news

News March 27, 2025

ரசிகர்களுக்கு பர்த்டே ட்ரீட் கொடுத்த ராம் சரண்!!

image

இன்று ராம் சரணின் பர்த்டேவை முன்னிட்டு அவர் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளிவந்துள்ளது. ‘உப்பென்னா’ படத்தை இயக்கிய புச்சி பாபு சனா இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் படத்திற்கு, ‘பெத்தி’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் 2 போஸ்டர்களும் வெளிவந்துள்ளன. ஜான்வி கபூர் நாயகியாகவும், சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். உங்களுக்கு பிடிச்ச ராம் சரண் படம் எது?

News March 27, 2025

வாஷிங்டன் சுந்தருக்கு கூகுள் சுந்தர் ஆதரவு!

image

குஜராத் அணியின் ஆல்ரவுண்டரும், TN வீரருமான வாஷிங்டன் சுந்தருக்கு, கூகுள் CEO சுந்தர் பிச்சை ஆதரவு தெரிவித்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த IPL போட்டியில், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்காதது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதில் ஒரு ரசிகர் X பக்கத்தில் இதுபற்றி விமர்சிக்க, பதிலுக்கு சுந்தர் பிச்சை ‘‘எனக்கும் கூட வியப்பாகவே இருந்தது’’ என கமெண்ட் செய்திருக்கிறார்.

News March 27, 2025

இணையத்தில் கசிந்த நடிகையின் ‘பிரைவேட்’ வீடியோ

image

சில நாள்கள் முன்பு, சீரியல் நடிகையின் பிரைவேட் வீடியோ வெளியாகி, பெரும் சலசலப்பை உண்டாக்கியது. அது, பட வாய்ப்பிற்கான ‘Casting Couch’ வீடியோ என்கின்றனர். இவருக்கு இன்ஸ்டாவில் 420K ஃபாலோவர்ஸ் உள்ளனர். அதே நேரத்தில், இதனை சிலர் மார்பிங் வீடியோ என்றும் சொல்கின்றனர். சீரியல் நடிகைக்கே இந்த நிலை என்றால், அப்போது திரையுலகில் என்னவெல்லாம் நடக்கும் என்ற கமெண்ட்டுகளும் அதிகளவில் பதிவிடப்படுகின்றன.

News March 27, 2025

ஷ்ரேயாஸ் ஐயருக்கு BCCI பம்பர் ஆஃபர்?

image

வரும் 29ஆம் தேதி கவுகாத்தியில் BCCI கூட்டம் நடைபெறும் என தெரிகிறது. BCCI செயலாளர் தேவ்ஜித் சைகியா, தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உள்ளிட்டோர் பங்கேற்கும் இக்கூட்டத்தில், வீரர்களின் மத்திய ஒப்பந்தங்கள், பணியாளர்கள் ஆட்சேர்ப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஸ்ரேயாஸ் ஐயர், மீண்டும் மத்திய ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வரப்படுவார் என கூறப்படுகிறது.

News March 27, 2025

அதிமுகவினருக்கு இபிஎஸ் திடீர் அறிவுறுத்தல்!

image

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இந்த தீர்மானத்தை CM ஸ்டாலின் முன்மொழியவுள்ளார். இந்நிலையில், தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்பது குறித்து அதிமுக MLAக்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக பேரவையில் அதிமுகவினர் எப்படி செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

News March 27, 2025

தங்கம் விலை சவரனுக்கு ₹320 உயர்வு

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 27) சவரனுக்கு ₹320 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,235க்கும், சவரன் ₹65,880க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ₹111க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,11,000க்கும் விற்பனையாகிறது. நேற்று தங்கம் சவரனுக்கு ₹80 உயர்ந்திருந்த நிலையில், இன்று ₹320 உயர்ந்தது கவனிக்கத்தக்கது.

News March 27, 2025

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு ₹3,500 கோடி!

image

பட்ஜெட் அறிவிப்பின்படி, ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ், 2025-26ஆம் ஆண்டில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்ட ₹3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு தலா ₹3,50,000 லட்சம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

News March 27, 2025

இத கவனிச்சீங்களா.. T20I, IPLல் நிகழ்ந்த அதிசயம்!

image

கடந்த 24 மணிநேரத்தில், டி20 கிரிக்கெட்டில் ஒரு அறிய Coincidence நிகழ்ந்துள்ளது. 3 பேர் சொல்லி வைத்த மாதிரி அவுட்டாகாமல் 97 ரன்களை விளாசி இருக்கின்றனர். IPLல் ஸ்ரேயாஸ் ஐயர் 97*(42), குவின்டன் டி கொக் 97*(61) மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வீரர் Tim Seifert 97* (38) ரன்களை எடுத்துள்ளனர். இதனால், ‘வாட் எ மிராக்கிள்’ என ரசிகர்கள் திகைத்துப்போய் இருக்கிறார்கள்.

News March 27, 2025

கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு இபிஎஸ் மரியாதை

image

மறைந்த அதிமுக மூத்தத் தலைவர் கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு இபிஎஸ் நேரில் அஞ்சலி செலுத்தினார். உடல் நலக்குறைவால் நெல்லையில் நேற்று காலமான அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான கருப்பசாமி பாண்டியன், தென் மாவட்ட அதிமுகவில் முக்கிய முகமாக இருந்தவர். இந்நிலையில், பாளையங்கோட்டையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு இபிஎஸ் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

News March 27, 2025

டெபாசிட் வட்டியை குறைக்கும் வங்கிகள்

image

ஏப்ரல் மாதம் முதல் டெபாசிட் பணத்துக்கான வட்டியை குறைக்க வங்கிகள் திட்டமிட்டுள்ளன. கடந்த மாதம், ரிசர்வ் வங்கி, ரெபோ வட்டியை குறைத்தது. இதனையடுத்து, லோன்களுக்கான வட்டியை குறைத்த வங்கிகள் டெபாசிட் வட்டியில் மாற்றமில்லாமல் வைத்திருந்தன. இதனால், வங்கிகளின் லாபம் குறைவதால், அடுத்த மாதம் முதல் டெபாசிட் வட்டியை குறைக்கத் திட்டமிட்டுள்ளன. இதனால், மக்களின் FDக்கான வட்டி குறையும்.

error: Content is protected !!