news

News March 28, 2025

ஆன்லைனில் IPL டிக்கெட் வாங்குறீங்களா..

image

எப்படியாவது IPL போட்டியை நேரில் பார்க்கணும் என்ற ரசிகர்களின் ஆசையை சில விஷமிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கொல்கத்தாவை சேர்ந்த 32 வயது பெண், இன்ஸ்டாவில் IPL டிக்கெட் விளம்பரத்தை பார்க்கிறார். பின் அவர்களை போனில் தொடர்பு கொள்ள, மெயில் மூலம் டிக்கெட் கன்ஃபார்ம் ஆனதாக கூறி, ₹12,000 கேட்கிறார்கள். யோசிக்காமல் ஆன்லைனில் பணத்தை அனுப்ப, பின்னரே ஏமாந்ததை அவர் உணர்ந்துள்ளார் . உஷாரா இருங்க!

News March 28, 2025

3 நாள்களில் சவரனுக்கு ₹1,240 உயர்ந்த தங்கம்

image

சென்னையில் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 25ஆம் தேதி 22 கேரட் ஒரு சவரன் ₹65,480க்கு விற்பனையானது. பின்னர், 26ஆம் தேதி சவரனுக்கு 80 ரூபாயும், நேற்று 320 ரூபாயும் அதிகரித்தது. இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கிய உடனே சவரனுக்கு ₹840 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் கடந்த 3 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹1,240 உயர்ந்து ₹66,720க்கு விற்பனையாகிறது.

News March 28, 2025

சாலைகளில் நமாஸ் செய்தால் பாஸ்போர்ட் ரத்து

image

இஸ்லாமியர்கள் ரம்ஜானை கொண்டாட உள்ள நிலையில் அதிரடி உத்தரவை உ.பி. அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி சாலைகளில் நமாஸ் செய்வதற்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளது. மீறுவோர் மீது கிரிமினல் வழக்கு பதிந்து, பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளது. மதக்குருமார்கள் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

News March 28, 2025

தங்கம் விலை சவரனுக்கு ₹840 உயர்வு

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 28) சவரனுக்கு ₹840 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,340க்கும், சவரன் ₹66,720க்கும் விற்பனையாகிறது. அதேபோல வெள்ளி விலையும் கிராமுக்கு ₹3 உயர்ந்துள்ளது. இதனால் 1 கிராம் ₹114க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,14,000க்கும் விற்பனையாகிறது. கடந்த வார இறுதியில் தங்கம் விலை சரிந்த நிலையில், இந்த வாரம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

News March 28, 2025

CA தேர்வு முறையில் மாற்றம்!

image

மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கும் வகையில், CA தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்து இந்திய தணிக்கை துறை அறிவித்துள்ளது. அதன்படி, இதுவரை ஆண்டுக்கு 2 முறை நடத்தப்பட்டு வந்த CA இறுதித்தேர்வு, Intermediate, Foundation தேர்வுகளும் இனி ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இறுதித்தேர்வு ஜனவரி, மே, செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 28, 2025

விரல் ரேகை பதிந்தால் மட்டுமே GAS சிலிண்டர்?

image

சமையல் GAS சிலிண்டர் வாடிக்கையாளர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் விரல் ரேகையை பதிவு செய்யவில்லை எனில் சிலிண்டர் கிடைக்குமா என்ற குழப்பம் எழுந்துள்ளது. மானிய விலை சிலிண்டர் பெறும் பயனாளிகளின் உண்மைத் தன்மை சரிபார்ப்பு பணிகள் நடக்கிறது. இதற்கு சிலிண்டர் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ, அவர் GAS ஏஜென்சிக்கு சென்று, விரல் ரேகை பதிய வேண்டும். இப்பணியை, வரும் 31ம் தேதிக்குள் முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

News March 28, 2025

தவெக பொதுக்குழு: சர்ச்சை போஸ்டர்

image

தவெகவின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறும் நிலையில், சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் சர்ச்சை எழுந்துள்ளது. அதில், பொதுச்செயலாளர் ஆனந்த்தை வருங்கால CM என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்த போஸ்டருக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தவெகவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன், நேரடியாக அரசியல் செய்யுமாறும், முதுகில் குத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

News March 28, 2025

MP சு.வெங்கடேசனின் தந்தை காலமானார்

image

மதுரை மக்களவைத் தொகுதி எம்.பி. சு.வெங்கடேசனின் தந்தையும், சிபிஎம் மூத்தத் தலைவர்களில் ஒருவருமான இரா.சுப்புராம் (79) காலமானார். உடல்நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. மதுரை ஹார்விபட்டியில் உள்ள அவரது வீட்டில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சுப்புராம் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News March 28, 2025

போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கு எய்ட்ஸ்!

image

கேரளாவில் போதைப்பொருள் பயன்படுத்தும் 10 பேருக்கு AIDS தொற்று கண்டறியப்பட்டுள்ளது. HIV தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ள பாலியல் தொழிலாளிகள், போதைப்பொருள் பயன்படுத்துவோரிடம் மலப்புரம் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் நடத்திய வழக்கமான பரிசோதனையில் இது கண்டறியப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தும் குழுவைச் சேர்ந்தவர்கள் ஒரே ஊசியைப் பயன்படுத்தியதே தொற்று பரவக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. போதை வேண்டாமே..!

News March 28, 2025

லேட்டா வந்தாலும் வசூலை குவிக்கும் வீர தீர சூரன் 2!

image

பெரும் பிரச்னையைத் தொடர்ந்து விக்ரமின் ‘வீர தீர சூரன்’ படம் நேற்று மாலை முதல் திரையிடப்பட்டது. தில், தூள், சாமி போன்ற ஆக்‌ஷன் ரோலில் சியான் மாஸ் காட்டியதாக ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். தாமதமாக வெளியாகினாலும், முதல் நாளில் ₹3.25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தொடர் விடுமுறை வருவதால், படத்தின் வசூல் அதிகரிக்கும் என்கிறார்கள். நீங்க படம் பாத்துட்டீங்களா.. எப்படி இருக்கு?

error: Content is protected !!