India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று பல்வேறு தொகுதிகளில் முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். மதுரையில் சு.வெங்கடேசன், வேலூரில் கதிர் ஆனந்த், ராமநாதபுரத்தில் ஓபிஎஸ், ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நாளை மறுநாளுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடையும் நிலையில், நல்ல நாளான இன்று அதிகளவில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்கின்றனர்.
சந்திரகிரகணம் இன்று நடைபெற்றாலும், கோயில் நடைகள் வழக்கம் போல திறக்கப்பட்டிருந்தன. ஹோலி மற்றும் பங்குனி உத்திரத்தன்று 100 ஆண்டுகளுக்கு பிறகு கிரகணம் காலை 10.23 மணி தொடங்கி மதியம் 3.02 மணி வரை நடைபெறுகிறது. வழக்கமாக கோயில் நடை அடைக்கப்பட்டு, கிரகணம் முடிந்ததும் சுத்தப்படுத்தப்பட்டு திறக்கப்படும். ஆனால் இம்முறை பகலில் ஏற்படுவதால் தோஷமில்லை என கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.
பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு மாநில செயலாளர், கோவை பெருங்கொட்ட பொறுப்பாளர் (கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர்) செல்வபிரபு, பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைத்து கொண்டார். அண்ணாமலைக்கு வலது கையாக செயல்பட்டு, அவருக்கு ஆதரவாக 12 மணி நேரத்திற்கு முன்பு வரை தீவிரமாக வாக்கு சேகரித்தவரை, இபிஎஸ்ஸின் வலது கையான எஸ்.பி.வேலுமணி ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளார்.
டெல்லியில் பாஜக தலைவர் ஜேபி நட்டாவின் மனைவிக்கு சொந்தமான ரூ.35 லட்சம் மதிப்பு கார் திருடப்பட்டுள்ளது. சர்வீசுக்கு விடப்பட்ட டோயோட்டா ஃபார்சூனர் காரை டிரைவர் கடந்த 19ஆம் தேதி எடுத்து வந்து வீட்டில் நிறுத்திவிட்டு சாப்பிட சென்றுள்ளார். அப்போது அந்த கார் திருடப்பட்டுள்ளது. கார் குருகிராம் நோக்கி எடுத்து செல்லப்பட்டதை சிசிடிவி மூலம் கண்டுபிடித்த போலீசார், அதை தேடி வருகின்றனர்.
பம்பரம் சின்னத்தை மதிமுகவுக்கு ஒதுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ அவசர மனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கல் முடிய 3 நாட்கள் மட்டுமே இருப்பதால், மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. திருச்சி தொகுதியில் மதிமுக சார்பாக வைகோ மகன் துரை வையாபுரி போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
*EVM முதன் முதலில் 1982இல் கேரள தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டது. * 1998 முதல் நாடு முழுவதும் EVM பயன்படுத்தப்பட்டது. நோட்டாவுக்கு வாக்களிக்கும் முறை 2014இல் நடைமுறைக்கு வந்தது. *64 வேட்பாளர்கள் வரை தேர்தலில் போட்டியிட்டால் EVM இயந்திரம் மூலம் தேர்தல் நடத்தலாம். அதற்கு மேல் இருந்தால் EVM பயன்படுத்த முடியாது.*1989 தேர்தலில் இருந்து வாக்களிக்கும் வயது 21இல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களில் கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த மருத்துவர் சுப்பாராவ் (57), சேலத்தை சேர்ந்த தியாகராஜன் (35), தேனியை சேர்ந்த பாண்டியன் (40) உயிரிழந்தனர். உடல் பரிசோதனை செய்யாமல் ரீல்ஸ் மோகத்தில் அதிகளவு இளைஞர்கள் மலையேற வருவதாகவும், மலை உச்சிக்கு செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் 85 வயதுக்கும் மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க வகை செய்யும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தபால் மூலம் வாக்களிக்க 12டி படிவத்தை தேர்தல் ஆணையம் கடந்த 20ஆம் தேதி முதல் விநியோகித்தது. இதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 5 பேர் பலியாகினர். அந்நாட்டின் வடக்கு பகுதியில் நேற்று 6.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 1,000 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி 5 பேர் பலியான நிலையில், ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். இதனால் பலி எண்ணிகை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சென்னையில் லாரியில் மூட்டை, மூட்டையாக கொண்டுவரப்பட்ட பாஜக கொடி, தொப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வில்லிவாக்கத்தில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்ததில், உரிய ஆவணங்களின்றி 500க்கும் மேற்பட்ட மூட்டைகளில் கொண்டுவரப்பட்ட பாஜக கொடி, தொப்பிகளை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.