news

News March 27, 2025

நாளை பத்தாம் வகுப்பு தேர்வு தொடக்கம்

image

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. மொத்தமுள்ள 12,487 பள்ளிகளில் 8,86,970 மாணவர்கள், 25,841 தனித்தேர்வர்கள், 273 சிறைக்கைதிகள் என மொத்தம் 9,13,084 பேர் இந்த தேர்வினை எழுதவுள்ளனர். இதற்காக, 4,113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 48,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

News March 27, 2025

ரூ.400 சம்பாதிப்பவருக்கு ரூ.7.8 கோடி வரி செலுத்த நோட்டீஸ்

image

தனக்கு வந்த நோட்டீஸைப் பார்த்து உ.பி. அலிகாரில் ஜூஸ் கடை நடத்தி வரும் முகமது ரஹீஸ்-க்கு தூக்கிவாரி போட்டுள்ளது. ரூ.7.79 கோடி வருமான வரி நிலுவையைச் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்ததுதான் அந்த அதிர்ச்சிக்கு காரணம். தினமும் 400 ரூபாய் சம்பாதிக்கும் தன்னால், எப்படி கோடிக்கணக்கில் வரி செலுத்த முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வழக்கறிஞரை நாடி இருப்பதாகவும் ரஹீஸ் குறிப்பிட்டுள்ளார்.

News March 27, 2025

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்

image

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று மாலை நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை புதிய உச்சமாக $3,091 அமெரிக்க டாலர்களை தொட்டது. இந்த விலையை மையப்படுத்தியே, இந்தியாவில் தங்க விலை நிர்ணயம் செய்யப்படுவதால், நாளை காலை ரூபாயின் மதிப்பிலும் தங்கம் விலை உயரக்கூடும். தங்க நகை வாங்கும் திட்டமுள்ளோர், இன்று வாங்குவது சிறந்தது.

News March 27, 2025

நடிகர் பிரபாஸுக்கு திருமணம்? உண்மை இதுதான்!

image

நடிகர் பிரபாஸுக்கு இந்த ஆண்டில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் கசிந்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர் ஒருவரின் மகளை அவர் மணக்க உள்ளதாகக் கூறப்பட்டது. கல்யாண பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் பரவிய நிலையில், இது முற்றிலும் வதந்தி என பிரபாஸ் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. அவருக்கு தற்போது 45 வயதாகிறது குறிப்பிடத்தக்கது.

News March 27, 2025

கடத்தல் நாயகி ரன்யாவுக்கு ஜாமின் மறுப்பு

image

துபாயில் இருந்து ₹12.56 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த வழக்கில் கடந்த 3ம் தேதி நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். அவருக்கு உறுதுணையாக இருந்த தெலுங்கு நடிகர் தருண் ராஜுவும் கைதானார். தனது தந்தை காவல் அதிகாரி என்பதால், அதை வைத்து விமான நிலைய அதிகாரிகளை பலமுறை ஏமாற்றி ரன்யா தங்கத்தை கடத்தியுள்ளார். இந்நிலையில் ஜாமின் கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது.

News March 27, 2025

ஏப்ரல் மாதம் முதல் வரும் முக்கிய மாற்றங்கள்

image

* பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய வருமான வரிமுறை ஏப்ரல் 1 முதல் அமலாகிறது
* மாதம் முதல் தேதி சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு
* சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை வங்கிகள் மாற்றவுள்ளன.
* தனது ரிவார்ட் முறையை SBI வங்கிகள் மாற்றவுள்ளன.
* UPI Collect Payment வசதியை ரூ. 2000ஆக குறைத்துள்ளது NPCI.

News March 27, 2025

RCB-க்கு 17 ஆண்டுகளாக தண்ணி காட்டும் சேப்பாக்கம்…!

image

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை ஆர்சிபி வீழ்த்தியபோது, விராட் கோலி சர்வதேச போட்டிகளில் விளையாடியதில்லை. தோனி கேப்டனாக 16 சர்வதேச போட்டிகளில் மட்டுமே வென்றிருந்தார். அப்போது, ஓய்வு பெறாமல் இருந்த சச்சின் 81 சதங்கள் மட்டுமே அடித்திருந்தார். ஆம், 2008 மே 21-ம் தேதிக்கு பிறகு சிஎஸ்கே அணியை சேப்பாக்கத்தில் ஆர்சிபி வென்றதே இல்லை. நாளைய நாள் எப்படி அமையும்? உங்கள் கருத்து என்ன?

News March 27, 2025

செப்டிக் டேங்கில் பெண் உடல்… சிக்கிய பூசாரி… கோர்ட் அதிரடி

image

ஹைதராபாத்தில் பெண்ணை கொலை செய்த பூசாரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2023-ல் பூசாரி வெங்கட சாய் சூர்யா கிருஷ்ணா, ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். அந்த பெண் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால், அவரை கொலை செய்து உடலை வீட்டின் செப்டிக் டேங்கில் வெங்கட சாய் வீசியுள்ளார். வழக்கில் சாட்சியங்களை அழித்ததற்காக கூடுதலாக 7 ஆண்டுகள் விதித்தும் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

News March 27, 2025

அம்மாடியோவ்.. ₹34.31 லட்சம் கோடி சொத்து!

image

உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் 4ஆவது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார். $400 பில்லியன் (₹34.31 லட்சம் கோடி) சொத்து மதிப்பை தாண்டிய முதல் ஆளாகவும் மஸ்க் உருவெடுத்துள்ளார். டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு அவரது சொத்து மதிப்பு 82% உயர்ந்துள்ளது. இதில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 2ஆம் இடத்திலும் ($266 பில்லியன்), மெட்டா நிறுவனர் மார்க் 3ஆம் இடத்திலும் ($242 பில்லியன்) உள்ளனர்.

News March 27, 2025

5 நாள்கள் தொடர் விடுமுறை

image

ஏப்ரல் மாதத்தில் 4 நாள்கள் அரசு விடுமுறை வருவது மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. அதேநேரம், ஏப்ரல் 10 & 14 ஆகிய தேதிகளில் வரும் விடுமுறை மேலும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. ஏன் தெரியுமா? ஏப்ரல் 10ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது. வெள்ளிக்கிழமை மட்டும் நீங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டால், பின்னர் சனி, ஞாயிறு, திங்கள் என 5 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. என்ன டூருக்கு பிளான் பண்ணியாச்சா?

error: Content is protected !!