India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இபிஎஸ்ஸூக்கு CM ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்டார். அண்மையில் இபிஎஸ் டெல்லி சென்றிருந்த நிலையில், பாஜக தலைவர்களிடம் இருமொழிக் கொள்கையை வலியுறுத்துமாறு ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருந்தார். டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தப் பின் பேசிய இபிஎஸ் தமிழக பிரச்னைகள், இருமொழிக் கொள்கை விவகாரம் குறித்து பேசியதாக தெரிவித்திருந்தார். இதற்காக பேரவையில் இன்று CM ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்களுக்கு தடை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரைப்படம் இன்று வெளியாகவிருந்த நிலையில், ஒப்பந்தத்தை மீறியதாக ஐவிஒய் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தகாத உறவைக் கண்டித்த கணவனை காதலனுடன் சேர்ந்து கொன்ற பெண் மற்றும் அவரது காதலனுக்கு ஓசூர் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கிருஷ்ணகிரி உன்னிசெட்டி கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் கடந்த 2021இல் மர்மமான முறையில் இறந்தார். இந்த வழக்கை விசாரித்த போலீசார், ஐயப்பனின் மனைவி ரூபா(27), அவரது காதலன் தங்கமணி(25) இருவரும் ஐயப்பனை கழுத்தை நெரித்து கொன்றதை கண்டுபிடித்த நிலையில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மீண்டும் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத் திணறல் காரணமாகக் கடந்த 3ஆம் தேதி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 3 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். இந்நிலையில், இன்று மீண்டும் கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக அரசு கொண்டு வந்த தனித்தீர்மானம் பேரவையில் நிறைவேறியது. முன்னதாக பேரவையில் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து CM ஸ்டாலின் உரையாற்றினார். இதற்கு அதிமுக, புரட்சி பாரதம், தவாக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து தனித்தீர்மானம் நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார்.
OLA, UBER, RAPIDO போன்ற பைக் ரைடிங், கேப் புக்கிங் நிறுவனங்களின் ஆதிக்கத்தை தகர்க்க மத்திய அரசு புதிய முடிவெடுத்துள்ளது. அந்தவகையில், அதிக கமிஷன் கொடுத்து வாகன ஓட்டிகள் நஷ்டமடைவதை தடுத்து, இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாகப் பயன்பெறும் வகையில்,’Sahkar Taxi’ என்ற செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கூட்டுறவுத் துறை மூலம், இச்செயலி இயக்கப்படும் என மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
TN முழுவதும் #அந்த_தியாகி_யார்? என்ற கேள்வியுடன் ADMK சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. மகளிருக்கு ₹1000 கொடுப்பது போல கொடுத்து ₹1000 கோடி அமுக்கியது யார்? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. TASMAC முறைகேட்டிற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக குற்றஞ்சாட்டி வந்த எதிர்க்கட்சிகள், தற்போது யார் அந்த சார்? பாணியில், அந்த தியாகி யார்? என்ற பிரசாரத்தை தொடங்கி DMKவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளன.
வக்பு வாரிய மசோதாவுக்கு எதிரான தனித்தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. பேரவையில் தீர்மானத்தின் மீது பேசிய அதிமுக MLA வேலுமணி வக்பு வாரியத்தின் அடிப்படையை தகர்க்கும் வகையில் மசோதா இருப்பதாகவும், 40–க்கும் மேற்பட்ட திருத்தங்களை கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது என்றும் சாடினார். தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக MLAக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
B4U நிறுவனம் தொடர்ந்த வழக்கில் வீர தீர சூரன் படம் தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அதில், B4U நிறுவனத்திற்கு படத்தை தயாரித்த HR pictures ₹7 கோடி டெபாசிட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்தம் குறித்த அனைத்து ஆவணங்களையும் 48 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்பிக்கவும் கெடு விதித்துள்ளது. படம் எப்போது வெளிவரும் என்ற தகவல் இல்லை.
இறக்குமதி வாகனங்களுக்கு 25% வரை கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருப்பது, இந்தியாவையும் பாதிக்கும். அமெரிக்க சந்தையில் வலுவான தடத்தை பதித்திருக்கும் டாடா மோட்டார்ஸின் ஜாகுவார் லேண்ட் ரோவர், 650 சிசியை களமிறக்கும் ராயல் என்ஃபீல்டு, ஐஷர் மோட்டார்ஸ் ஆகிய இந்திய நிறுவனங்கள் பாதிப்பை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.