news

News March 25, 2025

அதிமுக, பாஜக பிரிந்தது ஏன்?

image

2021 தேர்தலை அதிமுக, பாஜக இணைந்து சந்தித்து தோல்வி கண்டபின், அதிமுக அக்கூட்டணியில் இருந்து விலகியது. அதற்கு, அண்ணாமலைதான் காரணம் என்று EPS பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார். அடுத்த முதல்வர் பாஜகவில் இருந்துதான் வருவார்கள் என்று அண்ணாமலை பேசியதுதான் கூட்டணி பிளவுக்கு காரணமாகப் பார்க்கப்பட்டது. அதன் பின்னரும் அண்ணாமலை மாற்றப்படாதது, டெல்லி தலைமை அவருக்கு ஆதரவாக இருந்ததை காட்டுகிறது.

News March 25, 2025

என்னை அடிக்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்: குணால் காம்ரா

image

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த விவகாரத்தில், அவரது ஆதரவாளர் ஒருவர் ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் காம்ராவை மிரட்டும் ஆடியோ வைரலாகி வருகிறது. நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்களோ, அங்கு வந்து அடிப்பேன் என ஷிண்டே ஆதரவாளர் கூற, நான் தமிழ்நாட்டில் தங்கியிருக்கிறேன், வாருங்கள் என குணால் கூறுகிறார். அதற்கு தமிழ்நாட்டிற்கு எப்படி வருவது என ஷிண்டே ஆதரவாளர் கோபப்படுவது ஆடியோவில் கேட்கிறது.

News March 25, 2025

மனிதத்தன்மையற்ற செயல்: டாஸ்மாக்

image

டாஸ்மாக்கில் ED ரெய்டு நடந்ததற்கு எதிராக தொடர்ந்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் அதிகாரிகள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ED சோதனையின் போது நாங்கள் நடத்தப்பட்ட விதம் மனிதத்தன்மையற்ற செயல் என அவர்கள் கூறியுள்ளனர். மேலும், ED அதிகாரிகள் தங்களை ஓரிடத்தில் அடைத்து வைத்திருந்ததாகவும், உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.

News March 25, 2025

மனோஜ் பாரதிராஜா காலமானார்

image

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார். தாஜ் மகால், வருஷமெல்லாம் வசந்தம் ஆகிய படங்களில் நடித்திருக்கும் அவர், மார்கழி திங்கள் என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார்.

News March 25, 2025

குஜராத் அணியில் 4 தமிழக வீரர்கள்…!

image

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது. அந்த அணியின் பிளேயிங் XI-ல், 3 தமிழக வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். சாய் கிஷோர், சாய் சுதர்சன், ஷாருக் கான் ஆகிய 3 வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்பேக்ட் பிளேயராக களமிறக்கப்படுபவர்களின் லிஸ்ட்டில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார். இதுபற்றி என்ன நினைக்கிறீங்க?

News March 25, 2025

மீண்டும் தலைவர் ஆகிறார் அண்ணாமலை?

image

தமிழக பாஜக தலைவராக மீண்டும் அண்ணாமலை நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவரது பதவிக்காலம் நிறைவடைந்திருக்கும் நிலையில், புதிய தலைவரை நியமிக்கும் பணிகளை பாஜக கடந்த மாதம் தொடங்கியது. இந்நிலையில், தேர்தல் நெருங்குவதால், அண்ணாமலையின் தலைவர் பதவியை நீட்டிப்பு செய்ய பாஜக தலைமை திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த வாரத்தில் அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.

News March 25, 2025

அவர் ஆண்களை விரும்புகிறார்: மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு

image

பிரபல பாக்சிங் வீராங்கனை சவீட்டி, தன் கணவனும் இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டனுமான தீபக் ஹூடா மீது <<15880251>>வன்கொடுமை வழக்கு<<>> பதிந்த நிலையில், புது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். விவாகரத்தை மட்டுமே தான் கேட்பதாகவும், தனக்கு சொத்து தேவையில்லை என்றும் தெரிவித்துள்ள சவீட்டி, தன்மீது தவறான இமேஜை ஏற்படுத்த தீபக் முயல்வதாகவும், அவர் ஆண்கள்மீது ஈர்ப்பு கொண்டவர் என்றும் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 25, 2025

தாமரை கூட்டணி ஆட்சி அமையும்: தமிழிசை

image

2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தாமரை கூட்டணி ஆட்சி அமையும் என்று தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் EPS டெல்லி சென்றிருக்கும் நிலையில், தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில், தமிழிசையின் இந்தப் பேச்சு, அவர்களுக்குள் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

News March 25, 2025

அஜித் – தனுஷ் காம்போ… வெளியான புது அப்டேட்!

image

அஜித்தின் அடுத்த படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாக காட்டுத் தீ போல் செய்தி பரவி வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் கூறியிருந்தார். இந்நிலையில், கார் ரேஸை முடித்துவிட்டு அஜித் தமிழ்நாடு திரும்பியதும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும், படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அஜித் – தனுஷ் காம்போ எப்படி இருக்கும்?

News March 25, 2025

அலுமினிய பாத்திரங்களை யூஸ் பண்றீங்களா?

image

எத்தனை விழிப்புணர்வு கொடுத்தாலும், இன்னமும் பலர் சமையலுக்கு அலுமினிய பாத்திரங்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் நம் உணவிலும் அதிக அளவிலான அலுமினிய துகள்கள் கலக்கின்றன. இதனை உட்கொள்வதால் நமது நரம்பு மண்டலங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, கேன்சரும் வரக்கூடும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், எலும்புகள், கிட்னி, கல்லீரல் ஆகியவற்றிலும் கூட இது பாதிப்பை ஏற்படுத்துமாம். SHARE IT.

error: Content is protected !!