news

News March 28, 2025

CBIல் மாற்றம் கொண்டு வர திட்டம்

image

CBI நடைமுறையில் மாற்றம் கொண்டு வர நாடாளுமன்ற நிலைக்குழு திட்டமிட்டுள்ளது. மாநிலங்களின் ஒப்புதலை பெறாமலேயே, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஒரு சட்டத்தை முன்மொழிந்துள்ளது. அதேபோல், UPSC, SSC போன்று CBIக்கும் தனியாக ஒரு தேர்வு, ஆட்சேர்ப்பு முறையை உருவாக்கவும், சைபர் க்ரைம், ஃபாரன்ஸிக்ஸ் துறையில் லேட்டரல் எண்ட்ரி மூலம் நிபுணர்களை நியமிக்கவும் பரிந்துரைத்துள்ளது.

News March 28, 2025

பாலியல் உறவு: ஆண்களை மிஞ்சும் பெண்கள்…

image

வாழ்நாளில் சராசரியாக அதிக துணைவர்கள் (பாலியல் உறவில்) கொண்டுள்ளதில், தமிழகத்தில் ஆண்களை(1.8 பேர்) விட பெண்கள்(2.4 பேர்) முன்னிலையில் உள்ளதாக மத்திய அரசின் NFHS ஆய்வு (2019-21) கூறுகிறது. இந்திய அளவில் ஆண்கள் சராசரியாக -1.5, பெண்கள் -1.8 பாலியல் துணைவர்களை கொண்டுள்ளனர். மேலும், நகர்ப்புறங்களை விட, கிராமப்புறங்களில் தான், ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு கொள்வது அதிகமாக உள்ளதாம். உங்கள் கருத்து?

News March 28, 2025

பலவீனமாக இருந்தால் யார் மதிப்பார்கள்? ராகுல் ஆதங்கம்

image

காங். பலவீனமாக இருந்தால் கூட்டணி கட்சிகள் எப்படி மதிக்கும் என நிர்வாகிகளிடம் பேசிய ராகுல் காந்தி ஆதங்கப்பட்டுள்ளார். பீகார் மாநில காங். நிர்வாகிகளுடன் பேசிய அவர், ஒற்றுமையுடன் செயல்பட்டு, கடினமாக உழைத்து வரும் தேர்தலில் அதிக இடங்களில் வெல்ல வேண்டும் எனவும், அப்படி செய்தால்தான் மரியாதை கிடைக்கும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும், பலவீனமானவர்களை யாரும் மதிக்கமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

News March 27, 2025

அதிவேக அரைசதம்… பொளந்து கட்டிய பூரன்!

image

SRH அணிக்கு எதிரான போட்டியில் சிக்சர், பவுண்டரி என பறக்கவிட்ட LSG வீரர் பூரன், 18 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். இதன்மூலம், இந்த சீசனில் அதிவேக அரைசதமடித்தவர் என்ன சாதனையை அவர் தன்வசப்படுத்தியுள்ளார். 26 பந்துகளில் 6 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் குவித்த அவர், கம்மின்ஸ் ஓவரில் அவுட் ஆனார். வெல்லப் போவது யார்? உங்கள் கணிப்பு என்ன?

News March 27, 2025

IPL மோகம்!! ஜியோ புதிய சாதனை

image

IPL திருவிழா வந்தாலே கிரிக்கெட் ரசிகர்களை பிடிக்க முடியாது. ஜியோ ஹாட்ஸ்டாரில் போட்டி நேரலை செய்யப்படுவதால் இதில் இணையும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளம், 10 கோடிக்கும் அதிகமான கட்டண சந்தாதாரர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீங்க எதுல IPL பாக்குறீங்க?

News March 27, 2025

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் கிடையாது: அமித்ஷா

image

குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025, இன்று லோக்சபாவில் நிறைவேறியது. முன்னதாக, இந்த மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமித்ஷா, நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க வருபவர்களை திறந்த மனதுடன் எப்போதும் வரவேற்போம் எனவும், ஆனால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்களை நாட்டிற்குள் அனுமதிக்கமாட்டோம் என்றும் தெரிவித்தார். மேலும், இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல எனவும் கூறினார்.

News March 27, 2025

ரோஹித்துக்கு பச்சை கொடி காட்டிய BCCI?

image

ENGக்கு எதிரான டெஸ்ட் தொடரில், ரோஹித் ஷர்மாவே IND அணியின் கேப்டனாக செயல்பட உள்ளதாக BCCI வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. NZ, AUS அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் படுதோல்வி, ரோஹித்தின் மோசமான ஃபார்ம் ஆகிய காரணங்களால் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார் என தகவல் வெளியாகி இருந்தது. 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் IND vs ENG மோத உள்ளன. வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் போட்டி தொடங்க உள்ளது.

News March 27, 2025

66 வயதில் 10வது குழந்தையை பெற்றெடுத்த பெண்…!

image

இளவயது தம்பதிகள் பலர் குழந்தையின்றி தவிக்கும் சூழலில், 66 வயதில் ஆண் குழந்தையை ஈன்றெடுத்துள்ளார் ஜெர்மனியின் அலெக்ஸாண்ட்ரா ஹில்டெப்ராண்ட். அதுவும் 10வது குழந்தை. இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், IVF உதவியின்றி கருத்தரித்து அவர் குழந்தை பெற்றிருக்கிறார். உணவு முறை, நீச்சல் மற்றும் நடைபயிற்சி மூலம் ஆரோக்கியமாக இருப்பதாலேயே இது சாத்தியம் என அவர் தெரிவித்துள்ளார்.

News March 27, 2025

GBU பின்னணி இசை… மாஸ் அப்டேட் கொடுத்த ஜி.வி.

image

எப்படா ஏப்ரல் 10 வரும்னு அஜித் ஃபேன்ஸ் காத்துட்டு இருக்காங்க. குட் பேட் அக்லி பட டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள் ஹிட் அடிச்சதால, படத்துக்கு வெறித்தனமா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. இந்த நிலையில, படத்தோட இசை தொடர்பா ஜி.வி.பிரகாஷ் மாஸான அப்டேட் கொடுத்திருக்காரு. சோஷியல் மீடியாவுல, ‘ A raging bull on its way’ அப்படினு போட்டு பின்னணி இசைய ஏறக்குறைய முடிச்சிட்டேன்னு சொல்லிருக்காரு. அஜித் ஃபேன்ஸ்லாம் ஹேப்பி!

News March 27, 2025

பழைய AC யூஸ் பண்றீங்களா? உங்களுக்கு குட் நியூஸ்!

image

அதிக மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும் பழைய AC-களை உபயோகத்தில் இருந்து நீக்க மத்திய அரசு புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அதன்படி, 8 ஆண்டுகள் பழமையான AC-களை மாற்றிவிட்டு புதிய AC வாங்குவோருக்கு ஊக்கத்தொகை அல்லது மின் கட்டணத்தில் சலுகை வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, AC உற்பத்தி நிறுவனங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், விரைவில் இத்திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.

error: Content is protected !!