news

News March 24, 2025

வனப்பகுதியில் உருவாகி வரும் இன்னொரு ‘வீரப்பன்’

image

தமிழ்நாடு – கர்நாடகா வனத்துறைக்கு போக்கு காட்டிவரும் செந்தில் என்பவரை இன்னொரு ‘வீரப்பன்’ என கூறுகின்றனர். வீரப்பனின் சொந்த ஊரான கோபிநத்தம் கிராமத்தில் வசித்து வந்த செந்தில், யானைகளை வேட்டையாடி தந்தங்களைக் கடத்தியுள்ளான். அதிகாரிகள் பலருக்கும் மான் கறியை விருந்து படைத்ததும் தெரியவந்துள்ளது. அண்மையில் கர்நாடக வனத்துறையினரிடம் சிக்கிய செந்தில், தப்பியோடிய நிலையில் அவனை வலைவீசி தேடி வருகின்றனர்.

News March 24, 2025

தமிழக மீனவர்களை எச்சரித்து அனுப்பிய இலங்கை கடற்படை

image

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை சிறை பிடித்த இலங்கை கடற்படையினர் 1 மணி நேரத்திற்கு பிறகு எச்சரித்து அனுப்பியுள்ளனர். நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக அவர்களை சிறை பிடித்த இலங்கை கடற்படையினர் வழக்குப் பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் படகுடன் மீனவர்கள் நிம்மதியுடன் கரை திரும்பியுள்ளனர். இலங்கை கடற்படை மனம் மாறிவிட்டதா..!

News March 24, 2025

ஓபிஎஸ் அழைப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த இபிஎஸ்

image

கடந்த வாரம் சட்டப்பேரவை தொடங்கியபோது, EPS தரப்பினருக்கு ஆதரவாக குரல் கொடுத்த OPS, பிரிந்தவர்கள் அனைவரும் மீண்டும் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். இதனால், மீண்டும் அதிமுக இணைப்பு சாத்தியம் என ஒரு தரப்பினரும், சாத்தியம் இல்லை என மற்றொரு தரப்பினரும் கூறி வந்தனர். இந்நிலையில், OPS, சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க மாட்டோம் எனக்கூறி, இணைப்பு பேச்சுக்கு EPS முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

News March 24, 2025

இப்படத்தை ட்ரோல் செய்தால், சிவன் சபித்து விடுவார்: நடிகர்

image

தெலுங்கில் தயாராகும் ‘கண்ணப்பா’ என்ற படம், பான் இந்திய படமாக முன்னெடுக்கப்படுகிறது. பட நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரகுபாபு, ‘இப்படத்தை ட்ரோல் செய்தால், சிவனின் கோபத்திற்கு உள்ளாகி, சபிக்கப்படுவீர்கள்’ என பேசினார். இதனால் கடுப்பான நெட்டிசன்கள், ‘நல்ல படம் எடுக்கவில்லை என்றால், நீங்க தான் நரகத்திற்கு போவீர்கள்’ என கவுண்ட்டர் கொடுத்து வருகின்றனர். அவரின் கருத்து பற்றி நீங்க என்ன சொல்றீங்க?

News March 24, 2025

CUET-UG விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

image

CUET – UG நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 2 நாள்களுக்கு முன்பே நிறைவடைந்த நிலையில், மீண்டும் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இன்று இரவு 11.50 வரை <>cuet.nta.nic.in<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மார்ச் 26- 28ஆம் தேதி வரை விண்ணப்பங்களை திருத்தியமைக்க NTA அனுமதி அளித்துள்ளது. தேர்வுகள் மே 8 – ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

News March 24, 2025

17 வயது சிறுவனை 30 முறை வன்கொடுமை செய்த பெண்!

image

ஜெயிலில் 17 வயது சிறுவனை, 47 வயது பெண் டாக்டர் ஒருவர் 30 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. USAவின் ஸ்டேடன் தீவில் உள்ள சிறையில் ‘தெரபி’ என்ற பெயரில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து, தற்போது 21 வயதாகும் அந்த இளைஞர் புகார் அளிக்க, அந்த டாக்டர் மாயா ஹேய்ஸ் கைதாகி, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லை போலும்..

News March 24, 2025

காலை எழுந்ததும் இவற்றை பார்த்திடவே கூடாது..!

image

காலை எழுந்தவுடன் இந்த 4 விஷயங்களை பார்க்காதீர்கள் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. நிழல்: இது அசுபம் எனப்படுகிறது *அழுக்கு பாத்திரங்கள்: அழுக்கு பாத்திரங்களை பார்த்தால், பண இழப்பு ஏற்படுமாம் *ஓடாத கடிகாரம்: இது வாழ்க்கையில் வெற்றி பெறுவதில் சிக்கல்கள் ஏற்படுத்துமாம் *கண்ணாடி: காலையில் கண்ணாடி பார்க்கும் பழக்கம் இருந்தால், உடனே நிறுத்தி விடுங்கள். இது எதிர்மறை ஆற்றலை உண்டாக்குமாம்.

News March 24, 2025

காலையில் பெண்கள் பால் வாங்க வருவதில்லை

image

அதிகாலையில் பால் வாங்க வரும் பெண்களுக்கு ‘கல்ப்ரிட்ஸ்’ தொல்லை உள்ளதால், பால் விற்பனை நேரம் மாற்றப்படுவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பால் முகவர்கள் சங்கம், பெண்கள் அதிகாலை நேரத்தில், ஆவின் பூத்திற்கு பால் வாங்க வருவது அபூர்வமானது. இதை ராஜகண்ணப்பன் அறியாமல் இருப்பது வியப்பளிக்கிறது. எனவே, சரியான தகவல்களை ஆராய்ந்து, அவர் பேச வேண்டும் என தெரிவித்துள்ளது.

News March 24, 2025

தீபக் சஹாரை பேட்டால் அடித்த தோனி

image

வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது போல என்கிற பழமொழிக்கு ஏற்ப, CSKக்கு எதிராக MI வீரர் தீபக் சஹார் பேட்டிங்கில் பொளந்து கட்டினார். என்னையவா ரீட்டைன் பண்ணல என்ற கோபத்தில் அடித்தது போல் இருந்தது, அவரின் ஒவ்வொரு ஷாட்டும். இருப்பினும் CSK வெற்றி பெற்ற பின், MI வீரர்களுக்கு கை கொடுத்த தோனி, நீ வேறு அணிக்கு போனாலும் என்னுடைய வளர்ப்புதான் என்பது போல, தீபக் சஹாரை பேட்டால் பின்னால் அடித்து கிண்டல் செய்தார்.

News March 24, 2025

ADMK – TVK கூட்டணி அமைந்தால் ஓட்டு கிடைக்குமா?

image

நடிகராக இருந்துவிட்டு உடனே CM-ஆகி விட முடியாது என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். MGR, NTR-க்கு நடந்தது போல எல்லாருக்கும் நடக்காது, எல்லோரும் எதிரியாவார்கள், தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கும். ஆகவே முதலில் விஜய் நிலைத்து நிற்க வேண்டும் ன ஆலோசனைக் கூறிய அவர், ADMK – TVK கூட்டணியை அரசியல் கணக்குக்காக உருவாக்கினால், இரு பக்கமும் ஓட்டு பரிமாற்றம் நடக்குமா என்பது சந்தேகமே எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!