India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராகுல் நாட்டிற்கு தவறான தகவலை தருகிறார் என பாஜக MP ஜெகதாம்பிகா பால் சாடியுள்ளார். அவையில் தன்னை பேச அனுமதிப்பதே இல்லை என ராகுல் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அவரை பேசக்கூடாது என ஒருவரும் தடுப்பதில்லை என ஜெகதாம்பிகா விளக்கமளித்துள்ளார். நாடாளுமன்ற செயல்பாடுகள் மீது ராகுல் ஈடுபாடு காட்டுவதில்லை. பிற காங்கிரஸ் MPக்கள் பேசும்போது, அவரால் மட்டும் ஏன் பேச முடியவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தங்கத்தை வங்கியில், ‘டெபாசிட்’ செய்து வட்டி வருமானம் ஈட்டும், தங்க முதலீட்டுத் திட்டத்தை நேற்று முதல் நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் 1-3 வரை குறுகிய காலம்; 5-7 ஆண்டுகள் வரை நடுத்தர காலம்; 12 – 15 ஆண்டுகள் வரை நீண்ட காலம் என 3 விதமாக செயல்படுத்தப்பட்டது. இதில் நடுத்தர, நீண்ட கால திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. குறுகிய கால திட்டத்தைத் தொடர மத்திய அரசு அனுமதித்துள்ளது.
தங்கத்தை வங்கியில், டெபாசிட் செய்து வட்டி வருமானம் ஈட்டும், தங்க முதலீடு திட்டத்தை நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 2015இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்தபின், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, தங்கத்தை முதலீடு செய்திருந்தால், தற்போதைய விதிகளின்படி, அதற்கான காலம் முடியும் வரை பலன்களைப் பெறலாம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது, மாநிலத் தலைவர் பதவி, இபிஎஸ் முன்வைத்த புகார், 2026 தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அண்ணாமலையுடன் அமித்ஷா ஆலோசிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இபிஎஸ் டெல்லி சென்று திரும்பிய நிலையில், உடனடியாக அண்ணாமலை டெல்லி செல்வது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
SRH – LSG அணிகளுக்கு இடையிலான IPL போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறவுள்ளது. இங்கு பேட்டிங் பிட்ச் நன்றாக உள்ளதால், SRH வீரர்கள் ரெக்கார்டு பிரேக்கிங் ஸ்கோரை அடிக்க வாய்ப்புள்ளது. LSG அணி பேட்டிங் வரிசையும் வலுவாக இருப்பதால் சிக்ஸர் மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், LSG 3, SRH 1 முறை வெற்றி பெற்றுள்ளன.
அமெரிக்கா வாகனத் துறையின் நலனுக்காக அனைத்து இறக்குமதி வாகனங்களுக்கும் 25% கூடுதல் வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த வரி விதிப்பு உள்நாட்டு வாகனத் துறையையும் பெரிதாக பாதிக்கும் என உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஏனெனில் பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்க கார்கள் வெளிநாடுகளில் தான் அசெம்பிள் செய்யப்படுகிறது.
இதுவரை IPL தொடர்களின் முதல் 5 போட்டிகள் முடிவில், இந்த சீசனில் தான் 6 முறை 200+ ஸ்கோர்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர், 2008, 2023ல் தலா 3 முறை மட்டுமே 200+ ஸ்கோர்கள் அடிக்கப்பட்டன. அதேபோல, அதிக பவுண்டரிகள் 183 முறையும் (முன்னர் 2021ல் 164), அதிக சிக்ஸர்கள் 119 முறையும் (முன்னர் 2023ல் 88) அடிக்கப்பட்டு விட்டன. எந்த அணி முதலில் 300 ரன்களை எட்டும் என்று நீங்க நினைக்கிறீங்க?
ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அவர்களை எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்த கடற்படையினர், ஒரு படகு மற்றும் வலைகள், மீன்களையும் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த சில மாதங்களாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
காலையில் எழுந்ததும் கட்டிலில் இருந்து கால்களைக் கீழே வைப்பதற்கு முன்பாக, ஸ்ட்ரெட்சஸ் (Stretches) செய்ய அறிவுறுத்துகிறார்கள். சாதாரணமாக சோம்பல் முறிக்காமல் உடலை நன்கு வளைத்து நெளித்து ஸ்ட்ரெட்சஸ் செய்யவேண்டுமாம். கை விரல் நுனி முதல் கால் விரல் நுனி வரை உணர்ந்து செய்ய வேண்டுமாம். இவ்வாறு செய்வதன் மூலம் உடலில் சோம்பல் வெளியேறுவது மட்டுமின்றி, மனதில் உற்சாகமும் ஏற்படும். நாளைக்கே ட்ரை பண்ணுங்க.
புதிய டெண்டர் விதிமுறைகளை நீக்கக்கோரி எரிவாயு டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 7 மாநிலங்களில் 3,478 டேங்கர் லாரிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வீடுகள், கடைகளுக்கு சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.