news

News March 21, 2024

சமனில் முடிந்த ஐபிஎல் சாம்பியன் போர்

image

தோனி- ரோஹித் ஷர்மா இடையேயான சாம்பியன் போர் சமனில் முடிந்துள்ளது. இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில், ரோஹித் (MI), தோனி (CSK) தலைமையிலான அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. 6ஆவது முறை யார் கோப்பையை வெல்ல போவது? என ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நிலையில், தற்போது இருவருமே கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால், போர் சமனில் முடிந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

News March 21, 2024

தமாகா போட்டியிடும் 3 தொகுதிகள் அறிவிப்பு

image

பாஜக கூட்டணியில் தமாகா போட்டியிடும் மூன்று தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தஞ்சை, மயிலாடுதுறை, ஈரோடு தொகுதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட உள்ளது. தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் சமூக வாக்குகள் ஈரோடு தொகுதியை தவிர்த்து மற்ற இரண்டு தொகுதிகளிலும் அதிகம் என்பதால் இந்த தொகுதிகளை அக்கட்சி போராடி பெற்றுள்ளது. நாளைக்குள் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்கள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

News March 21, 2024

மெல்ல விடைகொடு விடைகொடு மனமே…

image

சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விடுவிக்கப்பட்டது, ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 13 ஆண்டுகளாக சென்னையை வழிநடத்தி வந்த தோனி, 5 முறை கோப்பையை வென்றுள்ளார். 235 போட்டிகளில், 142இல் வெற்றி பெற்று 2ஆவது அதிகபட்ச வெற்றிகளை குவித்த அணி என்ற பெருமையை சென்னை பெற்றது. தற்போது கேப்டனாக இல்லாமல் சாதாரண ஒரு வீரராக களமிறங்க உள்ளதால், ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

News March 21, 2024

சத்குரு நலம்பெற கங்கனா ரனாவத் வாழ்த்து

image

மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள ஈஷா அறக்கட்டளைத் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் குறித்து பிரபல நடிகை கங்கனா ரனாவத் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “விரைவில் நீங்கள் குணமாக வேண்டும். நீங்கள் இல்லாமல் நாங்கள் ஒன்றுமில்லை. நீங்கள் இல்லையெனில் சூரியன் உதிக்காது, பூமி நகராது. இந்த தருணம் உயிரற்ற நிலையில் உறைந்திருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

News March 21, 2024

முழுமையான தகவலை வழங்கிய SBI

image

தேர்தல் பத்திர விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் SBI வங்கி முழுமையான விவரங்களை வழங்கியுள்ளது. இதன் மூலம் எந்த கட்சிக்கு யார் நிதி வழங்கினார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும். நிதி வழங்கியவர்கள், எந்தக் கட்சிக்கு வழங்கப்பட்டது என்ற தகவல் மட்டுமே முன்னதாக வழங்கப்பட்டிருந்தது. முழுமையான விவரத்தை மார்ச் 18இல் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது தகவல்களை வழங்கியுள்ளது.

News March 21, 2024

ஐபிஎல் தொடருக்கு தயாரான ‘தல தோனி’

image

2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நாளை தொடங்கவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில், சென்னை – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த ஐபிஎல் தொடர் தோனியின் கடைசி தொடராக இருக்குமென்பதால், பழையபடி மீண்டும் தலைமுடியை வளர்த்து வருவதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். தோனியின் வின்டேஜ் ஸ்டைல் கவனம் ஈர்த்த நிலையில், அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

News March 21, 2024

75 ஆண்டுகளில் இதுபோல் நடந்ததில்லை

image

பொன்முடி வழக்கில் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அழுத்தமான வாதத்தை தமிழக அரசு முன்வைத்து வருகிறது. அதில், ” 75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் முதல்முறையாக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்ய முடியாது என கூறுகிறார். ஒவ்வொரு முறையும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் வந்து நீதி பெற வேண்டியுள்ளது. அரசின் இயல்பான செயல்பாட்டை அவர் தொடர்ந்து தடுக்கிறார். இது ஜனநாயக நாட்டிற்கு நல்லதல்ல” எனக் கூறினர்.

News March 21, 2024

“ஆளுநருக்கு சட்டம் தெரியுமா? தெரியாதா?”

image

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டம் தெரியுமா? தெரியாதா? என உச்சநீதிமன்றம் மத்திய அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியுள்ளது. பொன்முடி வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், “மாநிலத்தின் ஆளுநர் தான்தோன்றி தனமாக நடந்து கொண்டால் ஒரு மாநில அரசு எவ்வாறு செயல்பட முடியும். அரசியல் சாசனத்தை முதலில் ஆளுநர் தெரிந்துகொள்ள வேண்டும். தன் விருப்பங்களை செயல்படுத்த ஆளுநர் பதவியை பயன்படுத்தக் கூடாது” என்றனர்.

News March 21, 2024

ஆளுநருக்கு 24 மணி நேரம் கெடு

image

பொன்முடியை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பது தொடர்பான வழக்கில் தமிழக ஆளுநர் R.N.ரவிக்கு உச்ச நீதிமன்றம் 24 மணி நேரம் கெடு விதித்துள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டும் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது எனக் கூறியதற்காக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, சரியான முடிவை ஆளுநர் எடுக்காவிட்டால் நாங்களே உத்தரவு பிறப்பிப்போம் என எச்சரித்துள்ளது.

News March 21, 2024

சோனியா காந்தி பிரதமராவதை தடுத்தது ஏன்?

image

மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதிக்காக பாஜகவினரிடையே பிரச்சனை எழுந்துள்ளது. ராம ஸ்ரீனிவாசனை வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த சூர்யா சிவா, மண்ணின் மைந்தனை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த ஸ்ரீனிவாசன், நான் மண்ணுக்கு மைந்தனாக இருப்பேன் என்றார். மண்ணுக்கு மைந்தனாக இருந்தால் போதும் என்றால், சோனியா காந்தி பிரதமராவதை தடுத்தது ஏன்? என பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!