news

News March 28, 2025

‘அப்பா’ ஸ்டாலின்: விஜய் பேச்சால் அதிர்ந்த அரங்கம்!

image

தவெக பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து விஜய் பேசினார். நீங்க ஒழுங்கா ஆட்சி நடத்தியிருந்தா, பெண்களின் பாதுகாப்பு நல்லா இருந்திருக்கும். ஆனா, இன்னைக்கு பச்ச புள்ளைங்க, படிக்கிற புள்ளைங்க, சின்ன பொன்னுங்க, வேலைக்கு போற பொன்னுங்களுக்கு நடக்குற கொடுமைய வாய்விட்டு சொல்ல முடியல சார். இதுல வேற உங்கள எல்லோரும் அப்பானு வேற கூப்பிடுறதா சொல்றீங்க என விஜய் பேசினார்.

News March 28, 2025

IPL: CSK அணி முதலில் பந்துவீச்சு…!

image

சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான CSK அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான RCB அணியும் சற்றுநேரத்தில் மல்லுக்கட்ட உள்ளன. இரு அணிகளும் முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இன்று களமிறங்குகின்றன. இதுவரை 33 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ள நிலையில், CSK 21 முறை, RCB 11 முறை வென்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவில்லை. இன்னைக்கு யார் ஜெயிப்பாங்க?

News March 28, 2025

45 நிமிடத்திற்கு 1 குழந்தை பலி… கலங்கி நிற்கும் காசா

image

அழுவதற்கு கூட காசா மக்களின் கண்களில் கண்ணீர் இருக்குமா என தெரியவில்லை. அங்கு ஒவ்வொரு 45 நிமிடத்திற்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. போர் தொடங்கி 535 நாட்களில் ஒரு நாளைக்கு 30 குழந்தைகள் வீதம் 17,400 குழந்தைகளை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்திருக்கிறது. அதில், ஒரு வயதைக் கூட கடக்காத 825 பிஞ்சுக் குழந்தைகளும் மரணித்து இருப்பது சோகத்திலும் பெரும் சோகம்.

News March 28, 2025

மகளிர் உரிமைத்தொகை விரைவில் விரிவாக்கம்: Dy CM

image

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்க விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என சட்டப்பேரவையில் Dy CM உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் தற்போது 1.15 கோடி குடும்பத்தினர் மாதந்தோறும் ₹1,000 பெற்று வருவதாகக் கூறிய அவர், விடுபட்ட தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளை சேர்க்கும் பணி விரைவில் தொடங்கும் என்றார். உங்கள் குடும்பத்திற்கு ₹1,000 வருகிறதா?

News March 28, 2025

மகனிடம் பேச முடியாமல் தவிக்கும் ஷிகர் தவான்

image

தன் மகனை பிரிந்து வேதனையுடன் வாழ்த்து வருவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். மகனை பார்த்து 2 ஆண்டுகள் ஆவதாகவும், அவனிடம் பேசி ஒராண்டு ஆவதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தனது செல்போன் எண்ணை ப்ளாக் செய்தாலும், குறுச்செய்தி அனுப்புவதை நிறுத்தவில்லை எனவும் வருத்தத்துடன் கூறியுள்ளார். ஷிகர் தவானுக்கும் அவரது மனைவிக்கும் கடந்த 2023ஆம் ஆண்டு விவாகரத்தானது.

News March 28, 2025

அம்பேத்கர் பிறந்தநாள் தேசிய விடுமுறையாக அறிவிப்பு

image

சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதியை தேசிய பொது விடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வெளியிட்டுள்ளார். அரசாணையை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அரசியலமைப்பின் சிற்பி, சமூகத்தில் சமத்துவத்திற்கான புதிய சகாப்தத்தை நிறுவிய அம்பேத்கரின் பிறந்தநாளில் பொது விடுமுறை அளிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

News March 28, 2025

மியான்மர் பூகம்பம்: அன்றே கணித்த பாபா வங்கா!

image

பிரபல தீர்க்கதரிசி பாபா வங்காவின் மற்றொரு கணிப்பும் பலித்துவிட்டது. ஆம், 2025ஆம் ஆண்டு பல இடங்களில் பயங்கர நிலநடுக்கங்களும், உயிர் பலிகளும் ஏற்படும் என பல ஆண்டுகளுக்கு முன்பே பாபா வங்கா தனது புத்தகத்தில் எழுதி வைத்திருந்தார். அதை செய்தியாகவும் ஊடகங்கள் வெளியிட்டன. இந்நிலையில், அவர் கூறியதை போலவே தற்போது மியான்மர் மற்றும் தாய்லாந்தில் மிக சக்திவாய்ந்த பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன.

News March 28, 2025

பாஜகவின் ஒரே எதிரி திமுக தான்: அண்ணாமலை

image

இபிஎஸ்ஸை தொடர்ந்து டெல்லிக்கு சென்ற அண்ணாமலை, அங்கு அமித்ஷா, ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்து பேசினார். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசியல் நிலவரம் குறித்து இருவரிடமும் பேசியதாக தெரிவித்தார். மேலும், கூட்டணி குறித்து இப்போது பேச வேண்டிய அவசியமில்லை எனக் குறிப்பிட்ட அண்ணாமலை, திமுக மட்டுமே பாஜகவின் எதிரி எனக் கூறினார்.

News March 28, 2025

பிரபல ஷெனாய் இசை மேதை தயா சங்கர் காலமானார்

image

இந்தியாவின் தலைசிறந்த ஷெனாய் இசைக் கலைஞராய் திகழ்ந்த பண்டிட் தயா சங்கர் டெல்லியில் காலமானார். இவர் புகழ்பெற்ற ஷெனாய் இசை மேதை பண்டிட் ஆனந்த் லாலின் மகனாவார். பண்டிட் ரவி ஷங்கரின் சீடராக இருந்து பயிற்சிபெற்ற இவர் உலகம் முழுவதும் இந்திய கிளாஸிகல் இசையை கொண்டு சென்றார். மறைந்துவரும் ஷெனாய் இசைக்கருவியின் பயன்பாட்டை மீட்டெடுக்க பாடுபட்ட இவரின் மறைவு இசை ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. RIP

News March 28, 2025

வங்கிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை

image

வரும் ஏப்ரலில் தமிழ்நாட்டில் வங்கிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை வருகிறது. ரிசர்வ் வங்கி அறிவிப்பின் படி, பின்வரும் நாள்களில் வங்கிகள் செயல்படாது: ஏப்.6 (ஞாயிறு, ராமநவமி), ஏப்.10 (மகாவீர் ஜெயந்தி), ஏப்.12, 2-ம் சனி, ஏப்.14 (தமிழ் புத்தாண்டு, விஷு), ஏப்.18 (புனித வெள்ளி), ஏப்.26 4-ம் சனி, ஏப்.13, 20, 27 – ஞாயிறு. இந்த தேதிகள் அடிப்படையில் உங்கள் வங்கிப் பணிகள், பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

error: Content is protected !!