news

News March 23, 2025

போப் பிரான்சிஸ் இன்று டிஸ்சார்ஜ்?

image

கத்தோலிக்க மதத் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நிமோனியாவால் பாதிக்கப்பட்ட போப் பிரான்சிஸூக்கு ஒரு மாதத்திற்கு மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார். எனினும் 2 மாதங்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

News March 23, 2025

இந்தியாவிற்கு எதற்கு கடற்படை? சீமான் ஆவேசம்

image

இலங்கை கடற்படையிடம் இருந்து குடிமக்களை காப்பாற்ற திறனற்ற இந்தியாவிற்கு எதற்கு கடற்படை என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். உலகில் எந்த நாட்டு ராணுவமும், தம் சொந்த நாட்டு மீனவரை சுட்டுக் கொல்வதை வேடிக்கை பார்க்குமா எனவும் அவர் வினவியுள்ளார். குஜராத் மீனவரை பாகிஸ்தான் சுட்டுக் கொன்றால், கொலை வழக்கு பதிந்து ஐநா வரை செல்லும் ஆட்சியாளர்கள், தமிழக மீனவர்கள் என்றால் அமைதி காப்பதாகவும் சாடியுள்ளார்.

News March 23, 2025

BREAKING: பெட்ரோல், டீசல் விலை குறைந்தது

image

சென்னையில் இன்று (மார்ச் 23) பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்துள்ளது. அந்த வகையில், பெட்ரோல் ஒரு லிட்டர் ₹100.80க்கும், டீசல் ₹92.39க்கும் விற்பனையாகிறது. நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் தலா 0.13 காசுகள் அதிகரித்திருந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்தது. இது வாகன ஓட்டிகளை சற்று நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது. உங்கள் ஊரில் பெட்ரோல், டீசல் விலையை கமெண்ட்ல சொல்லுங்க..

News March 23, 2025

அட்லி படத்தில் அல்லு அர்ஜுனுக்கு டபுள் ரோல்?

image

அட்லி இயக்கும் படத்தில் அல்லு அர்ஜுன் டபுள் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒரு கேரக்டர் பயங்கர நெகட்டிவாக இருக்கும் எனவும், அதுவே படத்தின் வில்லன் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் ஷூட்டிங்கை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

News March 23, 2025

CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

image

CUET – UG நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களிலும் கலை, அறிவியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று (மார்ச் 22) நிறைவடைந்தது. இந்நிலையில், நாளை (மார்ச் 24) இரவு 11.50 வரை <>cuet.nta.nic.in<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 23, 2025

நீதிபதி வர்மாவை விசாரிக்க கமிட்டி

image

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதை விசாரிக்க, 3 ஐகோர்ட் நீதிபதிகள் அடங்கிய குழுவை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமைத்துள்ளார். இந்த விசாரணை காலத்தில் வர்மா, எந்த சட்டப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், வெளிப்படைத்தன்மைகாக, இந்த விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் பதிவேற்றவும் ஆணையிட்டுள்ளார்.

News March 23, 2025

இன்று தவாகவில் இணையும் வெற்றிக்குமரன்

image

நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு அடுத்தப்படியாக 2ஆம் கட்ட தலைவராக மக்களுக்கு மிகவும் அறிமுகமான மதுரை வெற்றிக்குமரன் இன்று தவாகவில் இணைகிறார். மதுரையில் நடக்கும் இணைப்பு விழாவில் வேல்முருகன் முன்னிலையில், வெற்றிக்குமரன் மற்றும் நாதகவில் இருந்து விலகிய பலர் தவாகவில் ஐக்கியமாக உள்ளனர். கடந்த வாரம் ஜெகதீசன் உள்ளிட்டோர் அக்கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

News March 23, 2025

பணக்கார ரயில்வே ஸ்டேஷன் எது தெரியுமா?

image

நாட்டில் அதிக வருவாய் ஈட்டும் ரயில்வே ஸ்டேஷன் எது தெரியுமா? தலைநகர் புதுடெல்லி தான். 2023–24 நிதியாண்டில் ₹3,337 கோடியை இந்த ரயில்வே ஸ்டேஷன் வருவாயாக ஈட்டியிருக்கிறது. மேலும் அந்த ஆண்டு 39,362,272 பயணிகளை கையாண்டு இருக்கிறது. இந்தப் பட்டியலில் ₹1,692 கோடி வருவாய் ஈட்டி, ஹவுரா ரயில்வே ஸ்டேஷன் 2வது இடத்தில் இருக்கிறது. 3வது, 4வது இடங்களில் முறையே சென்னை சென்ட்ரல், விஜயவாடா இடம்பிடித்துள்ளன.

News March 23, 2025

2 வாரத்தில் பாம்பன் ரயில் பாலம் திறப்பு

image

பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலம் 2 வாரத்தில் திறக்கப்படவுள்ளது. பாலத்தை ஆய்வு செய்த தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் இந்த தகவலை வெளியிட்டார். திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்றும் பழைய ரயில் பாலத்தை அகற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். புதிய பாலம் திறந்த பிறகே, ராமேஸ்வரம் ரயில் நிலைய பணிகளும் முடிவடையும் என்றும் கூறினார்.

News March 23, 2025

ஏப்ரல் 1க்கு முன்பாக புதிய டோல் கொள்கை

image

நியாயமான சலுகைகளுடன் கூடிய புதிய டோல் கொள்கையை ஏப்ரல் 1ஆம் தேதிக்குள் அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கட்டணம் குறித்த கவலைகளை தீர்ப்பதற்கும், சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். மேலும், 2023-24ஆம் ஆண்டில் ₹64,809 கோடி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், இது முந்தய ஆண்டை விட 35% அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!