news

News March 28, 2025

வென்றானா வீர தீர சூரன் -2? Review & Rating

image

2 பவர்ஃபுல் கேரக்டர்களுக்கு மத்தியில் சிக்கும் காளி (விக்ரம்) என்ன ஆகிறார் என்பதே கதைக்களம். பிளஸ்: ஆக்சன் காட்சிகளும், அதற்கான Build-up காட்சிகள் அசத்தல். ‘கமர்சியல்’ விக்ரமை மீண்டும் கொண்டு வந்து இயக்குநர் வென்றுவிட்டார். குறிப்பாக கிளைமாக்ஸ் ஆக்சனின் உச்சம். மியூசிக், ஒளிப்பதிவு சிறப்பு. இன்டர்வெல் சூப்பர் சர்ப்ரைஸ். மைன்ஸ்: Flashback காட்சிகள் மட்டும் கொஞ்சம் மெதுவாக போகிறது. Rating: 3/5.

News March 28, 2025

மகளிர் உரிமைத்தொகை விரைவில் விரிவாக்கம்: Dy CM

image

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்க விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என சட்டப்பேரவையில் Dy CM உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் தற்போது 1.15 கோடி குடும்பத்தினர் மாதந்தோறும் ₹1,000 பெற்று வருவதாகக் கூறிய அவர், விடுபட்ட தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளை சேர்க்கும் பணி விரைவில் தொடங்கும் என்றார். உங்கள் குடும்பத்திற்கு ₹1,000 வருகிறதா?

News March 28, 2025

மனைவியை கொன்று சூட்கேஸில் அடைத்த கணவர்!

image

பெங்களூருவில் மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு கணவன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ராகேஷை, அவரது மனைவி கௌரி அனில் சம்பேகர் சண்டை ஏற்படும் போதெல்லாம் அடித்துக் கொடுமைப்படுத்தியதால் ஆத்திரத்தில் இப்படி செய்ததாகக் கூறியுள்ளார். காரில் மயக்க நிலையில் கிடந்த ராகேஷை கைது செய்த போலீசார், சிகிச்சைக்குப் பிறகு விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 28, 2025

ஓயாத குண்டு மழை.. 24 மணி நேரத்தில் 50 பேர் பலி

image

போர் தொடங்கியதில் இருந்து தினந்தோறும் பாலஸ்தீனர்கள் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர். இஸ்ரேல் fighter jets குடியிருப்பு பகுதிகளில் அதிகாலை வீசிய குண்டில் குழந்தைகள், பெண்கள் என 6 பேர் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இஸ்ரேல் தாக்குதலால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

News March 28, 2025

உலகத்தரத்தில் மாற உள்ள சென்னை!! முதல்வரின் திட்டம்

image

சென்னையில் சிஐஐ தென் இந்திய மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்காற்றி வருவதாக தெரிவித்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல; அனைவரையும் உள்ளடங்கிய வளர்ச்சி எனவும் கூறினார். அதோடு சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக உருவாக்க, திட்டத்தை தயாரித்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

News March 28, 2025

100 நாள் வேலைத் திட்ட ஊதியம் உயர்வு

image

100 நாள் வேலைத் திட்ட தினசரி ஊதியத்தை ₹17 உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் நாளொன்றுக்கு ₹319 வழங்கப்பட்டு வந்த நிலையில், 2025-26 நிதியாண்டில் ₹336ஆக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு வரும் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த நிதியாண்டில் தமிழகத்திற்கான MGNREGA திட்ட நிதி ₹4,034 கோடி நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

News March 28, 2025

வந்தாச்சு Google Time Travel.. இதன் மூலம் என்ன பண்ணலாம்?

image

1980களில், உங்க ஊர் எப்படி இருந்திருக்கும் என பார்க்க ஆசையா? அதுக்காகவே Google, Time Travel என்ற டெக்னாலஜியைக் கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம், 30 வருசத்திற்கு முன் ஒரு இடம் எப்படி இருந்திருக்கும் என்பதை Google Mapsல் பார்க்கலாம். தற்போது லண்டன், பாரிஸ் நகரங்களில் மட்டுமே அறிமுகமாகி இருக்கும் இந்த டெக்னாலஜி, விரைவில் இந்தியாவிலும் வந்துவிடும். 30 வருஷத்திற்கு முன், உங்க ஊர் எப்படி இருந்துச்சு?

News March 28, 2025

BREAKING: அதிமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்

image

சட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கை முன்பு அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்களை இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார். முன்னதாக பேரவையில் எடப்பாடி பழனிசாமியை பேச அனுமதிக்க வலியுறுத்தி அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களது இருக்கை அருகே அமளியில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டதால் அவரது இருக்கை அருகே சென்று முழக்கமிட்டனர்.

News March 28, 2025

பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்

image

எடப்பாடி பழனிசாமியை பேச அனுமதிக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஆனால், 3 அமைச்சர்கள் இன்று பதிலுரை வழங்கவிருப்பதால் இபிஎஸ்ஸை பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் அப்பாவு கூறினார். ஆனாலும், துணை முதல்வர் உதயநிதி பேசியபோது தொடர் அமளியில் ஈடுபட்டதால் அதிமுக எம்.எல்.ஏக்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

News March 28, 2025

பிரபல ஹாலிவுட் நடிகர் கிளைவ் ரெவில் காலமானார்

image

ஹாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகர் கிளைவ் ரெவில் (94) உடல் நலக்குறைவால் காலமானார். நியூசிலாந்தைச் சேர்ந்த இவர் கடந்த சில ஆண்டுகளாக Dementia (மறதி நோய்) நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தி அனிமேஷன் சீரிஸ் மற்றும் ஸ்டார் வார்ஸ் கதாபாத்திரங்களில் தனது காந்த குரலால் உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்ற கிளைவ் ரெவில் குரல் ஓய்ந்த நிலையில், பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

error: Content is protected !!