்.
ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா – பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து தடுமாறியது. இதனையடுத்து, களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் ரஹானே, பெங்களூரு அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 25 பந்துகளில் 51 ரன்கள் விளாசிய அவர், கொல்கத்தா அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தி வருகிறார்.
கிரகங்களின் ராஜாவான சூரியன் கடந்த 14-ம் தேதி மீன ராசிக்கு பெயர்ந்தார். இதனால் ஜோதிட சாஸ்திரப்படி நற்பலன்கள் பெறும் ராசிகள்: *ரிஷபம்: வருமானம் பெருகும். அலுவலகம், தொழில் சிறக்கும். வீடு தொடர்பான சிக்கல் தீரும் *மிதுனம்: மகிழ்ச்சி கூடும். நம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறக்கும். நிதிநிலை மேம்படும் *கடகம்: குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும், வேலையில் ஏற்றம், நிதிரீதியாக முன்னேற்றம் இருக்கும்.
ரயில் பயணத்தில் இரவு 10 மணிக்கு மேல் சிலவற்றை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றை தெரிந்து கொள்வோம். இரவு 10 மணிக்கு பிறகு, ரயில்களில் அனைத்து விளக்குகளையும் அணைத்து விட வேண்டும். சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சத்தமாக பேசவோ, வீடியோ பார்க்கவோ, பாட்டு கேட்கவோ கூடாது. விதிகள் மீறப்படும்போது, சம்பந்தப்பட்ட பயணிகள் புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.