India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மளிகை பொருட்களை போல இனி நிலத்தையும் 10 நிமிடங்களில் வாங்கலாம். ZEPTO நிறுவனம், ரியல் எஸ்டேட்டிலும் கால் பதித்துள்ளது. அதாவது, தனியார் லேண்ட் டெவலப்பர் நிறுவனத்தோடு இணைந்து இந்த வசதியை தொடங்கவுள்ளது Zepto. ஏற்கெனவே 10 நிமிட மளிகை டெலிவரிக்கு எதிர்ப்புகள் இருக்கும் நிலையில் இந்த புதிய முன்னெடுப்பு என்ன மாதிரியான வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும். உங்கள் கருத்து?
தூய்மை பணியாளர்களின் பணி நிரந்தர விவகாரத்தில் திமுக கூட்டணிக்குள் மோதல் நிலவுகிறது. குப்பை அள்ளுபவர்களை பணி நிரந்தரம் செய்து அவர்களை குப்பை மட்டுமே அள்ள சொல்வதில் உடன்பாடு இல்லை என திருமாவளவன் தெரிவித்திருந்தார். இதனை எதிர்த்த சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், பணி நிரந்தரம் என்பது சட்டப்பூர்வமான கோரிக்கை என வலியுறுத்தியுள்ளார். இதனால், கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. யாருடைய கருத்து சரி?
பிரபல ராப் பாடகர் வேடன் மீது மேலும் இரு பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை அவர்கள் நேரடியாக கேரள CM பினராயி விஜயன் மற்றும் அம்மாநில DGP ஆகியோரிடம் அளித்திருக்கின்றனர். ஹிரன்தாஸ் முரளி என்ற வேடன் மீது ஏற்கெனவே பெண் டாக்டர் ஒருவர் தொடுத்த வழக்கில் அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். இந்த வழக்கில் அவர் கொடுத்த ஜாமின் மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
வாக்கு திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்திருந்த நிலையில், மேலும் பல கேள்விகளை அடுக்கியுள்ளார் CM ஸ்டாலின். *வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்? *ஆதாரை ஆவணமாக ஏற்கத் தேர்தல் ஆணையத்தை தடுப்பது எது?*எத்தனை இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதைச் சொல்லும் தரவுகள் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய்யின் தவெக கொடிக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுத்துள்ளது. தங்கள் கொடியை போல் இருக்கும் தவெக கொடிக்கு தடை விதிக்க கோரி தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை வழக்குத் தொடுத்தது. இதை விசாரித்த ஐகோர்ட், இரு கொடிகளையும் ஒப்பிடுகையில் TVK கொடி முற்றிலும் வேறுபாடானது; TVK கொடியில் மஞ்சள் நிறத்தில் யானை, வாகை மலர், 28 நட்சத்திரங்கள் உள்ளதால் மக்களிடம் எந்த குழப்பமும் இல்லை என தெரிவித்துள்ளது.
ராமதாஸ் தலைமையில் நேற்று (ஆக., 18) நடந்த பாமக சிறப்பு பொதுக்குழுவில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இந்நிலையில் அதற்கு முறையான விளக்கமளிக்குமாறு அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு. இதற்கு விளக்கமளிக்க அன்புமணி மறுக்கும் பட்சத்தில், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படலாம் எனவும் பாமக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தேசிய தம்பதியர் தினத்தில் உங்களின் பார்ட்னருடன் நெருக்கம் அதிகரிக்க 5 டிப்ஸ்.
✦நம்பிக்கையும் பொறுமையும் மிக அவசியம்.
✦எதையும் மறைக்காமல் ஒளிவு மறைவின்றி பேசுங்கள்.
✦பிறந்தநாள், திருமண நாள் போன்றவற்றை கொண்டாட தவறாதீர்கள்.
✦எவ்வளவு பிஸியாக இருந்தாலும், இருவரும் ஒன்றாக நேரம் செலவிடுங்கள்.
✦கடந்த கால மகிழ்ச்சியான தருணங்களை நினைவு கூருங்கள். இது உங்களுக்குள் இருக்கும் இடைவெளியை குறைக்கும்.
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாள்களுக்கு மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளது. இதனால், இன்று கோவை, நீலகிரியில் கனமழை வெளுத்து வாங்க வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 40 கிமீ – 50 கிமீ வரை பலத்த தரைக்காற்று வீசும் என்றும், சென்னையில் அடுத்த 2 நாள்களுக்கு மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
WhastApp-ல் புதுவித மோசடி ஒன்று நடந்துவருகிறது. டிஜிட்டல் கொள்ளையர்கள் வங்கி பணியாளர்கள் போல நடித்து உங்கள் Bank Account-ல் பிரச்னை இருக்கிறது என்று கூறி SCREEN SHARE செய்ய சொல்கின்றனர். பிறகு, SCREEN SHARE சரியாக வரவில்லை எனக்கூறி WhastApp video call-ல் வர வைக்கின்றனர். பின்னர் உங்களுக்கு வரும் OTP, UPI Password ஆகியவற்றை தெரிந்துகொண்டு உங்கள் பணத்தை திருடுகின்றனர். உஷார் மக்களே..
அரசியலைத் தாண்டி நண்பர், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் CP ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக வைகோ கூறியுள்ளார். கொங்கு பகுதியின் பிரதிநிதியாக அறியப்படும் அவர், ஜனாதிபதியாகக் கூட உயரலாம் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் INDIA கூட்டணிக்கு தலைமை தாங்கும் திமுக என்ன முடிவெடுக்கிறதோ, அதை மதிமுக ஏற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.