India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க மாட்டோம் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. முன்னதாக, பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கதேச அணியின் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வைத்த கோரிக்கையை ஏற்க ஐசிசி மறுத்துவிட்டது. இதனால், குரூப் சி-யில் வங்கதேசத்திற்கு பதிலாக ஸ்காட்லாந்து இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோளில் புத்தகப் பையை சுமக்க வேண்டிய சிறுமி, வயிற்றில் குழந்தையை சுமப்பது பேரவலம். கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். அவருக்கு இன்ஸ்டா மூலம் 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது சிறுமி 3 மாத கர்ப்பமாக இருக்கிறாள். இந்த விஷயம் வெளியே தெரியவர, சிறுவன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒருதலை காதல் காரணமாக கோவையில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை கே.ஜி.கல்லூரியில் IT முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியை அதே கல்லூரியை சேர்ந்த மாணவன் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவி காதலை ஏற்காததால் கல்லூரி வளாகத்தில் வைத்தே அவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

NDA-வில் உள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பியூஷ் கோயலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுகவை வீழ்த்த வேண்டும் என நினைக்கும் அனைத்து கட்சிகளும் NDA-வில் இணைய வேண்டும் என வலியுறுத்தினார். கூட்டணி 100% முழுமை பெற்றவுடன் தொகுதி பங்கீடு குறித்து அறிவிப்பு வெளிவரும் என்றும், தமாக தனிச்சின்னத்தில் போட்டியிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு மார்ச் 2-ல் தொடங்கி மார்ச் 26-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு, மாணவர்களின் பதிவெண்ணுடன் கூடிய பெயர்ப் பட்டியல் அனைத்து HM-களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. <

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தமிழர் தேசம் கட்சி, திமுகவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. அதிமுக கூட்டணி வெற்றிக்காக பாடுபட்ட தங்களை அவர்கள் மதிக்கவில்லை என்ற கட்சி தலைவர் செல்வக்குமார், திமுக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 2022-ல் தொடங்கப்பட்ட இக்கட்சிக்கு 2024 மக்களவை தேர்தலின்போது அதிமுக, சிவகங்கை தொகுதியை ஒதுக்காததால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்தது.

தமிழ்நாட்டில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அலர்ட் விடுத்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன் பரவலாக கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், தற்போது வறண்ட வானிலை நிலவுகிறது. குறிப்பாக, காலையில் மட்டும் உறைபனி நிலவி வருகிறது. இந்நிலையில், ஜன.25-ம் தேதி திருச்சி, பெரம்பலூர், தி.மலை, கள்ளக்குறிச்சியில் கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் நாளை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

அரசியலில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் விஜய்யின் தவெகவிற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருகாலத்தில் சுயேச்சைகளுக்கு வழங்கப்பட்ட ‘விசில்’ இன்று பொதுச் சின்னமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கர்நாடகாவில் 2019-ல் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜுக்கும், தமிழகத்தில் 2021-ல் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகர் மயில்சாமிக்கும் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.

4 நாள்கள் தொடர்ச்சியாக வங்கிகள் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஜன.24 (4-வது சனி), ஜன.25. (ஞாயிறு), ஜன.26 (குடியரசு தினம்) ஆகிய 3 நாள்கள் ஏற்கெனவே விடுமுறையாகும். இந்நிலையில், வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே பணி வழங்கக்கோரி ஜன.27-ம் தேதி வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். அதனால், வங்கிக்கு சென்று முடிக்க வேண்டிய பணிகளை நாளைக்குள் முடித்துவிடுங்கள் நண்பர்களே!

1998-ம் ஆண்டு, ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் கரிமுல் ஹக், தனது தாயை இழந்தார். இனி ஆம்புலன்ஸ் கிடைக்காமல் யாரும் தவிக்கக்கூடாது என முடிவெடுத்தவர், தனது பைக்கை சிறு ஆம்புலன்ஸாக மாற்றினார். முதலுதவி கொடுக்கும் பயிற்சி பெற்றவர், அன்று முதல் 5,500 பேரை காப்பற்றியுள்ளார். மேற்குவங்கத்தை சேர்ந்த இவரை மக்கள் ‘ஆம்புலன்ஸ் தாதா’ என அழைக்கின்றனர். அவருக்கு, 2017-ல் பத்மஸ்ரீ வழங்கி இந்திய அரசு கெளரவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.