India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்றைக்கு இளம்வயதினர் பலர் மாரடைப்பால் உயிரிழப்பது குறித்து உலக புகழ்பெற்ற இதய நோய் மருத்துவர் ஜோஸ் சாக்கோ கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படுவதாக ஒரு தவறான கருத்து உள்ளது. மனித உடலில் கொரோனா வைரஸ் சில மாற்றங்களை செய்துள்ளது. ரத்த நாளங்களில் அது வீக்கங்களை ஏற்படுத்துகிறது. இதுவே, மாரடைப்பு தற்போது அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கலாம் என ஜோஸ் சாக்கோ தெரிவித்தார்.
➤மேஷம் – நற்செயல் ➤ரிஷபம் – எதிர்ப்பு ➤மிதுனம் – வெற்றி ➤கடகம் – கவலை ➤சிம்மம் – பாராட்டு ➤கன்னி – நன்மை ➤துலாம் – தடங்கல் ➤விருச்சிகம் – கவலை ➤தனுசு – தாமதம் ➤மகரம் – மேன்மை ➤கும்பம் – வரவு ➤மீனம் – முயற்சி.
MI அணியை எளிதில் வீழ்த்தி 18வது ஐபிஎல் சீசனை CSK அணி வெற்றியுடன் தொடங்கி உள்ளது. முதலில் பேட்டிங் செய்த MI அணியில் ரோஹித்(0), கேப்டன் சூர்யகுமார் யாதவ்(29), திலக் வர்மா(31) உட்பட முன்னணி வீரர்கள் அனைவரும் பெரியளவில் சோபிக்க தவறினர். CSK வீரர் நூர் முகமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 156 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய CSK அணி, ருதுராஜ், ரச்சினின் அரை சதத்தால் வெற்றி பெற்றது.
சம்மர் தொடங்கியுள்ள நிலையில் வேகாத வெயிலில் படாத பாடுபடும் டிராஃபிக் போலீசுக்காக சென்னை ஆவடியில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெயிலில் வேலை பார்க்கும் அவர்களுக்கு ஏசி ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது. தனியார் பங்களிப்புடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 850 கிராம் எடையுள்ள இந்த ஹெல்மெட்டின் மதிப்பு ரூ.20,000 ஆகும். இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 8 மணிநேரத்திற்கு வேலை செய்யுமாம். சூப்பர்ல!
நியூசிலாந்துக்கு எதிரான 4வது T20Iல் பாகிஸ்தான் 115 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைய, அந்நாட்டு ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இன்று பாகிஸ்தான் தினம். அதாவது, பாகிஸ்தானின் முதல் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம். இன்று கூட ஒரு போட்டியை வென்று நாட்டிற்கு கவுரவம் சேர்க்க முடியாதா என ரசிகர்கள் கொந்தளிக்கிறார்கள். தொடர்ந்து அடிமேல் அடி வாங்கும் பாகிஸ்தானின் நிலைக்கு காரணம் என்ன?
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் நாம் தூங்கும் நேரமே குறைந்துவிட்டது. முடிந்தவரை தூங்க முயற்சிக்கிறோம். ஆனால், இரவு 11 மணிக்கு மேல் விழித்திருப்பது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் டாக்டர்கள். லேட்டாக தூங்குவதால் உங்கள் தூக்கத்தின் தரம் பாதிக்கும், ஜீரணமும் சரியாக இருக்காது, தூங்கி எழுந்த பின்பும் சோர்வாக உணர்வீர்கள். நோய் எதிர்ப்பு சக்தியையும் இது மிகவும் பாதிக்கும் என எச்சரிக்கின்றனர்.
எம்ஐ அணியின் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்த சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், 26 பந்துகளில் 53 ரன்கள் குவித்து அசத்தினார். 6 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் அதிரடியாக அவர் அரைசதத்தை கடந்த நிலையில், விக்னேஷ் புதுர் ஓவரில் ஆட்டமிழந்தார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 155 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சிஎஸ்கே அணி 8 ஓவர்களில் 79 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
SRH அணிக்கு எதிரான போட்டியில் RR வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர், அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார். 4 ஓவர்கள் வீசிய அவர், ஒரே ஒரு டாட் மட்டுமே வீசி 76 ரன்களை வாரி இறைத்துள்ளார். இதற்கு முன்பு, DC அணிக்கு எதிராக GT வீரர் மொஹித் சர்மா 4 ஓவர்களில் 73 ரன்கள் விட்டுக்கொடுத்ததே மோசமான சாதனையாக இருந்தது. ஜோஃப்ரா ஆர்ச்சர் சாதனையை முறியடிக்கப் போவது யார்?
‘பராசக்தி’ படப்பிடிப்பிற்காக இலங்கை சென்றுள்ள நடிகர் ரவி மோகன் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்துள்ளார். பராசக்தி படத்துக்காக நடிகர்கள் ரவி மோகன், சிவகார்த்திகேயன் உட்பட படக்குழு இலங்கை சென்றுள்ளது. இங்கு படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இலங்கையின் முன்னாள் வீரர் ஜெயசூர்யாவோடு, ரவி மோகன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மதரீதியான இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கே எதிரானது என RSS பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கூறியுள்ளார். அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க கர்நாடக அரசு எடுத்த முடிவை விமர்சித்த அவர், மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை இந்திய அரசியலமைப்பு ஏற்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மத ரீதியான இட ஒதுக்கீடு வழங்குபவர்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.