India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், சூட்டைத் தணிக்க தர்பூசணி ஜூஸ் கடைகளுக்கு செல்பவர்கள் ஏராளம். அதைவிட நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுவது பாதாம் பிசின்தான். இரவு ஊறவைத்த பாதாம் பிசினை, காலையில் பால், மோர் உள்ளிட்ட பானங்களில் கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்குமாம். உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கவும், ஜீரணக் கோளாறை சரிசெய்யவும் இது ரொம்பவே உதவியாக இருக்குமாம்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவியை இபிஎஸ், தானாக ராஜினாமா செய்யாவிட்டால் அவமானங்களை சந்திக்க நேரிடும் என ஓபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்சி அலுவலகத்தைத் தாக்கியதாக ஓபிஎஸ் மீது <<15901584>>இபிஎஸ் <<>>குற்றம்சாட்டியிருந்த நிலையில், நாங்கள் கட்சி ஆபிஸை தாக்கவில்லை, சென்னையில் உள்ள 8 மாவட்டச் செயலாளர்கள்தான் தங்களைத் தாக்கியதாக ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார். மேலும், அதிமுக ஒன்றிணைந்தால்தான் வெற்றி கிட்டும் என்றார்.
மலையாளத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் மோகன்லாலின் எம்புரான் படம் உருவாக்கபட்டது. லூசிபர் வெற்றிக்கு பிறகு அதன் 2ஆம் பாகமான எம்புரானை பிரித்விராஜ் எடுத்துள்ளார். எம்புரான் பான் இந்தியா படமாக இன்று ரிலீஸ் செய்யப்பட்டது. வெளியான சில மணி நேரங்களிலேயே முழுப் படமும் Filmyzilla, Movierulex, Telegram, Tamilrockers போன்ற தளங்களில் வெளியானது. இதனால் படக்குழு செய்வதறியாது தவிக்கின்றனர்.
CM ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மீண்டும் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத் திணறல் காரணமாகக் கடந்த 3ஆம் தேதி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 3 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். இந்நிலையில், இன்று காலை திடீரென வாந்தி எடுத்ததால், பரிசோதனைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை காண CM செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
TNல் இதுவரை தமிழ், ஆங்கிலத்தில் மட்டும் வெளிவந்த வானிலை அறிக்கை, தற்போது இந்தி மொழியிலும் வெளியாகியுள்ளது, விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் இந்தியா முழுவதும் பிராந்திய மொழி, ஆங்கில மொழியில் வானிலை அறிக்கை வெளிவரும் நிலையில், TNல் மட்டும் இந்தி மொழியுடன் சேர்த்து வெளியாகி உள்ளது. ஏற்கெனவே, இங்கு இருமொழிக் கொள்கை சர்ச்சை நிலவி வரும் நிலையில், இந்தி மொழி சேர்க்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியில் இல்லாதபோது எங்களை யார் மிரட்ட முடியும் என அமைச்சர் சேகர்பாபுவுக்கு, இபிஎஸ் பதில் அளித்துள்ளார். திமுகவை தவிர வேறு எந்தக் கட்சியும் எங்களுக்கு எதிரி இல்லை; எனவே ஒருமித்த கருத்துக் கொண்ட கட்சிகளுடன் தேர்தலில் கூட்டணி வைப்போம் எனவும் இபிஎஸ் கூறியுள்ளார். மிரட்டல் காரணமாகவே பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க அதிமுக முயன்று வருவதாக சேகர்பாபு கருத்து தெரிவித்திருந்தார்.
வரும் ஜூன் 2ம் தேதி இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளன்று அவருக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். சினிமாவில் தடம் பதித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் அவருக்கு இந்த பாராட்டு விழா நடத்தப்படுவதாக கூறினார். லண்டனில் சிம்பொனி அரங்கேற்றிய இளையராஜாவுக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என அவர் அறிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.
பெங்களூருவில் 4 பேர் கொண்ட ஒரு நடுத்தரக் குடும்பத்தை நடத்த மாதம் ₹35,887 தேவைப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுவே இந்தியாவின் காஸ்ட்லி நகரமாம். அதே நேரத்தில், மும்பையில் ₹33.321, டெல்லியில் ₹33,308, ஹைதராபாத்தில் ₹31,253 தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் ₹29,276 சம்பாதித்தால் போதுமானது எனவும் குறிப்பிட்டுள்ளனர். உங்களுக்கு மாதம் எவ்வளவு தேவைப்படுகிறது?
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக மாநிலங்களவை காங்கிரஸ் கட்சியின் கொறடா ஜெய்ராம் ரமேஷ் உரிமை மீறல் நோட்டீசை நேற்று அளித்திருந்தார். அவையில் சோனியா காந்தி மீது அமித்ஷா அவதூறு சுமத்தியதாக கூறி, உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தினார். ஆனால் அதனை மாநிலங்களவை சபாநாயகர் ஜெக்தீப் தன்கர் ஏற்க மறுத்து கோரிக்கையை தள்ளுபடி செய்தார்.
திமுக இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளரும், மூத்த நிர்வாகியுமான தேசிங்குராஜன் காலமானார். அவரது மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “தருமபுரி மேற்கு மாவட்ட மூத்த கழக முன்னோடிகளில் ஒருவரான தேசிங்குராஜன் மறைவு செய்தி வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கல்” எனக் குறிப்பிட்டுள்ளார். #RIP
Sorry, no posts matched your criteria.