India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெல்லிக்கு முதல் முறையாக ரேபிடோ டிரைவரால் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. அந்நகரத்திற்கு துளியும் பரிச்சயம் இல்லாத இளம் பெண் வந்திறங்கி, ரேபிடோவில் பயணத்தை தொடங்கினார். போகும் வழியில் பெண்ணின் போன் பழுதானதை புரிந்த கொண்ட டிரைவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘‘நல்ல PG தேடி பிடிக்கலாம்மா. சவாரிக்கு காசு கூட வேண்டாம். நானும் பெண்ணை பெத்தவன்தாம்மா!’’ என கூற, அந்த நேரத்தில் தெய்வமாகவே மாறிபோனார்.
அதிமுக – பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியான நிலையில், இனி அதிமுகவையும் விமர்சிக்க தவெக தயாராவதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி தொடங்கியது முதலே திமுக, பாஜகவை கடுமையாகச் சாடி வந்த விஜய், அதிமுக விவகாரத்தில் சற்று மென்மையான போக்கையே கையாண்டு வந்தார். அது, ஒருவேளை கூட்டணிக்காக இருக்கலாம் எனப் பேசப்பட்டது. ஆனால், இனி 2026 தேர்தலுக்கான களத்தில் அவர்களையும் அடித்து விளையாட விஜய் ரெடியாகி வருகிறாராம்.
கடைக்கு சென்று ஏதாவது வாங்கிய பிறகு, திடீரென நெட் வேலை செய்யாது. கையிலும் பணம் இல்லாமல், தர்மசங்கடமான சூழலுக்கு ஆளாவோம். இனி, அந்த கவலை வேண்டாம். போனில் *99# என டயல் செய்யுங்கள். மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள பேங்கின் தகவல் வரும். அந்த மெனுவில் பணம் அனுப்ப, பேலன்ஸ் பார்க்க, பணம் பெற என்ற ஆப்ஷன்கள் வரும். பேங்க்கின் பின் நம்பரை போட்டு, பரிவர்த்தனைகளை எளிதாக செய்யலாம். SHARE IT.
படத்தின் டிக்கெட் விற்றுத்தீர்ந்து, நாளை காலை ரிலீஸ் என்னும் சூழலில், திடீரென வரும் தடை. இது பல படங்களுக்கு நடந்துள்ளது. இதில், ரசிகர்களுக்கு நேரடியாக பதில் சொல்ல வேண்டியது திரையரங்கு உரிமையாளர்கள் தான். சமாதானமாகாத சில ரசிகர்கள் திரையரங்கை அடித்து உடைக்கும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. ஏன் இந்த தடையை முன்னரே வாங்கக்கூடாது. யாரோ செய்யும் தவறால், யாரோ இன்னலை சந்திப்பது சரிதானா?
வெறுப்புணர்வு குறித்து யோகி ஆதித்யநாத் எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம் என CM ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். வாக்கு வங்கி அரசியலுக்கானது அல்ல; நீதிக்கான போர் என்றும் மொழித் திணிப்பையே எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மொழி அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்த ஸ்டாலின் முயல்வதாக யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியிருந்த நிலையில், தனது எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு வரும் 8ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. கடந்தாண்டு இறுதித் தேர்வின் போது, சில தேர்வுகளுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
IPL தொடர் மூலம் இந்திய ரசிகர்களை அதிகமாக கவர்ந்தார் டேவிட் வார்னர். இந்த ஆண்டு எந்த அணியும் ஏலத்தில் வாங்காத நிலையில் அவர், தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். ராபின்ஹூட் என்ற படத்தில் கேமியோ காட்சியில் அவர் சுமார் 2.50 நிமிடங்கள் வருகிறாராம். அதற்கு அவர் ₹2.50 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. IPL-ஐ விட, இதில் நல்லா துட்டு பார்க்கலாம் என நினைத்துவிட்டார் போலும்!
விலை வீழ்ச்சியால், காய்கறிகளை பறித்து விற்றாலும் கூலிக்கு கூட கட்டாத நிலையில் இருப்பதால் குப்பையில் கொட்டுகின்றனர் சில விவசாயிகள். கடனை வாங்கி காய்கறி பயிரிட்டால் தங்களைப் பிச்சை எடுக்க வைக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டதாக அவர்கள் புலம்புகின்றனர். குறிப்பாக, திண்டுக்கல் மொத்த சந்தையில் ஒரு கிலோ தக்காளி- ₹3, முருங்கை-₹7, பீட்ரூட்-₹4, கத்திரிக்காய்-₹7க்கு விற்பனையாகிறது. உங்கள் ஊரில் என்ன விலை?
தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் பேஸ்புக் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் வெளியாகும் தவறான கருத்து, ஆபாசப் படங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கும் நோக்கில் இந்த முடிவை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது. பேஸ்புக்கிற்குத் தடை விதிப்பதன் மூலம், மக்களின் கருத்துச் சுதந்திரத்தை அரசு முடக்குவதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
தமிழகத்தில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், வெப்ப பாதிப்பைத் தவிர்க்க பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் என பொதுச் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மீறி வெளியில் செல்வோர் குடிநீர், குடை ஆகியவற்றை எடுத்துச் செல்லுங்கள்.. SHARE IT
Sorry, no posts matched your criteria.