India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுகவில் ஓபிஎஸ்ஸை இணைக்க முடியாது என இபிஎஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார். அதிமுகவினர் கோயிலாக கருதும் கட்சியின் தலைமை அலுவலகத்தை ரவுடிகளை வைத்து ஓபிஎஸ் தாக்கியதாக குற்றம்சாட்டிய அவர், அதிமுகவில் இருக்கவே தகுதியற்றவர் என விமர்சித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தலைவிரித்தாடுவதாகக் கடுமையாகச் சாடினார்.
வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு, சேலம், விருதுநகர் மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என கூறியுள்ள அவர், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
குரோஷி ஆப்ரகாமின் கதையை சொல்கிறது ‘L2: எம்புரான்’. பிளஸ்: மோகன்லால் அசத்தி இருக்கிறார். இன்டர்வெல் காட்சி, இரண்டாம் பாதியின் அரசியல் மற்றும் காட்டில் நடக்கும் ஆக்ஷன் பிளாக்கிற்கு பயங்கர கிளாப்ஸ். மேக்கிங் தரமாக உள்ளது. மியூசிக், ஒளிப்பதிவு இரண்டுமே பலம். பிருத்விராஜ் ஸ்டைலிஷான படம் கொடுத்துள்ளார். மைனஸ்: படத்தின் நீளம் கொஞ்சம் ஜாஸ்தி. மெதுவான முதல் பாதி காட்சிகள் சோதிக்கின்றன. Rating: 3/5.
ரச்சின், கான்வே, போல்ட் போன்ற முன்னணி வீரர்கள் IPL தொடரில் விளையாடி வருகின்றனர். ஆனால் அடுத்த நிலை வீரர்களை வைத்து பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் நியூசிலாந்து விளையாடி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. பிரேஸ்வெல் தலைமையிலான அணி டி20 தொடரை 4 – 1 என வென்றது. காயம் காரணமாக ODI தொடரில் இருந்து கேப்டன் டாம் லாதம் விலகிய நிலையில் மைக்கேல் பிரேஸ்வெல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜகவுடனான கூட்டணியை அதிமுக Ex அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உறுதிப்படுத்தியுள்ளார். இன்று காலை சட்டப்பேரவைக்குச் சென்றபோது பாமகவின் ஜி.கே.மணி, அருள் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது BJP, PMK, ADMK எனப் பேசியவர், “நாங்க கூட்டணிங்க” என்றார். முன்னதாக முன்னாள் அமைச்சர் <<15900990>>ஆர்.பி.உதயகுமார்<<>> அமித்ஷாவை இரும்பு மனிதர் எனப் புகழ்ந்து வீடியோ வெளியிட்டது கவனிக்கத்தக்கது. உங்கள் கருத்து என்ன?
விதிகளை மீறி விண்ணப்பிக்கப்பட்டிருந்த 2000 விசாக்களுக்கான Appointments-களை அமெரிக்க தூதரகம் ரத்து செய்துள்ளது. இதுபோன்ற மோசடிகளை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என தெரிவித்த அமெரிக்க தூதரகம் இனிமேல் இந்த நடவடிக்கை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், தவறான வழிகளில் விசாவுக்கான Appointments பெறுபவர்களின் கணக்குகள் முடக்கப்படுவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தங்களது பயனர்களுக்கு ‘Caller Name Presentation’ வசதியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளன. இது, போனில் உங்களுக்கு அழைப்பு விடுக்கும் நபரின் பெயரைக் காண்பிக்கும். ஆன்லைன் மோசடிகள், போலி அழைப்புகளைத் தடுக்க TRAI முன்பு இதை முன்மொழிந்தது. இந்நிலையில், தற்போது Jio, Airtel, Vi நிறுவனங்கள் இந்த வசதியை செயல்படுத்த தயாராக உள்ளன. KYC ஆவணத்தின் அடிப்படையில் இப்பெயர்கள் காட்டப்படும்.
சட்டப்பேரவையில் வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனை முன்மொழிந்து உரையாற்றிய ஸ்டாலின், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா, மாநில சுயாட்சியை பாதிக்கும் என்றார். மத உரிமையை பாதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் சொன்ன திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. எனவே, வக்பு வாரிய மசோதாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
பிரபல ஹாலிவுட் நடிகை சிந்தியானா சாண்டேஞ்சலோ (Cindyana santangelo) மரணத்திற்கு அழகுக்காக செலுத்தப்பட்ட ஊசிகள் காரணமல்ல என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 58 வயதான சிந்தியானா, நேற்று திடீரென உயிரிழந்தார். மிகவும் அழகாக மாற அவர் எடுத்துக் கொண்ட ஊசியே இறப்புக்கு காரணம் எனத் தகவல் பரவியது. 1967இல் பிறந்த நடிகை சிந்தியானா, ‘ER’, ‘Married… With Children’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். #RIP
ஆலிம் ஹக்கிம் என்னும் இவர் ஒரு ஹேர் ஸ்டைலிஸ்ட். முடி வெட்டுவதில் மிகவும் புகழ்பெற்ற இவரை ‘ஹேர் குரு’ எனவும் வர்ணிக்கின்றனர். சினிமா நட்சத்திரங்களில் தொடங்கி, கிரிக்கெட்டர்களுக்கும் இவர் தான் ஃபேவரிட். குறைந்தபட்சமாக, ஒருவருக்கு முடிவெட்ட இவர் ₹1 லட்சம் வரை வாங்குகிறாராம். அப்போ அதிகபட்சம் எவ்வளவு இருக்கும் என யூகித்து பாருங்கள். நீங்க அதிகபட்சமாய் முடி வெட்ட செலவு பண்ண காசு எவ்வளவு?
Sorry, no posts matched your criteria.