news

News March 24, 2025

விடுதியாக மாறிய மம்மூட்டி வீடு.. ஒரு நாள் வாடகை என்ன?

image

பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, கொச்சியில் தான் வசித்து வந்த வீட்டில் இருந்து வேறு இடத்திற்கு மாறிவிட்டார். பிரபல நடிகர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அந்த வீடு, தற்போது சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதியாக மாற்றப்பட்டுள்ளது. 4அறைகள் உள்ள வீட்டின் ஒருநாள் வாடகை ₹75,000. மம்மூட்டி வீட்டின் முன் நின்று ஒரு புகைப்படம் எடுத்துவிட மாட்டோமா? என ஏங்கிய ரசிகர்களுக்கு இப்போது தங்கும் வாய்ப்பே கிடைத்துள்ளது.

News March 24, 2025

3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்: IMD வார்னிங்

image

வரும் 27 முதல் 29ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு 2 – 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என IMD எச்சரித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°- 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என தெரிவித்துள்ளது. இதனால் பகல் நேரத்தில் வெளியே செல்வோர் குடை, தண்ணீர் கொண்டு போங்க..!

News March 24, 2025

திருப்பரங்குன்றம் யாருக்கு சொந்தம்? ஐகோர்ட் அதிரடி

image

திருப்பரங்குன்றம் மலை கந்தர் மலையா? சிக்கந்தர் மலையா? என சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அது அனைவருக்கும் சொந்தம் என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. கடவுள்கள் எல்லாம் சரியாகத் தான் இருக்கிறார்கள்; சில மனிதர்கள் தான் சரியாக இல்லை எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அப்போது, அந்த மலை தங்களுக்கே சொந்தம் என தொல்லியல் துறை வாதிட்டது. இதையடுத்து வழக்கு ஏப்.7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

News March 24, 2025

ஆண் நண்பருடன் தமிழ் நடிகை.. இணையத்தில் கசிந்த வீடியோ!

image

பிரபல தமிழ் நடிகை ஒருவர், தனது நெருங்கிய ஆண் நண்பருடன் ஆடையின்றி வீடியோ காலில் பேசிய காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது. ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் நடிக்கும் அந்த நடிகை, இதனால் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். தனிப்பட்ட வீடியோ இணையத்தில் கசிந்தது எப்படி? இதனைச் செய்தது யார் என விசாரணை நடத்த போலீசில் புகார் அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஜிட்டல் பாதுகாப்பில் பெண்கள் உஷார்.

News March 24, 2025

₹1,704 கோடி வருவாய்: எதில் தெரியுமா?

image

தமிழகத்தில் கனிமங்கள் மூலம் 2024–25ஆம் ஆண்டில் ₹1,704 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நீர்வளம், இயற்கை வளங்கள் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் பிப்ரவரி வரையிலான காலத்தில் அபராதமாக மட்டும் ₹60 கோடி வசூலானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சட்டத்துக்கு புறம்பாக கனிமங்களை எடுத்துச்சென்ற 3,741 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

News March 24, 2025

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கிடையாது: அண்ணாமலை

image

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், புதிதாக தனியார் பள்ளிகள் தொடங்க அனுமதி கொடுக்க மாட்டோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கைப் பற்றி மக்களுக்கு விளக்குவதை பாஜக புரட்சியாக செய்து வருவதாகக் கூறிய அவர், TNல் பாஜக ஆட்சிக்கு வந்ததும், சம கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றார். அத்துடன், அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி, PM ஸ்ரீ பள்ளிகளாக மாற்றுவோம் என்றும் உறுதியளித்துள்ளார்.

News March 24, 2025

CSKவை முதுகில் குத்திய வீரர்.. கேலி செய்த தங்கை

image

CSKவுக்கு 7 ஆண்டுகள் விளையாடிய தீபக் சாஹர் நடப்பு சீசனில் MIக்கு விளையாடி வருகிறார். நேற்றைய ஆட்டத்தில் 15 பந்துகளில் 28 ரன்கள் அடித்த சாஹர், முதல் ஓவரிலேயே ராகுல் திரிபாதியின் விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்நிலையில், பாகுபலி படத்தில், கட்டப்பா பாகுபலியை முதுகில் குத்தும் காட்சியின் புகைப்படத்தை, இன்ஸ்டாவில் போட்டு சாஹரை அவரது தங்கை கிண்டல் செய்துள்ளார்.

News March 24, 2025

பிரபல நடிகை Filiz Akın காலமானார்

image

துருக்கியை சேர்ந்த பழம்பெரும் நடிகை ஃபிலிஸ் அகின் (Filiz Akın ) 82 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். 70களில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த அவரின் கண் அழகிற்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இங்கு சில்க் ஸ்மிதாவை போல், அங்கு அவர் மிகவும் பிரபலம். நடிகர்கள் முதல் இயக்குநர்கள் வரை அவரின் கால் ஷீட்டுக்காக தவம் கிடந்துள்ளனர். ஆங்கிலம் உட்பட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

News March 24, 2025

பாய்ந்த மின்சாரம்! பரிதாபமாக போன உயிர்!

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே திமுக கொடிக் கம்பம் அகற்றும்போது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவின்படி பொது இடங்களில் உள்ள திமுக கொடிக் கம்பங்களை அகற்றுமாறு பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்தியிருந்தார். அந்த வகையில் ஊத்தங்கரையில் கொடிக் கம்பம் அகற்றும்போது தான் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. மின்சாரம் தாக்கியதில் மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

News March 24, 2025

மாநிலங்களவையில் கடும் கூச்சல்.. அவை ஒத்திவைப்பு

image

மாநிலங்களவை இன்று கூடியதும் பாஜகவினர், கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் பேச்சை கண்டித்து முழக்கமிட்டனர். டி.கே.சிவக்குமார் இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டுக்காக அரசமைப்பு சட்டத்தை மாற்றலாம் என பேசியது கண்டனத்துக்குரியது. என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் பதில் அளித்த போது, பாஜகவினர் அமளியில் ஈடுபட்டதால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

error: Content is protected !!