news

News March 26, 2025

மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்

image

மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மகனை இழந்து ஆற்றொண்ணா துயரில் வாடும் பாரதிராஜா அவர்கள் அத்துன்பத்தில் இருந்து மீண்டு வரும் வலிமையை அளிக்க இறைவனை வேண்டுவதாகவும், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவிப்பதாகவும் தனது X பதிவில் அவர் கூறியுள்ளார்.

News March 26, 2025

உருவம் தவிர்; உள்ளத்தை பார்

image

ஒருவரின் உருவத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்யக் கூடாது. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் என்கிறது திருக்குறள். ஒவ்வொருவரிடமும் குறை, நிறைகள் இருக்கும். அதற்காக அவர்களைக் குறைத்து மதிப்பீடு செய்யக் கூடாது. யானையின் காதில் புகுந்த எறும்பு, யானையை விட அந்த நேரத்தில் பலசாலியாகிவிடும். அது போல காலநேரம் அனைவருக்கு வரும். சிலருக்கு காலம் தாழ்ந்து வரும், அதற்காக பிறரை கஷ்டப்படுத்தக் கூடாது.

News March 26, 2025

இன்றைய (மார்ச்.26) நல்ல நேரம்

image

▶மார்ச் – 26 ▶பங்குனி – 12 ▶கிழமை: புதன்
▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 04:30 PM – 05:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 06:30 PM – 07:30 PM
▶ராகு காலம்: 12:00 PM – 01:30 PM
▶எமகண்டம்: 07:30 AM – 09:00 AM
▶குளிகை: 10:30 AM – 12:00 AM
▶திதி: துவாதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: புனர்பூசம்
▶நட்சத்திரம் : திருவோணம் அ.கா 12.42

News March 26, 2025

அச்சச்சோ அத மறந்துட்டனே… பாதியில் திரும்பிய விமானம்!

image

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 257 பயணிகளுடன் சீனா புறப்பட்ட விமானம், 2 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்பியுள்ளது. பசுபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் விமானம் பறந்து கொண்டிருந்தபோதுதான் விமானியிடம் பாஸ்போர்ட் இல்லையென தெரிந்ததாம். இதனால், திரும்பி சான் பிரான்ஸிஸ்கோ வந்த விமானம், புதிய விமானிகள் குழுவினருடன் மீண்டும் சீனா புறப்பட்டுச் சென்றுள்ளது.

News March 26, 2025

ஒடிசாவில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்

image

ஒடிசாவில் சட்டசபையில் இருந்து 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் கோஷமிட்டனர். சபாநாயகர் அவர்களை எச்சரித்தும் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அமளியில் ஈடுபட்ட 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை 7 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

News March 26, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச்.26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News March 26, 2025

தமிழர்களின் மருத்துவ அறிவை களவாட முயற்சி: குட்டி ரேவதி

image

தமிழர்களின் மருத்துவ ஏடுகளை களவாட வடக்கத்திய கும்பல் சூழ்ச்சி செய்வதாக கவிஞரும், சித்த மருத்துவருமான குட்டி ரேவதி குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழர்களின் மருத்துவ அறிவுக் களஞ்சியமான சித்த மருத்துவ மூல புத்தகங்கள் பலவற்றை, ஆயுர்வேத மருத்துவ அட்டவணையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் இணைத்துள்ளதை கண்டித்த அவர், இதை ஒன்றுபட்டு பாதுகாப்பது, எதிர்வினையாற்றுவதை நமது கடமையாக கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

News March 26, 2025

ரஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு தெரியுமா?

image

ரஷ்மிகாவின் சொத்து மதிப்பு ₹66 கோடியாக உள்ளதென Forbes அறிக்கை தெரிவிக்கிறது. புஷ்பா 2வில் நடிக்க ₹10 கோடி பெற்ற அவர், பொதுவாக ஒரு படத்திற்கு ₹4 கோடி சம்பளம் வாங்குகிறார். BOAT, 7UP, Meesho உள்ளிட்ட பிராண்டுகளின் விளம்பரங்கள் மூலமும் அவருக்கு வருமானம் வருகிறது. பெங்களூருவில் ₹8 கோடி பங்களா உள்பட நாடு முழுவதும் 4 இடங்களில் சொத்துக்கள், AUDI, ரேஞ்ச் ரோவர் உள்ளிட்ட 4 சொகுசு கார்களையும் வைத்துள்ளார்.

News March 26, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச்.26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News March 26, 2025

சதத்தை தியாகம் செய்த ஸ்ரேயாஸ் – குவியும் பாராட்டு

image

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 97 ரன்களில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், சதமடிக்க வாய்ப்பிருந்தும் அதனை தியாகம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இறுதி ஓவரில் விளையாடியபோது, ‘எனது சதத்தை பார்க்காதே, நீ விளையாடு’ என தன்னிடம் கூறியதாக ஷஷாங்க் சிங் தெரிவித்துள்ளார். தனது முதல் சதத்தை தியாகம் செய்த ஸ்ரேயாஸ் ஐயரை நெட்டிசன்கள் பாராட்டித் தள்ளுகின்றனர்.

error: Content is protected !!