India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தோனி நேற்று 0.12 விநாடிகளில் சூர்யகுமார் யாதவை ஸ்டெம்பிங் செய்ததை அடுத்து, ரசிகர்கள் புளகாங்கிதம் அடைந்து வருகின்றனர். ஆனால், இது அவரின் 3வது அதிவேக ஸ்டெம்பிங் தான். தோனியின் அதிவேக ஸ்டெம்பிங் 0.08 விநாடிகள். 2018ல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கீமா பாலை கண் இமைக்கும் நேரத்தில் ஸ்டெம்பிங் செய்தார். அதே போல, 2023 ஆம் ஆண்டின் பைனலில் சுப்மன் கில்லை வெறும் 0.10 விநாடிகளில் ஸ்டெம்பிங் செய்தார் தோனி.
துப்புரவுத் தொழிலாளர்கள் எனக் கூறிக் கொண்டு வீட்டிற்குள் புகுந்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதாக சவுக்கு சங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அண்ணாமலை, திமுக அரசு ஊழல் செய்திருக்கிறது என கூறியதற்காக அவர் மீது நடத்தப்பட்டிருக்கும் இந்த வன்முறை கண்டனத்துக்குரியது என விமர்சித்துள்ளார். ஆட்சியாளர்களின் இந்த அராஜகப் போக்கு தொடர்வது நல்லதல்ல என்றும் சாடியுள்ளார்.
மணிகண்டன் நடிப்பில் வெளியான குட்நைட், லவ்வர் மற்றும் குடும்பஸ்தன் ஆகிய படங்கள் 50 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வசூலைக் குவித்தன. மக்களின் அன்பில் நெகிழ்ந்து போன மணிகண்டன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் சின்ன வெற்றிகளுக்கு பெரிய இதயங்கள் தேவை எனவும் மக்களிடமிருந்து பெற்ற அன்பை வெளிப்படுத்த வார்த்தைகளைக் கண்டுபிடிக்க சிரமப்படுகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கம்யூனிஸ்ட் என்றாலே ஆட்டோமேட்டிக்காக சிவப்பு நிறம் ஞாபகத்துக்கு வரும். ஆனால், தங்கள் லோகோவில் இருக்கும் சிவப்பை நீக்கிவிட்டு, நீல நிறத்தை சேர்த்துள்ளது மேற்குவங்க சிபிஎம். சமூக வலைதளத்தில் மாற்றப்பட்டுள்ள அக்கட்சியின் புதிய லோகோவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். CM மம்தாவுக்கு நீலம் பிடிக்கும் என்பதால், சிபிஎம் இப்போது திரிணாமுல் காங். நிறத்தை ஏற்றுக் கொண்டதாக கிண்டலடித்து வருகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம், படிகளை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. எம்.பிக்கள் தங்களது தொகுதி மக்களுக்குச் சிறப்பாகப் பணியாற்ற அரசு சார்பில் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், எம்.பிக்களின் மாத சம்பளம் ₹1 லட்சத்தில் இருந்து ₹1.24 லட்சமாகவும், தினசரி படி ₹2000லிருந்து ₹2500ஆகவும், ஓய்வூதியம் ₹25,000லிருந்து ₹31,000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அரசியல் களத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ள நடிகர் விஜய்யின் கடைசிப் படம் ‘ஜனநாயகன்’. ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு படத்தின் அப்டேட் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சிங்கப்பூரில் கழிவுநீரை சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்துகின்றனர். ஆனால், நம் மக்கள் வேண்டாம் என்கின்றனர் என சட்டப்பேரவையில் அமைச்சர் நேரு விளக்கமளித்துள்ளார். கழிவுநீரை சுத்திகரித்தால் 100 லிட்டரில் 94 லிட்டர் நல்ல நீராக கிடைக்கும். ஆனால், நம் மக்கள் அதை வேண்டாம் என்கின்றனர். எனவே, அதை ஆற்றில் விடுவதா? விவசாயத்திற்கு வழங்குவதா என மக்களிடம் கருத்து கேட்டப் பின் முடிவெடுப்போம் என்றார்.
தேர்வு முடியும் கடைசி நாள் அன்று உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. +2 பொதுத்தேர்வு நாளையுடனும், +1 பொதுத்தேர்வு மார்ச் 27ஆம் தேதியுடனும் முடிவடைகிறது. இந்நிலையில், பொதுத்தேர்வு முடிந்த பின்பு, மாணவர்கள் அமைதியாக வீட்டிற்கு செல்ல, உள்ளூர் போலீஸ் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TN முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில், பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். மீண்டும் 30ஆம் தேதி உயர்மட்ட நிர்வாகிகள் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதுவரை, அரசுக்கு கால அவகாசம் கொடுக்கும் வகையில், ஒரு வாரம் காத்திருக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்குள், விதி எண் 110 கீழ் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
வழக்கமாக ஒரு விஷயத்தில் முதல் முயற்சி தவறாகவே முடியும் என்பதால், கடவுள் முதலில் ஆண்களை தான் படைத்திருப்பார் என சமாஜ்வாதி எம்.பி டிம்பிள் யாதவ் தெரிவித்துள்ளார். உலகில் முதலில் தோன்றியது ஆணா? பெண்ணா? என்ற கேள்விக்கு அவர் இப்பதிலை கூறியுள்ளார். மேலும் 2வது முறை, கடவுள் பெண்களைப் படைத்து, அவர்களுக்குத் தேவையான திறனை கொடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவரின் கருத்து பற்றி என்ன நினைக்கிறீங்க?
Sorry, no posts matched your criteria.