news

News March 27, 2025

நான்கு நாள்கள் அரசு விடுமுறை

image

ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டில் 4 நாள்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கபட்டுள்ளது. ஏப்ரல் 1 – வங்கிகள் கணக்கு முடிப்பு, ஏப்ரல் 10 – மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 14 – தமிழ் வருடப்பிறப்பு, ஏப்ரல் 18 புனித வெள்ளி என விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சனி, ஞாயிறு என்று மக்களுக்கு அடுத்த மாதம் தொடர் கொண்டாட்டம்தான்.

News March 27, 2025

அதிமுகவில் நொடிக்கு நொடி மாறும் களம்!

image

EPS டெல்லி சென்று திரும்பிய பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அமித்ஷாவை இரும்பு மனிதர் என <<15900990>>R.B.உதயகுமார்<<>> கூறிய நிலையில், பாமகவை ‘நாங்க கூட்டணிங்க’ என திண்டுக்கல் சீனிவாசன் பேசியது வரை காலை நேரக் காட்சிகளாக இருந்தது. இந்நிலையில், பிற்பகலில் பேசிய ஓபிஎஸ், இபிஎஸ் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் அவமானங்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். என்னதான் நடக்குது?

News March 27, 2025

நண்பர் மோடியை பார்க்க இந்தியா வரும் புடின்

image

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, ரஷ்ய அதிபர் புடின் விரைவில் இந்தியா வர உள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இருப்பினும் எப்போது வருகை தர உள்ளார் என்பது குறித்த தகவல்களை அவர் பகிரவில்லை. உக்ரைன் போர் தொடங்கி ரஷ்ய அதிபர் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். 3ஆவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், முதல் பயணமாக மோடி கடந்த ஆண்டு ரஷ்யா சென்றார்.

News March 27, 2025

வீர தீர சூரன் படத்திற்கான சிக்கல் நீங்கியது…!

image

விக்ரம் நடிப்பில் இன்று வெளியாகவிருந்த வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட 4 வாரங்கள் விதிக்கப்பட்டிருந்த தடையை டெல்லி ஐகோர்ட் நீக்கியுள்ளது. ஓடிடி உரிமம் விற்கப்படும் முன்பு படம் வெளியிடப்படுவதை எதிர்த்து B4U நிறுவனம் தொடர்ந்த வழக்கில் முதலில் தடை விதித்த ஐகோர்ட், இப்போது அந்த தடையை நீக்கியுள்ளது. இதனால், இன்று மாலை படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 27, 2025

தமிழகத்தை உலுக்கிய வழக்கில் வருகிறது தீர்ப்பு

image

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில், கீழமை நீதிமன்றம் இரண்டு மாதங்களில் தீர்ப்பளிக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளத்தில் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் போலீசார் தாக்கியதில் அவர்கள் உயிரிழந்தனர். இவ்வழக்கில், ஏற்கெனவே 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மதுரை மாவட்ட கோர்ட் விசாரித்து வருகிறது. தற்போது, இதில் 2 மாதங்களில் தீர்ப்பளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

News March 27, 2025

மார்வெலின் அடுத்த படைப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்

image

உலகம் முழுவதும் அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோ படத்துக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’, ‘அவெஞ்சர்ஸ் என்ட்கேம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் அடுத்ததாக ‘அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே’ படத்தை இயக்க உள்ளனர். இதில் ராபர்ட் டவுனி ஜூனியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். க்றிஸ் ஹேம்ஸ்வொர்த், டாம் ஹிட்டில்ஸ்டன், ஆண்டனி மேக்கி உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

News March 27, 2025

இன்று Ghibli தான் ட்ரெண்டிங்! நீங்களும் ட்ரை பண்ணுங்க!

image

ஏதேதோ புது டெக்னாலஜியை உருவாக்கி தினமும் நம்மை ஆச்சரியப்படுத்தி வருகின்றனர். அப்படி இன்று காலை தூங்கி எழுந்ததுமே, மொத்த நெட்டிசன்களையும் இந்த Ghibli ட்ரெண்ட் அலற வைத்துள்ளது. ChatGPTயின் புதிய இமேஜ் ஜெனரேட்டர் தான் இந்த Ghibli. ஒரு போட்டோவை கொடுத்தால், அழகாக Ghibli ஸ்டைலில் மாற்றிக் கொடுக்கிறது. Ghibli என்பது ஜப்பானின் ஃபேமஸ் கார்ட்டூன் வடிவங்கள் ஆகும். நீங்களும் ட்ரை பண்ணுங்க!

News March 27, 2025

தமிழ்நாடு குறித்து யோகி பேசத் தேவையில்லை: கனிமொழி

image

தமிழ்நாடு குறித்து தேவையற்ற கருத்துகளை உ.பி. முதல்வர் பேசி வருவதாக கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, தமிழ்நாட்டை பற்றி பேச எந்த உரிமையையும் யோகிக்கு இல்லை என்றார். 1930களில் இருந்து மொழிக்காக தமிழ்நாடு போராடி வருகிறது என்றும் மும்மொழி கொள்கைக்கு கையெழுத்திடாமல் நிதியளிக்க மாட்டோம் என்றால் திமுக பதிலடி கொடுக்கும் எனவும் கூறினார்.

News March 27, 2025

வீர தீர சூரன் வெளியீட்டில் என்ன பிரச்னை?

image

‘வீர தீர சூரன்’ படத்தை தயாரிக்க HR Pictures, B4U நிறுவனத்திடம் முதலீடு பெற்றது. அதற்காக, B4U நிறுவனத்திற்கு படத்தின் OTT உரிமம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், OTT-யில் விற்பனை ஆகவில்லை. அதற்கு முன்பாக, படத்தை வெளியிட்டால், பெரிய நஷ்டம் ஏற்படும் எனக் குறிப்பிட்டு, பட வெளியீட்டிற்கு B4U நிறுவனம் தடை கோரியது. பெரிதும் எதிர்பார்க்கபட்ட படம் வெளியாகததால், ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

News March 27, 2025

இந்தியில் வானிலை அறிக்கை ஏன்? RMC இயக்குநர் விளக்கம்!

image

தமிழக <<15902755>>வானிலை அறிக்கையில்<<>> இந்தி மொழி சேர்க்கப்பட்டது ஏன் என்பது குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் அமுதா விளக்கமளித்துள்ளார். இந்திய வானிலை மைய அதிகாரிகள் அறிவுறுத்தலால், இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தியில் முன்னறிவிப்பு வெளியிட சென்னை வானிலை மையத்தில், புதிதாக மொழிபெயர்ப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!