news

News March 27, 2025

Layoff: ஊழியர்களை மீண்டும் சோதிக்கும் இன்போசிஸ்

image

இன்போசிஸ் நிறுவனம், தனது மைசூரு அலுவலகத்தில் பயிற்சி பெற்று வந்த 30 – 45 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு 1 மாத ஊதியம், மேலும், அவர்கள் பணியாற்றுவதற்கு தகுந்த 12 வார பயிற்சி Infosys Business Process Management-ல் அளிக்கப்படும் என உறுதி அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த மாதம் 400 ஊழியர்களை இன்போசிஸ் பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News March 27, 2025

முட்டை சைவமா அசைவமா?

image

இதென்ன கேள்வி என நீங்கள் நினைக்கலாம். ஆனால் பலரும் முட்டையை சைவம் லிஸ்ட்டிலேயே வைத்துள்ளனர். முட்டை கருவுறாத நிலையில் இருப்பதால், அவை இறைச்சிக்கான லிஸ்ட்டில் வராது என அவர்கள் வாதிடுகின்றனர். ஆனால், முட்டை வேறொரு உயிரினத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படுவதால் அவை இறைச்சியே என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். எப்படி இருப்பினும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு முட்டை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

News March 27, 2025

கொலை மிரட்டல்களால் எனது உலகம் சுருங்கிவிட்டது: சல்மான்

image

வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு மற்றும் தொடர் கொலை மிரட்டல்கள் குறித்து நடிகர் சல்மான் கான் மனம் திறந்துள்ளார். என்ன நடந்தாலும், கடவுள் நிர்ணயித்த விதி வரை தான் தன்னால் வாழ முடியும் என அவர் வேதனை தெரிவித்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட் – வீடு என தனது உலகம் சுருங்கி விட்டதாகவும், எப்போது வெளியே சென்றாலும் அதிக பாதுகாவலர்களுடன் செல்வது, ஒருவித அசௌகரியத்தை தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

News March 27, 2025

ஒவ்வொரு நாளும் போராட்டமா? CM ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

image

100 நாள் வேலை திட்டத்தில் உழைப்பை உறிஞ்சிவிட்டு, மத்திய அரசு ஊதியத்தை தர மறுப்பதாக CM ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த திட்டத்திற்கான ₹4,034 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்காததைக் கண்டித்து, தமிழகத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் வரும் 29ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். மேலும், உரிய வரிப்பகிர்வை பெற ஒவ்வொரு நாளும் போராட வேண்டியிருப்பதாகவும் சாடியுள்ளார்.

News March 27, 2025

வங்கியில் தங்கம் டெபாசிட் (GMS) திட்டம் நிறுத்தம்!

image

தங்கத்தை வங்கியில், டெபாசிட் செய்து வட்டி வருமானம் ஈட்டும், தங்க முதலீடு திட்டத்தை நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 2015இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்தபின், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, தங்கத்தை முதலீடு செய்திருந்தால், தற்போதைய விதிகளின்படி, அதற்கான காலம் முடியும் வரை பலன்களைப் பெறலாம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

News March 27, 2025

புடின் சீக்கிரம் உயிரிழப்பார்: ஜெலன்ஸ்கி

image

ரஷ்ய அதிபர் புடின் விரைவில் உயிரிழப்பார், அப்படித்தான் போர் முடிவுக்கு வரும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். புடினுக்கு நரம்பியல் நோய், கேன்சர் என கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் பரவி வரும் நிலையில், ஜெலன்ஸ்கி இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆனால், ரஷ்ய அதிபரின் ஆரோக்கியம் சார்ந்த செய்திகளை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.

News March 27, 2025

பிரபல நடிகை மரணம்: விலகியது மர்மம்

image

பிரபல ஹாலிவுட் நடிகை பமிலா பாச் கடந்த 5-ம் தேதி உயிரிழந்தார். அவரது சாவில் மர்மம் இருந்துவந்த நிலையில், அதற்கான காரணம் தெரியவந்துள்ளது. தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதால் ஏற்பட்ட காயத்தால் அவர் உயிரிழந்ததாக, மரண சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. பே வாட்ச், சைரன்ஸ், நைட் ரைடர் உள்ளிட்ட படங்களில் அவரது கேரக்டர்களால், ரசிகர்களிடையே அவர் மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 27, 2025

கைகளை கிழித்துக்கொண்ட 40 பள்ளி மாணவர்கள்

image

குஜராத்தின் அம்ரேலியில் உள்ள முன்ஜியாசர் தொடக்கப்பள்ளியில் 40 மாணவர்கள் தங்கள் கைகளை கிழித்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 7ம் வகுப்பு மாணவன் ஒருவன் மற்றவர்களிடம், பிளேடால் கையை கீறிக்கொள்பவர்களுக்கு ₹10 கிடைக்கும் என்றும் செய்யாதவர்கள் ₹5 செலுத்த வேண்டும் எனவும் சவால் விட்டது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் Blue Whale Challenge-ஐ நினைவுபடுத்தியுள்ளது.

News March 27, 2025

USAவின் வரிப்போர்: இந்தியா நிலை?

image

USAவில் இந்திய இறக்குமதி பொருட்களுக்கான வரிவிதிப்பில், சில தளர்வுகள் வழங்கப்படலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் சீனா, கனடா, மெக்ஸிகோ நாடுகளின் இறக்குமதிகளுக்கு ஏற்படும் தாக்கம் இந்தியாவிற்கு ஏற்படாது என கூறப்படுகிறது. முன்னதாக, ₹2,300 கோடி மதிப்பிலான USA இறக்குமதிகளுக்கு, இந்தியா நேற்று வரி குறைப்பு செய்ய ஒப்புக் கொண்டது. வரும் ஏப்.2 முதல் USAவில் புது வரிக் கொள்கை அமலாக உள்ளது.

News March 27, 2025

சம்மரில் இந்த ஜூஸ் தான் பெஸ்ட்!

image

இந்த சம்மரில் துளசி ஜூஸ் அல்லது துளசி சர்பத் ட்ரை பண்ணுங்க. இதை செய்யுறதும் சிம்பிள் தான். 20-25 துளசி இலைகளை கழுவி, தண்ணீரில் கொதிக்க வைத்து, பிறகு ஆற வையுங்கள். அத்துடன், 1 ஸ்பூன் தேன், சிறிது எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்துக் கொள்ளவும். இதில், ஐஸ் சேர்த்தால், சுவையான ‘துளசி ஜூஸ்’ ரெடி! இந்த துளசி ஜூஸ் மூலம், உடல் சூட்டை தணித்து கொள்வதுடன், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக் கொள்ளலாம்.

error: Content is protected !!