India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மே மாதம் நடைபெற இருந்த பட்டய கணக்காளர் (CA) தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஏப்.19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி CA இன்டர்மீடியட் மற்றும் இறுதித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான புதிய அட்டவணை மார்ச் 19-ம் தேதி, www.icai.org இணையத்தில் வெளியிடப்பட உள்ளது.
அமெரிக்க அரசுக்காக நூற்றுக்கணக்கில் உளவு செயற்கைக்கோள்களை எலான் மஸ்க் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், அமெரிக்க அரசின் உளவு செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் என்ஆர்ஓ அமைப்புடன் 2021ல் ரூ.14,920 கோடி மதிப்பில் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அதன்படி நூற்றுக்கணக்கில் செயற்கைக்கோள்களை உருவாக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவில் 10 செ.மீ. வாலுடன் அதிசய ஆண் குழந்தை பிறந்துள்ளது. கயானாவில் கடந்த ஆண்டு இதேபோல் பிறந்த குழந்தைக்கு, அறுவை சிகிச்சை மூலம் வால் அகற்றப்பட்டது. அதேபோல், சீனாவில் தற்போது ஆண் குழந்தை வாலுடன் பிறந்துள்ளது. Tethered spinal cord எனும் மருத்துவ நிலையே இதற்கு காரணமென கூறப்படும் நிலையில், வாலை அகற்றும்படி பெற்றோர் விடுத்த கோரிக்கையை மருத்துவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
தேனி அருகே காரும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டிப்பட்டி அருகே நடந்த இந்த கோர விபத்தில், காரில் பயணித்த கல்வி அதிகாரி சங்கு முத்தையா என்பவரும் கார் ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த லாரி ஓட்டுநரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கேட் தம்பதியிடையே விரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாடல் அழகி ஹேன்பரியுடன் வில்லியமுக்கு தொடர்பு ஏற்பட்டதாகவும், பிறகு வேறு ஒருவரை ஹேன்பரி திருமணம் செய்து கொண்டதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகின. 3 பிள்ளைகளுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்ட கேட், இளவரசருடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. இதை வைத்து, விரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல் பரவி வருகிறது.
உலகின் சிறந்த சீஸ் இனிப்பு உணவு வகைகளின் பட்டியலை ‘டேஸ்ட் அட்லஸ்’ (Taste Atlas) நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் ‘ரசமலாய்’ 2ஆவது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் போலந்து நாட்டின் ‘செர்னிக்’ (Sernik) உணவு இடம்பிடித்துள்ளது. வாயில் வைத்ததும் கரையக்கூடிய ரசமலாய், பெங்காலி இனிப்பு உணவாகும். முற்றிலும் பாலை வைத்தே செய்யப்படும் இது, பெரும்பாலானவர்களின் விருப்பமான இனிப்பு உணவாகவும் உள்ளது.
2024 ஐபிஎல் தொடருக்காக, CSK வீரர்கள் (நியூசிலாந்து) ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், டேரில் மிட்செல் ஆகியோர் சென்னை வந்தடைந்தனர். டேவன் கான்வே, காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில், சென்னை அணி பெங்களூருவை எதிர்கொள்கிறது. இதற்காக தீவிர பயிற்சியில் இறங்கியுள்ள சென்னை அணி, முதல் போட்டியில் வெற்றி பெறுமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிமுக ரூ.6.05 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதுதொடர்பாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்களில்,” தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிமுக ரூ.6.05 கோடி நன்கொடை பெற்றுள்ளது. அதில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மட்டும் ரூ.5 கோடி அளித்துள்ளது. சமாஜ்வாதி ரூ.14.05 கோடி, அகாலிதளம் ரூ.7.26 கோடி நன்கொடை பெற்றுள்ளன” எனக் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் பாமக எம்.எல்.ஏ அருள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதன்மூலம், அதிமுக – பாமக இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறுவது உறுதியாகியிருக்கிறது. அதேநேரம், பாமக பாஜகவுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பாமக நாளை வெளியிடும் என்று தெரிகிறது.
கலிபோர்னியாவில் நடைபெற்ற தடகளப் போட்டியில், இந்திய வீரர் புதிய சாதனையை படைத்துள்ளார். ஆடவருக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில், இந்தியாவின் குல்வீர் சிங் 27.41.81 நிமிடங்களில் இலக்கை அடைந்து 2ஆம் இடம் பிடித்தார். இதன் மூலம் 2008ஆம் ஆண்டு பதிவான இந்தியாவின் சுரேந்திர சிங் (28:02.89) சாதனையை முறியடித்தார். இருப்பினும், 41 வினாடிகள் தாமதமானதால் ஒலிம்பிக் போட்டி வாய்ப்பை தவறவிட்டார்.
Sorry, no posts matched your criteria.