news

News March 23, 2025

வீல் சேரில் இருந்தாலும் விளையாடுவேன்.. தோனி

image

அன்கேப்டு வீரராக CSK-வில் சேர்க்கப்பட்டுள்ள தல தோனி (43) மிக வயதான வீரராக இருக்கிறார். அவர் இந்த IPL தொடருக்கு பின் ஓய்வு பெறுவார் என கடந்த சில நாள்களாக பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில், நான் விரும்பும் வரை CSK அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன். காயம் அடைந்து நான் சக்கர நாற்காலியில் இருந்தாலும், என்னை இழுத்து வந்து விளையாட வைத்துவிடுவார்கள் என்று ஓய்வு குறித்த செய்திக்கு தோனி பதிலடி கொடுத்துள்ளார்.

News March 23, 2025

2013 முதல் தொடரும் சோகம்… MI-ன் வரலாறு மாறுமா?

image

IPL-ல் அதிக ஃபேன்ஸ் கொண்டது சென்னை, மும்பை அணிகள்தான். இந்த இரு அணிகளும் இன்று இரவு பலப்பரீட்சை நடத்த உள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஆனால், மும்பை அணிக்கு ஒரு சோக வரலாறு தொடர்கிறது. 2013ம் ஆண்டில் இருந்து, முதல் போட்டியில் அந்த அணி வென்றதே இல்லை. அதனால், சேப்பாக்கத்தில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற மும்பை அணி முனைப்பு காட்டும். இன்று வெல்லப் போவது யார்? உங்கள் கணிப்பு என்ன?

News March 23, 2025

கேரள மாநில பாஜக தலைவர் மாற்றம்!

image

கேரள மாநில BJP தலைவராக Ex மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் அனுபவம் கொண்ட அவர் மூலம் கேரளாவில் கட்சியை வளர்த்தெடுக்க தேசிய தலைமை புதிய உத்தியைக் கையில் எடுத்துள்ளது. அங்கு 5 ஆண்டுகளாக தலைவராக இருந்த கே.சுரேந்திரன் மாற்றப்பட்டது போல் தமிழகத்திலும் தலைவர் மாற்றம் நிகழுமா அல்லது அண்ணாமலையே பதவியில் நீடிப்பாரா உங்கள் கருத்து என்ன?

News March 23, 2025

யார் ஆட்சியில் இருந்தாலும் போராடுவோம்: கம்யூ.,

image

மக்களை பாதிக்கிற எந்த விஷயமாக இருந்தாலும், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி போராட்டத்தை முன்னெடுக்கத்தான் செய்யும். யார் ஆட்சி (கூட்டணி திமுக ஆட்சி) என பார்க்க மாட்டோம் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மா.கம்யூ., கட்சி கூடுதல் தொகுதிகளில் போட்டியிடும். அதை நோக்கியே எங்கள் செயல்பாடுகள் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

News March 23, 2025

CSK ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஷாக்?

image

ரசிகர்கள் நாடி நரம்பெல்லாம் வெறி பிடித்து போய் CSK vs MI மேட்ச் பார்க்க காத்திருக்கிறார்கள். ஆனால், ரசிகர்களின் ஆசையில் மண் அள்ளிப்போட மழை காத்திருக்கிறது. ஆம், இன்றைய தினம் சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அவ்வாறு மழை குறுக்கிட்டு கொஞ்சம் ஓவர்கள் குறைந்தாலும் ரசிகர்களுக்கு அது ஏமாற்றம் தானே. என்ன நடக்கப் போகுதோ!

News March 23, 2025

‘இன்னொன்னுதான்னே இது’ காமெடி கிங்கிற்கு இன்று பர்த்டே

image

ஒரே ஒரு வாழைப்பழத்தை வைத்து தமிழகத்தை கலக்கிய நடிகர் செந்திலுக்கு இன்று 74வது பர்த்டே. அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு, கவுண்டமணியை வறுத்தெடுப்பது அவருக்கு அல்வா சாப்பிடுவதை போல. அடி வாங்கியே மக்களின் அடி மனசு வரை சென்று இடம் பிடித்து விட்டார். அவரின் பர்த்டேவில் ஒன்னு நல்லா புரிஞ்சுக்கோங்க, Less டென்ஷன், more work! more work, less டென்ஷன்! உங்களுக்கு பிடிச்ச அவரின் காமெடியை சொல்லுங்க!

News March 23, 2025

ஈரக்கையுடன் போன் சார்ஜ் போடுறீங்களா? உஷார் மக்களே!

image

மக்களே, கரண்ட் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சென்னையில் 9வது படிக்கும் மாணவி அனிதா, ஈரக்கையுடன் செல்போனுக்கு சார்ஜ் போட முயன்றுள்ளார். அப்போது அவரை ஹைவோல்டேஜ் மின்சாரம் தாக்கியுள்ளது ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்ற போது, மாணவி உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சிறிய கவனக்குறைவு ஒரு உயிரை பறித்து விட்டது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் அதீத கவனத்துடன் இருங்க மக்களே!

News March 23, 2025

கணவன் நாக்கை கடித்து துப்பிய மனைவி!

image

குடும்பப் பிரச்னையில் திருமணமான 45 நாளில் கணவனின் நாக்கை மனைவி கடித்து துப்பிய சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தானின் ஜலவர் அருகே நடந்த இந்த இச்சம்பவத்திற்கு பிறகு இளம்பெண் ரவீனா, தற்கொலைக்கு முயன்று ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். தற்போது, கணவன் கணையால் ஒரு வார்டிலும், மனைவி ரவீனா ஒரு வார்டிலும் சிகிச்சையில் உள்ளனர். கணவன் – மனைவிக்குள் இவ்வளவு கோபம் நல்லதல்ல என பலரும் கமெண்ட் செய்கின்றனர்.

News March 23, 2025

இபிஎஸ்-க்கு பவன் கல்யாண் ஆதரவு

image

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக வந்தால் பெரும் மகிழ்ச்சி என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் வலிமையான தலைவராக இருக்கிறார் என்று புகழாரம் சூட்டிய அவர், எம்ஜிஆர் தோற்றுவித்த அதிமுக சிறப்பாக இருக்க வேண்டும். NDA கூட்டணியில் ஏற்கெனவே இடம்பெற்ற அதிமுக, மீண்டும் இணையலாமே. அதில் எந்த பிரச்னையும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

News March 23, 2025

ஜூன் மாத தரிசன டிக்கெட்: நாளை புக்கிங்

image

திருப்பதி ஏழுமலையானை வரும் ஜூன் மாதம் தரிசிப்பதற்கான ₹300 டிக்கெட் விற்பனை நாளை காலை 10 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது. தங்கும் அறைகளுக்கான முன்பதிவு மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. குழந்தைகளின் தேர்வுகள் முடிந்து ஏழுமலையானை தரிசிக்க காத்திருக்கும் பக்தர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும். இதற்கான <>லிங்க்கையும்<<>> கொடுத்துள்ளோம்.

error: Content is protected !!