news

News March 25, 2025

ஜார்கண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு!

image

ஜார்கண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின்போது இது பற்றி பேசிய, போக்குவரத்து அமைச்சர் தீபக், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கடந்த ஆண்டே முடிவு செய்யப்பட்டு, அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறினார். தெலங்கானா, பீஹாரை போல், அடுத்த நிதியாண்டின் தொடக்கத்தில் சர்வே நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 25, 2025

மதியம் வெளியே வராதீங்க

image

தமிழகத்தில் வெயில் வரும் நாள்களில் இன்னும் தீவிரமடையலாம். எனவே பொதுமக்கள் பிற்பகல் நேரத்தில் வெளியே வர வேண்டாம். வெயிலில் மயக்கம் அடைந்து, சுய நினைவை இழந்து இருப்பவர்களை, குப்புற அல்லது மல்லாக்காக படுக்க வைக்க வேண்டும். மருத்துவ ரீதியில் பார்க்கும்போது, இதுபோன்ற நிலையில் இருப்பவர்களை இடது பக்க வாட்டில் படுக்க வைக்கும் முறை தான் சிறந்தது என்று சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது.

News March 25, 2025

போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு: பெண்களுக்கு சூப்பர் சலுகை!

image

மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் 40% வரை பணத்தை திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதியை, தபால் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், பெண்கள் குறைந்தது ₹1,000ல் இருந்து ₹2 லட்சம் வரை FD ஆக முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு 7.5% நிலையான வட்டி; அதுவும் காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிட்டு வழங்கப்படும். FDல் உள்ள பணத்தை 40% வரை எடுத்துக்கொள்ளலாம், மார்ச் 31க்கு முன் முதலீடு செய்பவர்களுக்கு மட்டுமே இச்சலுகை கிடைக்கும்.

News March 25, 2025

பயங்கர நிலநடுக்கம்

image

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பகுதியில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7ஆக பதிவாகியுள்ளது. இதனால், பல்வேறு நகரங்கள் குலுங்கியதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, சாலையில் தஞ்சம் புகுந்தனர். இதன் பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. அதேபோல், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

News March 25, 2025

கோடையை சமாளிக்க சென்னையில் ஏசி ரயில்!

image

வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து சென்னையில் ஏசி மின்சார ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி இருக்கும் நிலையில், ஆபீஸ் செல்பவர்கள் வசதிக்காக சென்னையில் மின்சார ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கடற்கரை – செங்கல்பட்டு இடையே 2 சேவைகளும், தாம்பரம் – கடற்கரை இடையே ஒரு சேவையும் இயக்கப்படவுள்ளது.

News March 25, 2025

மறந்துக்கூட வீட்டில் இங்க லட்சுமி படத்தை வெச்சுராதீங்க!

image

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் லட்சுமிதேவியின் படம் அல்லது விக்கிரகத்தை வடக்கு அல்லது வடக்கிழக்கு திசையில் வைக்க வேண்டுமாம். அதுவே, மங்களகரமானதாம். இதுதவிர, தாமரை மலரில் அமர்ந்து செல்வத்தை பொழியும் லட்சுமி தேவியின் படத்தை இந்த திசையில் வைத்தால் வீட்டில் பணத்திற்கு தட்டுப்பாடு வராது என்ற நம்பிக்கை உள்ளது. தவறுதலாக கூட தெற்கு, தென்மேற்கு திசையில் வைக்க வேண்டாம் எனவும் குறிப்பிடப்படுகிறது.

News March 25, 2025

ஷிண்டேவிடம் மன்னிப்பு கேட்கமாட்டேன்: குணால்

image

மஹாராஷ்டிரா Dy CM ஏக்நாத் ஷிண்டேவை காமெடி ஷோவில் கலாய்த்ததற்காக மன்னிப்பு கோர போவதில்லை என குணால் கம்ரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சிறிய ஜோக்கை கூட ஏற்க மனமில்லாத அதிகாரம் படைத்தவர்களுக்காக உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது. சட்டத்திற்கு விரோதமாக நிகழ்ச்சியில் எதையும் பேசவில்லை. என் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்தாலும் சந்திக்க தயார் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News March 25, 2025

Tollgate கட்டணம் ₹5 முதல் ₹25 வரை உயர்வு

image

தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் 40இல் ஏப்ரல் 1 முதல் வாகனங்களுக்கான <<15874351>>கட்டணம் <<>>உயர்த்தப்படுகிறது. அதன்படி, ₹5 முதல் ₹25 வரை கட்டணம் அதிகரிக்கிறது. எஞ்சி உள்ள 38 சுங்கச்சாவடிகளில் 2ம் கட்டமாக செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்த்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 சுங்கச்சாவடிகள் புதிதாக திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

News March 25, 2025

IPL: இன்று பஞ்சாப் VS குஜராத் மோதல்

image

IPL தொடரில் இன்று GT – PBKS அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. IPL வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், GT 3 முறையும், PBKS 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த சீசனில் KKR அணிக்காக கோப்பை வென்ற ஷ்ரேயாஸ் ஐயர், இந்த சீசனில் PBKS அணியின் கேப்டனாக உள்ளார். கில் GTயின் கேப்டனாக உள்ளார்.

News March 25, 2025

உங்களை வெற்றியாளராக மாற்றும் ‘6’ பழக்கங்கள்..!

image

ஒருவரிடம் இருக்கும் சில பழக்க வழக்கங்கள் தான் அவரை வெற்றியாளராக மாற்றுகிறது *என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவான சிந்தனை கொண்டி இருப்பார்கள் *குறை சொல்பவர்களை கண்டு கொள்ள மாட்டார்கள் *வாழ்வில் அவ்வப்போது ரிஸ்க் எடுப்பார்கள் *எடுத்த காரியத்தில் பின்வாங்க மாட்டார்கள் *ஒரு விஷயத்தை தள்ளிப்போடும் பழக்கம் இருக்காது *உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவார்கள். நீங்களும் ஃபாலோ பண்ணுங்க!!

error: Content is protected !!