India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶சுயவிமர்சனம் உடையோரை, பிற விமர்சனங்கள் பாதிப்பதில்லை. ▶வாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்குப் பிடித்தமாதிரி பிடித்த இடத்திலே போய் நின்று கொள்வதில்லை. ▶உண்மைகள் ஒன்றும் அவ்வளவு முக்கியமில்லை. ஒரு நல்ல நம்பிக்கையைச் சிதைக்காமலிருப்பதே மிகவும் முக்கியம் ▶வாழ்க்கை சொர்க்கமா ஆகறதுக்குப் பணம் மட்டும் காரணமில்லேதான், ஆனா நரகமா வாழ்க்கை ஆகறதுக்குப் பணம் இல்லேங்கற ஒரே காரணம் போதும்.
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் வீட்டில் 14 மணி நேரமாக நடைபெற்ற சிபிஐ சோதனை நிறைவடைந்துள்ளது. மகாதேவ் சூதாட்ட ஊழல் தொடர்பாக அவரின் இல்லத்தில் காலையில் தொடங்கிய சிபிஐ சோதனை இரவு வரை நடைபெற்றது. இதே வழக்கில் 16 நாட்களுக்கு முன் பாகேல் மற்றும் அவருடைய மகன் சைதன்யா வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
1955 – ஈழத்துக் கவிஞர் முல்லையூரான் பிறந்த தினம்.
1969 – நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது.
1977 – அமெரிக்காவில் விமான விபத்தில் 583 பேர் உயிரிழந்தனர்.
2009 – இந்தோனேசியாவில் அணை உடைந்ததில் 99 பேர் பலியானார்கள்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் கொடுத்த வாக்குறுதியை வேத வாக்காக நினைத்துச் செயல்படுவீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நீதி நியாயத்துக்குக் கட்டுப்படும் நீங்கள் தன்மானத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். விசுவாசமான நீங்கள் நம்பிக்கை துரோகிகளை மன்னிக்கவே மாட்டீர்கள் என்று நந்தி வாக்கியம் கூறுகிறது. இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: ஒப்புரவறிதல்
▶குறள் எண்: 218
▶குறள்:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
▶பொருள்: ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் எளிதாக 200 ரன்களை கடந்து விடுகிறது. இதனால், பவுலர்களுக்கான முக்கியத்துவம் குறைகிறதா என்ற கேள்வி எழுகிறது. இந்நிலையில், குஜராத் அணியில் விளையாடும் ரபாடா, ‘இந்த போட்டியை இனிமேல் கிரிக்கெட் என்று கூறாதீர்கள், பேட்டிங் என்று கூறுங்கள்’ என ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு மைதானமும் பிளாட் பிட்ச்சாக இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
தமிழர்களின் பண்பாட்டில் ஒரு முக்கிய அங்கமாக இருப்பது மஞ்சள். சுவை & நிறத்திற்காக மட்டுமின்றி, உடல் நலத்திற்காகவும் பயன்படுத்தப்படும் அதில் தற்போது அதிகம் கலப்படம் செய்யப்படுகிறது. உண்மையான மஞ்சளா என்பதை கண்டறிய, ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். மஞ்சள் கலக்கப்பட்ட நீர் வெளிர் மஞ்சள் நிறமாக இருந்தால் தூய்மையானது. கலப்படம் செய்யப்பட்டிருந்தால் அடர்த்தியான மஞ்சளாக இருக்கும்.
▶மார்ச் – 27 ▶பங்குனி – 13 ▶கிழமை: வியாழன்
▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM
▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM & 06:30 PM – 07:30 PM
▶ராகு காலம்: 01:30 PM – 03:00 PM
▶எமகண்டம்: 06:00 AM – 07:30 AM
▶குளிகை: 09:00 AM – 10:30 AM
▶திதி: திரியோதசி ▶சூலம்: தெற்கு
▶பரிகாரம்: தைலம் ▶சந்திராஷ்டமம்: பூசம்
▶நட்சத்திரம் : அவிட்டம் அ.கா 12.02
இடஒதுக்கீடு தொடர்பாக தான் கூறாத கருத்தை பாஜக தலைவர்கள் வேண்டுமென்றே திரித்துக் கூறுவதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். மத அடிப்படையிலான இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என எந்த இடத்திலும் தான் பேசாத நிலையில், திட்டமிட்டு பாஜகவினர் அவதூறு பரப்புவதாகவும் அவர் சாடியுள்ளார். இந்த குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகவும் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
இன்று (மார்ச்.27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.