news

News March 26, 2025

29 ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்: தமிழக அரசு

image

ரேஷன் கடைகள் வரும் 29 ஆம் தேதி(சனிக்கிழமை) வழக்கம்போல் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது. தெலுங்கு வருட பிறப்பு, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 30 மற்றும் 31 ஆம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறையாகும். வழக்கமாக மாதத்தின் கடைசி வேலை நாளில் ஒத்திசைவுப் பணிகள் நடைபெறும். இதனால் 29ஆம் தேதி பொருட்கள் வழங்கப்படுமா என்ற ஐயம் எழுந்த நிலையில், ரேஷன் கடைகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.

News March 26, 2025

நீட் தேர்வு: அடுத்தடுத்து 2 பேர் தற்கொலை!

image

ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த பீஹார் மாணவர் ஹர்ஷ்ராஜ் தற்கொலை செய்து கொண்டார். கோட்டாவில் தங்கியிருந்த ஓட்டலில் அவரது உடல் மீட்கப்பட்டது. சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரங்களுக்குள் ஜோத்பூரில் மற்றொரு மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டார். ராஜஸ்தானில், இந்த ஆண்டு மட்டும் தேர்வு அழுத்தத்தால் 10 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அந்த எண்ணம் எழுந்தால், 104 என்ற எண்ணை அழைக்கவும்!

News March 26, 2025

மனோஜ் இறப்புக்கு காரணம் என்ன?

image

பாரதிராஜாவின் மகன் மனோஜுக்கு (48) இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சில தினங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக, அவர் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்து கடந்த வாரம்தான் வீடு திரும்பியுள்ளார். ஆனால், அறுவை சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்கவில்லை. இதற்கிடையில் நேற்று மாலை 6 மணியளவில் திடீரென்று 2வது முறையாக மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது உயிர் பிரிந்தது.

News March 26, 2025

என்கவுன்ட்டர் சம்பவத்தில் நடந்து என்ன?

image

சென்னை என்கவுன்ட்டர் சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் புகாரியை நோக்கி கொள்ளையன் ஜாபர் 2 முறை துப்பாக்கியால் சுட்டபோது, குண்டுகள் ஜீப்பில் பாய்ந்தன. இதனால், தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் சுட்டபோது, நெஞ்சில் குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஜாபர் உயிரிழந்தார். அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனம் கர்நாடக பதிவெண் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 26, 2025

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் வீட்டில் CBI சோதனை!

image

சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான பூபேஷ் பாகல் வீட்டில் CBI அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 10ஆம் தேதி ED அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று ராய்பூரில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை முதலே CBI அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் வாகனங்கள் மீது அவரது ஆதரவாளர்கள் கல் எறிந்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

News March 26, 2025

மரம் வெட்டுவது கொலையை விட மோசமானது: SC

image

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில், அதிக அளவில் மரங்கள் வெட்டப்படுவது, மனித கொலையை விட மோசமானது என உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. தாஜ்மஹால் அருகே பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் 454 மரங்கள் வெட்டிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இப்படிப்பட்டவர்களுக்கு கருணையே காட்ட முடியாது என தெரிவித்துள்ளது. ஒரு மரத்திற்கு ₹1 லட்சம் வீதம் அபராதம் செலுத்தியே ஆக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

News March 26, 2025

NREGA திட்டத்தில் தமிழகத்திற்கு அதிக நிதி: மத்திய அரசு

image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (NREGA) தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பார்லிமென்ட்டில் அமைச்சர் சந்திரசேகர் பெம்மசானி தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள நிதி குறித்து MP கனிமொழி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், 20 கோடி மக்கள்தொகை கொண்ட UPக்கு ₹10,000 கோடி, 7 கோடி மக்கள்தொகை கொண்ட TNக்கு ₹10,000 கோடி என பாரபட்சமின்றி வழங்கியதாகக் கூறினார்.

News March 26, 2025

அதிமுக கூட்டணியில் யார் யார்?

image

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக பார்முலாவை பின்பற்ற அதிமுக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுக 170+, NDA 64 இடங்களில் போட்டியிட அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது. இதில், BJP, DMDK, PMKவுக்கு இரட்டை இலக்கத்திலும், தமாகா, புதிய தமிழகம், புரட்சி பாரதம், தமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒற்றை இலக்கத்திலும் சீட் கொடுக்கப்படலாம். சூழலை பொறுத்து, TTV கூட்டணியில் இணையக்கூடும்.

News March 26, 2025

இன்று RR vs KKR மோதல்! முதல் வெற்றிக்கான பலப்பரிட்சை

image

IPLல் இன்று RR – KKR அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில், KKR RCBயிடம் 7 விக்கெட் வித்தியாசத்திலும், RR 44 ரன்கள் வித்தியாசத்தில் SRHயிடமும் தோல்வி அடைந்தன. இதனால், 2 அணிகளும் முதல் வெற்றியை குறிவைத்துள்ளன. போட்டி நடக்கும் கவுகாத்தி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது. மேலும், 2 அணியும் சரிசம பலத்துடன் இருப்பதால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது. இன்று யார் வெற்றி பெறுவார்கள் என நினைக்கிறீர்கள்?

News March 26, 2025

சர்ச்சைக்குரிய தீர்ப்பு: மேல் விசாரணைக்கு எடுத்த SC

image

பெண்ணின் மார்பைப் பிடிப்பதோ, ஆடையை கிழிப்பதோ பாலியல் வன்கொடுமை அல்ல என சிறார் பாலியல் தாக்குதல் வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் எனவும் கோரியிருந்தனர். இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக, தாமாக முன் வந்து உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது.

error: Content is protected !!