news

News March 28, 2025

சபாநாயகரை கைநீட்டி பேசுவது மரபு அல்ல: ஸ்டாலின் காட்டம்

image

மதுரை உசிலம்பட்டி காவலர் முத்துக்குமரன் கொலை வழக்கு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தை சட்டமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்க இபிஸ் வலியுறுத்தினார். ஆனால் சபாநாயகர் கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்தார். தொடர்ந்து அதிமுகவினர் <<15912276>>அமளியில் <<>>ஈடுபட, சபாநாயகரை நோக்கி கைநீட்டி பேசுவது மரபல்ல என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

News March 28, 2025

சர்வதேச அங்கீகாரம் பெற்ற படம்.. இந்தியாவில் தடை

image

கடந்த ஆண்டு வெளிநாடுகளில் வெளியான சந்தோஷ் என்ற படம் ஆஸ்கர் விருந்துக்கு பரிந்துரைக்கப்பட்டது. பிரிட்டிஷ் – இந்திய திரைப்பட இயக்குனர் சந்தியா சூரி இயக்கி இப்படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை வாரியம் தடை விதித்துள்ளது. வட இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை ஆகியவற்றை இப்படம் பேசுகிறது. சில காட்சிகளை நீக்க படக்குழு மறுத்ததால் தடை விதிக்கப்பட்டது.

News March 28, 2025

பவுன்சர் மன்னன் ‘பீட்டர் லீவர்’ காலமானார்

image

ஓய்வுபெற்ற பிரபல கிரிக்கெட் வீரர் பீட்டர் லீவர் (84) காலமானார். இங்கிலாந்தை சேர்ந்த ஃபாஸ்ட் பவுலரான இவர், தன் அதிவேகம் மற்றும் பவுன்சர்களால் 1970களில் பிரபலமாக இருந்தார். டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள இவர் முதல்தரப் போட்டிகளில் 796 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஒருமுறை இவர் வீசிய அபாயகரமான பவுன்சரால் காயமடைந்த நியூசி வீரரின் இதயமே நின்றுவிட்டது. தீவிர சிகிச்சையால் அவர் காப்பாற்றப்பட்டார்.

News March 28, 2025

BREAKING: நிலநடுக்கத்தால் பாங்காக்கில் அவசரநிலை

image

நிலநடுக்கத்தால் தாய்லாந்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பாங்காக்கில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதனால், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

News March 28, 2025

வீட்டில் இதையா யூஸ் பண்றீங்க?

image

காய்கறிகள் நறுக்க பலரும் பிளாஸ்டிக் கட்டிங் போர்டு பயன்படுத்துகின்றனர். ஆனால், இது நல்லதல்ல என்கின்றனர் டாக்டர்கள். காய்கறிகளை நறுக்கும்போது, கத்திமுனை பட்டு போர்டு சேதமடைவதுடன், அப்போது உதிரும் பிளாஸ்டிக் துணுக்குகள் உணவில் கலக்கின்றன. மேலும், போர்டில் பாக்டீரியாக்கள் வளர்வதால், அதுவும் நோய்களை உண்டாக்குகிறது. இதனால் ஹார்மோன் பாதிப்பு, உடல்பருமன், கேன்சர் வரும் ஆபத்து அதிகரிக்கிறது.

News March 28, 2025

1 – 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?

image

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்தப் பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றார். 1 – 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்தி விடுமுறை அளிக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

News March 28, 2025

பிரதமர் மோடியை விளாசிய விஜய்

image

தமிழ்நாடு என்றால் பிரதமர் மோடிக்கு அலர்ஜி என விஜய் கடுமையாக சாடியுள்ளார். பாஜகவை வெளிப்படையாக விமர்சிக்க தவெகவுக்கு பயம் என சிலர் கூறி வருவதாக பேசிய அவர், “யாரை பார்த்தும் எங்களுக்குப் பயமில்லை, மத்தியில் ஆளும் BJP, தமிழ்நாட்டில் ஆளும் DMK இரண்டும் மக்களுக்கு விரோதமான அரசு” என அழுத்தமாக கூறினார். பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்தும் திமுகவுக்கு வரும் தேர்தலில் அவர்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார்.

News March 28, 2025

‘மன்னராட்சி முதல்வரே’ வார்னிங் கொடுத்த விஜய்

image

அணை போட்டு ஆற்றை வேண்டுமானால் தடுக்கலாம், ஆனால் காற்றைத் தடுக்க முடியாது என விஜய் ஆவேசமாகக் கூறியுள்ளார். பொதுக்குழுவில் பேசிய அவர், யாருக்கும் இல்லாத தடையை தவெகவுக்கு ஆளுங்கட்சி கொடுப்பது ஏன் என வினவினார். ‘மன்னராட்சி முதல்வரே’ தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் இரட்டை யானை தவெக கொடி நிச்சயம் பறக்கும் அதனை யாராலும் தடுக்க முடியாது என சூளுரைத்தார்.

News March 28, 2025

17ஆண்டு தொடர் தோல்வி.. வரலாற்றை மாற்றுமா RCB?

image

CSKவின் கோட்டையான சேப்பாக்கத்தில் இன்று RCB களம் காண்கிறது. சேப்பாக்கத்தில் 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள RCB ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு RCB தொடர் தோல்விகளையே சந்தித்து வருகிறது. 17 ஆண்டுகளாக தொடரும் சோகத்துக்கு இன்றைய போட்டியில் விடிவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு RCB ரசிகர்களிடையே உள்ளது. நீங்க என்ன சொல்றீங்க?

News March 28, 2025

நடுவானில் பறந்த விமானத்தில் ஆபாசம்: இளைஞர் கைது

image

விமானம் நடுவானில் பறந்தபோது இரு பெண்கள் முன்பு பேண்ட்டுக்குள் கையை விட்டு ஆபாச செயலில் ஈடுபட்ட 33 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்திலிருந்து டிரெஸ்டனுக்கு சென்ற விமானத்தில் இரு பெண் பயணிகளுக்கு அருகே அமர்ந்திருந்த அந்த நபரின் செயலை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள், விமான ஊழியர்களிடம் கூறியதால், நடுவானில் களேபரம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அந்நபர் டிரெஸ்டன் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

error: Content is protected !!