India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகிறது. ஆனால் உக்ரைனை முழுமையாக அழித்தே தீருவேன் என ரஷ்யா தொடந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று கீவ்வில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 5 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். உக்ரைன் அனுப்பிய 147 ட்ரோன்களில் 97 சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் தரப்பில் சொல்லப்படுகிறது.
சின்னத்திரையில் தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜாவும் பிகில் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கார்த்திக் என்பவருடன் திருமணமாகி, சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கமலின் தீவிரமான ரசிகரான ரோபோ குடும்பத்துடன் அவரை நேரில் சந்தித்தார். அப்போது குழந்தையை கொஞ்சி விளையாடிய கமல், ‘நட்சத்திரன்’ என்று பெயர் சூட்டினார்.
வீட்டு உபயோகத்திற்கு ஆண்டுக்கு 15 சிலிண்டர் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மேற்கொண்டு தேவைப்பட்டால் அதற்கான உரிய காரணத்தை கடிதமாக தந்து பெற்றுக் கொள்ளலாம். சிலிண்டர்கள் முறைகேடாக பயன்படுத்துவதை தவிர்க்கவே இந்த கட்டுப்பாடு என்றும் 15 சிலிண்டருக்கு மேல் பதிவு செய்பவர்களுக்கு SMSல் தகவல் அளிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
SRH அணியின் ஓனர் காவ்யா மாறன் தான் தற்போது டாப் ட்ரெண்டிங். மைதானத்தில் அவரைக் காணவே ஒரு ரசிகர்கள் கூட்டம் படையெடுக்கிறது. இன்று SRH அணி, 286 ரன்களை விளாசி சாதித்த போதிலும், ட்ரெண்டிங் என்னவோ காவ்யா தான். SRH அணி ஜெர்சியில், கூலர்ஸ் ஒன்றை அணிந்து கூலாக மைதானத்தில் அமர்ந்து அணியை உற்சாகப்படுத்த அவரைப் பார்த்து ரசிகர்களை குஷியாகி இருக்கிறார்கள்.
வரிசையாக 7 பெண் பிள்ளைகள். ஊரில் மக்கள், இது சாபம்’ எனவும், பெண்களின் படிப்பிற்கு செலவழிக்க வேண்டாம் என்றும் அட்வைஸ் செய்தனர். ஆனால், அவர்கள் சொன்ன சாபத்தையே சாதனையாக மாற்றி இருக்கிறார் பீகாரை சேர்ந்த மாவுமில் ஓனர் ஒருவர். ஏழ்மை சோதித்த போதிலும் மனம் தளராத அவர், கடினமாக உழைத்து இன்று தனது 7 மகள்களையும் அரசின் காவல் பணியில் சேர்த்துள்ளார். வசைபாடியவர்கள், வாயடைத்து நிற்கின்றனர்.
உ.பி.யில் காதலனோடு சேர்ந்து கணவனை கொடூரமாக <<15822875>>கொலை செய்த<<>> மனைவி முஸ்கான், தற்போது சிறை அதிகாரிகளையே அலற வைத்து வருகிறார். சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதலாக, உணவை தவிர்த்து வரும் அவர், தனக்கு கஞ்சா அல்லது ஹெராயினை கொண்டு வருமாறு அடம்பிடித்து வருகிறார். அதே சமயத்தில், காதலன் சாஹில் சிறையில் அமைதியாக இருப்பதுடன், அவ்வப்போது போதைப்பொருள் தருமாறு போலீசாரிடம் கெஞ்சுவதாகவும் கூறப்படுகிறது.
டெல்லி MLA தேர்தலில் AAP தோல்வியடைந்த நிலையில், அக்கட்சி ஆட்சி செய்துவரும் பஞ்சாப்பில் கெஜ்ரிவால் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அம்மாநில அமைச்சரவையில் வலுவான முகங்களை சேர்க்க அவர் திட்டமிட்டுள்ளார். அண்மையில், 2 பஞ்சாப் அமைச்சர்கள் தங்களது செயல்பாடுகள் குறித்த ரிப்போர்ட் கார்டுடன் டெல்லியில் கெஜ்ரிவாலை சந்தித்து பேசியுள்ளனர். இதனால், அமைச்சரவை மாற்றம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் CSK, MI அணிகள் மோதினால் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். சேப்பாக்கத்தில் இன்றிரவு CSK vs MI போட்டி நடைபெற உள்ளது. தல தோனியின் தரிசனத்திற்காக இப்போதே ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். அனிருத் இசை நிகழ்ச்சியுடன் போட்டி கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. இரவு 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு 7.30 மணிக்கு போட்டி தொடங்கும். விசில் போட ரெடியா?
SRH அணி, தனது முதல் போட்டியிலேயே சாதனை படைத்துள்ளது. 286/6 ரன்களை குவித்து அந்த அணி, IPLல் அடிக்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையை படைத்துள்ளது. இதுவரை ஒரு IPL போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 287/3. இதையும் SRH தான் அடித்துள்ளது. இந்த போட்டியில், இஷான் கிஷன் 106(47), ட்ராவிஸ் ஹெட் 67(31), கிளாசன் 34(14) என அதிரடியாக ரன் குவித்தனர். இந்த ஸ்கோரை RR அடிக்குமா?
நாடு முழுக்க விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு 10 மடங்கு அபராதம் விதிக்கும் மத்திய அரசின் புதிய விதிமுறைகள் மார்ச் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, போதையில் வாகனம் ஓட்டினால் ₹10,000 + லைசன்ஸ் 3 மாதம் ரத்து, ஹெல்மெட் அணியவில்லை எனில் ₹1,000, வாகனம் ஓட்டுகையில் மொபைல் பயன்படுத்தினால் ₹5,000, லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ₹5,000, டிரிபிள்ஸ் போனால் ₹1,000 அபராதம் விதிக்கப்படும். SHARE IT!
Sorry, no posts matched your criteria.