news

News October 30, 2025

கரூரில் தவெகவினர் தாக்கப்பட்டனர்: CTR

image

கரூர் துயரம் நடந்த முதல் நாளே தானும், N.ஆனந்த் உள்ளிட்ட அனைவரும் கரூருக்கு வெளியே காத்திருந்ததாக CTR நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். ஆனால், போலீஸார் தங்களை அனுமதிக்கவில்லை என்றும், தவெக கொடி கட்டிய வாகனங்களுக்கு ஊருக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது எனவும் கூறினார். அத்துடன், அனைத்து தவெக நிர்வாகிகளும் தாக்கப்பட்டு, அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

News October 30, 2025

அக்டோபர் 30: வரலாற்றில் இன்று

image

*1502 – வாஸ்கோடகாமா 2-வது முறையாக கோழிக்கோடு வந்தார்.
*1945 – ஐநாவில் இந்தியா இணைந்தது.
*1908 – தேவர் ஜெயந்தி.
*1966 – ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான KV ஆனந்த் பிறந்தநாள்.

News October 30, 2025

ஜெயிலர் 2-ல் இணைந்த சந்தானம்

image

காமெடியனாக கலக்கிய சந்தானம், தற்போது ஹீரோவாகவே நடித்து வருகிறார். இந்நிலையில், மீண்டும் காமெடியனாக அவர் நடிக்கவுள்ளார். ‘ஜெயிலர் 2’ மூலமே மீண்டும் அந்த என்ட்ரியை சந்தானம் கொடுக்கவுள்ளார். ரஜினிகாந்த் உடன் ஏற்கெனவே ‘லிங்கா’ படத்தில் சந்தானம் காமெடி ரோலில் நடித்திருந்தார். இந்த காம்போ மீண்டும் திரையில் சிரிப்பு பட்டாசாய் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News October 30, 2025

பள்ளி மாணவர்களின் மனுவை ஏற்ற அலகாபாத் HC

image

லக்னோவில் உள்ள ICSE பள்ளி ஒன்றில் பயிலும் 11 & 14 வயதுடைய 2 மாணவர்களுக்கு, போதிய வருகைப் பதிவு, மார்க் இல்லையென்பதால் அடுத்த வகுப்பு செல்வதற்கு மறுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து பள்ளி மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை அலகாபாத் HC ஏற்றது. RTE சட்டம் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என கூறிய HC, 11 வயது மாணவரை 6-ம் வகுப்பிற்கு செல்லவும், 14 வயது மாணவருக்கு மறுதேர்வு நடத்தவும் உத்தரவிட்டது

News October 30, 2025

Lion is always a lion.. டேவிட் வார்னர் சொன்னது இதுதான்!

image

இந்திய கிரிக்கெட்டில் தோனி என்ன செய்திருக்கிறார் என்பதை விட, IPL-ல் அவருக்கான ரசிகர்கள் என்பது தனி ரகம் என ஆஸி., வீரர் டேவிட் வார்னர் கூறியுள்ளார். IPL போட்டிகளில் வேறு எந்த அணி விளையாடினாலும் அங்கு தோனியின் (CSK) ஜெர்ஸியை பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். தோனியை பற்றிய வார்னரின் இந்த பேச்சு வைரலாக, ‘Thala for a reason’ என்று ரசிகர்கள் இணையத்தில் சிலாகித்து வருகின்றனர்.

News October 30, 2025

கலிலியோ பொன்மொழிகள்

image

*உங்களால் ஒரு மனிதனுக்கு எதையும் கற்றுக்கொடுக்க முடியாது, அவன் அதை தனக்குள்ளே தேடிக்கொள்ள மட்டுமே உதவ முடியும்.
*அனைத்து உண்மைகளும் எளிதில் புரிந்துகொள்ள கூடியவையே, ஆனால் முதலில் அதை கண்டுபிடிக்க வேண்டும்.
*உங்களை நீங்கள் அறிவதே மிகச் சிறந்த ஞானம்.
*அளவிடக்கூடியதை அளவிடுங்கள், அளவிட முடியாததை அளவிடக் கூடியதாக ஆக்குங்கள்.

News October 30, 2025

ராமரே இல்லை என காங்., கூறுகிறது: யோகி ஆதித்யநாத்

image

கடவுள் ராமர் என்பவரே இல்லை என கூறும் காங்., இறைவனின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குவதாக உ.பி., CM யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். ராமரின் தேரை லாலு பிரசாத் யாதவ்வின் RJD நிறுத்தியதாகவும், சமாஜ்வாதி கட்சி ராம பக்தர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கடுமையாக சாடினார். பிஹார் தேர்தல் பிரசாரம் கடும் மோதல் போக்கில் உள்ள நிலையில், மகாபந்தன் கூட்டணியை தாக்கி யோகி கூறியது பேசுபொருளாகியுள்ளது.

News October 30, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 504 ▶குறள்: குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். ▶பொருள்: ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வர வேண்டும்.

News October 30, 2025

CSK-வில் வாஷிங்டன் சுந்தர்? அஸ்வின் விளக்கம்

image

IPL-ல் இருந்து அஸ்வின் ஓய்வு பெற்ற நிலையில், அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்க்க CSK-வும், அவரை வாங்க GT அணியும் டிரேட் செய்ய ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதுகுறித்து தனக்கு எந்த தகவலும் வரவில்லை என்று சுந்தர் கூறியதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். அதேநேரம், தன்னை வாங்குவது பற்றி CSK, GT அணிகள் பேசியிருக்கலாம் என்றும் சுந்தர் கூறியுள்ளார்.

News October 30, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 30, ஐப்பசி 13 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 130 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: நவமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: வளர்பிறை

error: Content is protected !!