India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தினமும் 1 மணி நேரம் டிவி பார்த்தால் மனிதர்களின் ஆயுள்காலம் 22 நிமிடங்கள் குறையும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். தினமும் தொடர்ந்து 6 மணி நேரம் டிவி பார்ப்பவர்கள், டிவி பார்க்காதவர்களைவிட 5 ஆண்டுகள் குறைவாக வாழ்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே ஒரே இடத்தில் உட்கார்ந்து டிவி பார்ப்பதை விட, உடற்பயிற்சி உள்ளிட்ட உடல் உழைப்பு தரும் பணிகளைச் செய்ய டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் – சல்மான்கான் கூட்டணியில் உருவாகியுள்ள சிக்கந்தர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 3.37 நிமிடங்கள் நீளம் கொண்ட ட்ரெய்லரில் ஆக்ஷன், சென்டிமென்ட், காதல் என அனைத்து அம்சங்களும் கொண்ட கலவையாக உள்ளது. படம் சமூக கருத்தை கையில் எடுத்திருப்பதை காட்சிகள் உணர்த்துகின்றன. படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வரும் மார்ச் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.
நாட்டின் தலைசிறந்த விவசாய – தோட்டக்கலை விஞ்ஞானிகளில் ஒருவரான கிருஷ்ணலால் சத்தா (88) உடல்நலக் குறைவால் காலமானார். பத்மஸ்ரீ விருதுபெற்ற இவர் விவசாயம் தொடர்பாக 30-க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தேசிய விவசாய ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய இவர் திட்ட கமிஷன், தேசிய பாமாயில் சாகுபடி கமிட்டி, ஆர்கானிக் பொருட்களுக்கான தேசிய வழிகாட்டுதல் குழு எனப் பல்வேறு அமைப்புகள் மூலம் பங்காற்றியுள்ளார். RIP
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். வருகிற 30ம் தேதி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்கின்றனர்.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கேம்பா கோலாவை சமீபத்தில் சந்தைப்படுத்தியது. 200ML சர்க்கரை இல்லா கேம்பா ₹10க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது Coca cola,pepsi நிறுவனங்களுக்கு சர்க்கரை இல்லாத 200ML பாட்டில்களை ₹10க்கு களமிறங்கியுள்ளனர். மிகப்பெரிய நிறுவனங்களான Coca Cola, Pepsi தற்போது அம்பானிக்கு பெரும் தலைவலியாய் மாறியுள்ளன.
சுக்கிர பகவானும், சனி பகவானும் வரும் 29ஆம் தேதி மீன ராசிக்கு செல்கின்றனர். இந்த பெயர்ச்சியால் மீனம், மகரம், ரிஷபம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது. சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். எந்த விஷயத்தை தொட்டாலும் லாபம் கொட்டும். நோய், நொடிகள் நீங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் காண்பீர்கள். வெளிநாட்டு பயணங்களால் நன்மை உண்டு.
தேர்தல் ஆணையம் ஒரு தோல்வியடைந்த நிறுவனம் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் விமர்சித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் கடமைகளுக்கு ஏற்ப அதன் செயல்பாடுகள் இல்லை எனவும், நாட்டின் பெருவாரியான மக்கள் அதன் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். போலி வாக்காளர் சேர்ப்பு விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை ஏற்க முடியாதது எனவும் அவர் சாடியுள்ளார்.
பாம்பன் புதிய ரயில் பாலம் 2 வாரத்தில் திறக்கப்படும் என தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் கூறியுள்ளார். இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் எனவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். புதிய பாலம் திறக்கப்பட்ட பிறகே ராமேஸ்வரம் ரயில் நிலைய பணிகள் நிறைவடையும் என்றும், பழைய பாலத்தை அகற்றுவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
திருமண உறவை மீறி, மற்றொருவருடன் உறவு ஏற்பட 90% காரணம் செக்ஸ் இல்லை; அவர்களுக்கு தேவைப்படும் மனரீதியான ஆறுதல் தான் என்கிறது ஆய்வு. இதுதவிர, போரடித்தல், உறவு தவறில்லை என்று நினைப்பது, கணவன்- மனைவி புரிதலின்மை, புதிதாக ஏற்படும் காதல், பொதுவான விருப்பங்கள் இல்லாதது என பல காரணங்களும் உள்ளன. உடல் தேவைக்காக ஏற்படும் உறவு வெறும் 10% தானாம். 10 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
பீகாரில் பெண் டாக்டர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் பாட்னாவில் உள்ள ஏசியா தனியார் ஹாஸ்பிடல் இயக்குநராக இருக்கும் ஷுர்பி ராஜை (35), மர்மநபர்கள் 6 பேர் சரமாரியாக சுட்டுக் கொன்றுள்ளனர். நோயாளிகளை போல நடித்து அவர்கள் இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.