news

News March 23, 2025

கோலி கணக்கில் இன்னொரு ரெக்கார்ட்

image

400 டி20 போட்டிகளில் விளையாடிய 3ஆவது இந்திய வீரராக கோலி உருவெடுத்துள்ளார். நேற்றைய KKR உடனான போட்டியின் போது, அவர் இந்த சாதனை படைத்துள்ளார். முன்னதாக ரோஹித் ஷர்மா 448, தினேஷ் கார்த்தி 412 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். அதேபோல், டி20யில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் கோலி 12,945 ரன்களுடன் 5ஆவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் 14,562 ரன்களுடன் கெயில் முதலிடத்தில் உள்ளார்.

News March 23, 2025

பிரச்னைகளை திசை திருப்பவே விளம்பர அரசியல்: ஜி.கே.வாசன்

image

சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை திசைதிருப்பவே, அண்டை மாநில முதல்வர்களுடன் CM ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார். தொகுதி மறுவரையரை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத போது, தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என எப்படி திமுக அரசுக்கு தெரியும் எனவும், அறிவிக்கப்படாததை ஒன்றை வைத்து திமுக விளம்பர அரசியல் செய்வதாகவும் அவர் சாடியுள்ளார்.

News March 23, 2025

தமிழகத்தில் இன்று பரவலாக மழைக்கு வாய்ப்பு

image

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (மார்ச் 23) மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தூத்துக்குடி, நெல்லை, குமரி, திருவண்ணாமலை, விருதுநகர், தென்காசி, நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் நேற்று முதலே மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?

News March 23, 2025

மெஹுல் சோக்சியை இந்தியா கொண்டு வர நடவடிக்கை

image

வங்கியில் ₹13,500 கோடி கடன் வாங்கி ஏப்பம் விட்ட தொழிலதிபர் மெஹுல் சோக்சியை நாடு கடத்த அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர் தனது மனைவியுடன் தற்போது பெல்ஜியமில் வசித்து வருகிறார். கடனை வாங்கிவிட்டு நாட்டைவிட்டு வெளியேறிய சோக்சி, கரிபீயன் தீவுகளில் வசித்ததாக நம்பப்பட்டது. மேலும், தற்போது பெல்ஜியத்தில் இருந்து ஸ்விட்சர்லாந்துக்கு செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News March 23, 2025

வெற்றிக் கணக்கை தொடங்குமா மஞ்சள் படை?

image

சென்னையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோத உள்ளன. கிட்டத்தட்ட ஒரு ஆண்டு கழித்து தோனி களமிறங்க உள்ளதால், அவரது ஆட்டத்தை காண ரசிகர்கள் வெறித்தனத்துடன் காத்திருக்கின்றனர். அதேபோல், இந்த ஒரு போட்டிக்கு மட்டும் மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட உள்ளார். இந்த போட்டியில் பாண்டியா விளையாடமாட்டார்.

News March 23, 2025

‘ஜனநாயகன்’ படத்தின் பிசினஸ் ஸ்டார்ட்

image

‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமையை செவன் ஸ்க்ரீன் நிறுவனம் ₹100 கோடிக்கு வாங்கியிருப்பதாகவும், வெளிநாட்டு உரிமையை பார்ஸ் நிறுவனம் ₹78 கோடி கைப்பற்றியிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளுக்கான வியாபாரமும் சூடுபிடித்துள்ளதாம்.

News March 23, 2025

புத்திசாலி பெண்களுக்கு இப்படி ஒரு சிக்கலா?

image

பொதுவாக ஆண்களுக்கு மணப்பெண் கிடைப்பது தான் கடினம் சொல்வார்கள். ஆனால் உண்மையில் புத்திசாலி பெண்களுக்கு வரன் கிடைப்பதுதான் மிகவும் கஷ்டம். ஏன் என்றால் அவர்கள் Smart ஆன ஆண்களையே தேடுவார்கள். அதேசமயம் ஆண்களோ தன்னைவிட அறிவாளிகளை விரும்புவது கிடையாது. இதனால் புத்திசாலி பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பது
சிக்கல். புத்திசாலிகள் careerக்கு முக்கித்துவம் கொடுப்பதால் காதலிலும் விழுவதில்லை.

News March 23, 2025

வாரம் 70 மணி நேரம் வேலை.. அதில் என்ன தப்பு?

image

வாரம் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என தனது கணவர் நாராயண மூர்த்தி சொன்னதற்கு அவரது மனைவி சுதா மூர்த்தி பதிலளித்துள்ளார். தனது கணவர் அப்படி நேரம் பார்க்காமல் உழைத்ததால்தான் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை உருவாக்க முடிந்ததாகவும், இன்ஃபோசிஸை இவ்வளவு பெரிய நிறுவனமாக மாற்றிய மந்திரக்கோல் கடின உழைப்புதான் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஆர்வத்துடன் வேலை செய்தால் நேரம் தெரியாது எனவும் கூறியுள்ளார்.

News March 23, 2025

தந்தை பெரியார் பொன்மொழிகள்

image

*ஒருவன் தன் தேவைக்கு மேலே எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டியவை கிடைத்துவிடும். *முன்நோக்கிச் செல்லும் போது பணிவாக இரு. ஒருவேளை பின்நோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள். *முட்டாள்தனம் சுலபத்தில் தீப்பிடிக்கக் கூடியது. அறிவு சற்று தீப்பிடிக்க தாமதமாகும். *ஓய்வும், சலிப்பும் தற்கொலைக்கு சமமானது. *கல்வி, சுயமரியாதை, பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.

News March 23, 2025

கலவரக்காரர்களிடம் இருந்தே காசு வசூல்

image

நாக்பூர் கலவரக்காரர்களிடம் இருந்தே, பொதுச் சொத்துக்கள் சேதமடைந்ததற்கான காசு வசூல் செய்யப்படும் என மகாராஷ்டிரா CM பட்னவிஸ் தெரிவித்துள்ளார். பணம் கொடுக்காத பட்சத்தில், அவர்களின் சொத்துக்கள் விற்கப்படும் எனவும், வீடுகளை இடிக்க புல்டோசர்கள் கூட பயன்படுத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். முகலாய மன்னர் அவுரங்கசீப் சமாதியை இடிக்க இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது கலவரம் வெடித்தது.

error: Content is protected !!