India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜம்மு – காஷ்மீரில் என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். கதுவா மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் பயங்கரவாதிகள் 5 பேர் ஊடுருவியதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில், 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் 3 பாதுகாப்புப் படையினர் வீர மரணம் அடைந்தனர். காயமடைந்த 5 பேர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் இயக்கிய, ‘L 2: எம்புரான்’, நாடு முழுவதும் முதல் நாளில் ₹ 21 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் மூலம், முதல் நாளில் அதிக வசூல் செய்த மலையாள படம் என்ற சாதனையை எம்புரான் படைத்துள்ளது. முன்னதாக, இச்சாதனையை பிருத்விராஜின் ‘ஆடுஜீவிதம்’ (₹ 8.95cr) பெற்றிருந்தது. நீங்க படம் பாத்துட்டீங்களா.. படம் எப்படி இருக்கு?
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. அடுத்த 10 நாள்களுக்கு இதே நிலைதான் நீடிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். நேற்று சென்னை உட்பட 10 இடங்களில் வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி பதிவானது. ஈரோடு, கரூர், சேலம், திருப்பத்தூர், திருச்சி, திருத்தணி ஆகிய இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளது. பகலில் தேவையின்றி வெளியே வரவேண்டாம் மக்களே..!
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இன்று (மார்ச் 28) முதல் அடுத்த மாதம் (ஏப்.15) வரை நடைபெறவிருக்கும் இத்தேர்வை 4,46,411 பள்ளி மாணவர்கள், 4,40,465 மாணவிகள், 25,888 தனித்தேர்வர்கள் மற்றும் சிறைவாசிகள் 272 பேர் என மொத்தம் 9,13,036 பேர் எழுதவுள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 4,113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10 முதல் பிற்பகல் 1.15 வரை தேர்வு நடைபெறவுள்ளது. ALL THE BEST
இங்கிலாந்து அரசர் 3ஆம் சார்லஸ் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 76 வயதான அவர் சில காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். சிகிச்சையின் பக்கவிளைவுகள் காரணமாக அவர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 2022ல் தனது தாயார் 2ஆம் எலிசபெத் மறைவைத் தொடர்ந்து, இங்கிலாந்து அரசரானார் சார்லஸ்.
IPL தொடரில் இன்று, CSK – RCB அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் இரவு 7:30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. கடந்த ஆண்டு Playoff வாய்ப்பைக் கெடுத்த RCBயை பழிதீர்க்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். முதல் போட்டியில் இரு அணிகளுமே பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டதால், போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது. யாரு ஜெயிப்பா என நினைக்கிறீங்க?
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க சிபிசிஐடி போலீஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 500 பேரிடம் விசாரணை நடந்துள்ளது. நேற்று ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனிடம் விசாரணை நடைபெற்றது. கொடநாடு பங்களாவில் கடந்த 2017ல் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை, கடந்த 2022ல் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் துணை CEO ஹான் ஜாங் ஜி (63), அதீத வேலை பிரஷரால் ஏற்பட்ட மாரடைப்பாலே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தினமும் 15- 16 மணி நேரம் வேலை செய்ததே அவருக்கு தீவிர உடல்நலக் குறைபாட்டை ஏற்படுத்தியுள்ளது. அதிக நேரம் மொபைல், லேப்டாப் ஸ்கிரீன் பார்த்ததன் காரணமாகவே, கடந்த 2023ல் அவருக்கு நரம்பியல் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் உடல்நிலை மோசமடைந்துள்ளது.
தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. பழைய முறையில் வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுகிறது என கவலையில் மனம் வாடுவோர் செவ்வாய்க்கிழமையில் வரும் சதுர்த்தி திதி நாளில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோயிலின் தீர்த்தத்தில் நீராடி, ஆனைமுகனுக்கு அருகம்புல் மாலை சாற்றி, 32 தீபங்களை ஏற்றி, முக்குறுணி மோதகம் படைத்து வழிபட்டால் நன்மைகள் உண்டாகும். குறிப்பாக இந்த வழிபாடு செய்த கையோடு 5 ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் செவ்வாய் தோஷம் விலகும் என ஐதீகம்.
Sorry, no posts matched your criteria.