news

News March 28, 2025

பரிதாப நிலையில் சிஎஸ்கே… பயம் காட்டும் ஆர்சிபி!

image

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் திரிபாதி(5), கேப்டன் ருதுராஜ்(0), ஹூடா(4), சாம் கரன்(8) ஆகியோர் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். ஆர்சிபி வீரர் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். 9 ஓவர்கள் முடிவில் 53 ரன்கள் எடுத்துள்ள சிஎஸ்கே, இன்னும் 11 ஓவர்களில் 144 ரன்கள் எடுக்குமா?

News March 28, 2025

அதிமுக சூழ்ச்சி பலிக்காது.. ஸ்டாலினின் காட்டமான பதிவு

image

தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகரித்திருக்கிறதா? அல்லது குறைந்திருக்கிறதா? என்பதை புள்ளிவிவரங்கள் சொல்லும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. ஆட்சிக்காலங்கள் போல் சாதி – மத மோதல்கள் நிகழ்ந்துள்ளனவா? எனவும் x தளத்தில் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் அதிமுக set செய்ய நினைக்கும் narrative-வுக்குப் பின்னால் இருக்கும் சூழ்ச்சி ஒருபோதும் நிறைவேறாது என்றும் தெரிவித்துள்ளார்.

News March 28, 2025

39 மனைவிகள்… 94 பிள்ளைகள்… அம்மாடியோவ்…!

image

ஒரு பொண்டாட்டிய வச்சே சமாளிக்க முடியல என ரொம்ப பேர் பொலம்புறத பாத்துருப்போம். ஆனா, 39 மனைவிகளோட ஒருத்தர் வாழ்ந்திருக்காரு. அதுவும் இந்தியாவுல. மிசோரமைச் சேர்ந்த சியோனா சானாதான் அது. உலகின் மிகப்பெரிய குடும்பத்துக்கு சொந்தக்காரரான அவரு, 39 மனைவிகள், 94 குழந்தைகள், 33 பேரப்பிள்ளைகளோட ஒன்னா வாழ ஒரு அரண்மனையையே கட்டிருக்காரு. செழிப்பா வாழ்ந்த மனுஷன், 2021ம் வருஷம் ரத்த சோகை நோயால இறந்துட்டாராம்.

News March 28, 2025

பர்பிள் தொப்பியை தட்டித் தூக்கிய சிஎஸ்கே வீரர்…!

image

சிஎஸ்கே அணியால் ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட நூர் அகமது, அதிக விக்கெட்டுகளை (7) வீழ்த்தியவர்களுக்கான பர்பிள் தொப்பியை தனதாக்கிக் கொண்டுள்ளார். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர், ஆர்சிபி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தை லக்னோ வீரர் ஷர்துல் தாகூர் (6) பிடித்துள்ளார்.

News March 28, 2025

பெண்கள் ‘BRA’வில் இப்படி ஒரு பிரச்னையா?

image

நவீன வாழ்க்கை முறையில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்திலும் பிரச்னை உள்ளது. இதில் பெண்கள் அணியும் ‘பிரா’வும் விதிவிலக்கல்ல. அண்மை ஆய்வில் சுமார் 64% பிராக்களில், ஆபத்தான கெமிக்கல்கள் இருந்துள்ளன. பிரா உடலுடன் ஒட்டி இருப்பதால், அதிலுள்ள கெமிக்கல்கள் சருமத்துக்குள் எளிதாக உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் கலக்கின்றன. இந்த நச்சுகள் நீண்டகாலம் உடலில் தங்கி கேன்சர் உள்ளிட்ட பல நோய்களுக்கு காரணமாகின்றனவாம்.

News March 28, 2025

‘பிரா’வில் ஒளிந்திருக்கும் ஆபத்து

image

பெண்கள் அணியும் பெரும்பாலான பிராக்கள், ஜிம்வேர் துணிகளிலும், நிறமூட்டியிலும் சேர்க்கப்படும் கெமிக்கல்கள் (PFAs) பல நோய்களுக்கு காரணமாகின்றன. நீண்டநாள் உழைக்க வேண்டும், ஈரத்தை வேகமாக உறிஞ்ச வேண்டும் என்பதற்காக இந்த கெமிக்கல்கள் சேர்க்கப்படுகின்றன. இவை பெண்ணுடலின் ஹார்மோன் சமநிலையை பாதிப்பது, குழந்தை பேறின்மை, நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பது, புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு காரணமாகலாம்.

News March 28, 2025

IPL: டிக்கெட் விலை ரூ.2,343… வரி ரூ.1,657

image

மக்களிடம் வரி மூலம் அரசு எவ்வளவு சுரண்டுகிறது என்று கூறி, நெட்டிசன் ஒருவர் பகிர்ந்துள்ள ஐபிஎல் டிக்கெட் தற்போது வைரலாகி வருகிறது. அதில், சென்னையில் டிக்கெட்டின் அடிப்படை ரூ.2,343, பொழுதுபோக்கு வரி(25%) ரூ.781 ஆகியவற்றுடன் ஜிஎஸ்டி 28%-மும் விதிக்கப்படுகிறது. இதில் மத்திய, மாநில அரசுகள் தலா 14% எடுத்துக் கொள்கின்றன. அதாவது ரூ.4,000 கொடுத்து வாங்கும் டிக்கெட்டில் வரி மட்டுமே ரூ.1,657. இது சரி தானா?

News March 28, 2025

Rewind: பேரழிவு நாளாக மாறுகிறதா மார்ச் 28?

image

மார்ச் 28-ம் தேதியில் மட்டும் வெவ்வேறு ஆண்டுகளில் 3 மிகப்பெரிய நிலநடுக்கங்களை உலகம் கண்டுள்ளது. துருக்கியில் 1970 மார்ச் 28 அன்று நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்(7.1) பதிவானது. இதில், 1086 பேர் உயிரிழந்தனர். இந்தோனோசியாவின் சுமத்ரா தீவுகளில் 2005 மார்ச் 28-ல் ஏற்பட்ட நிலநடுக்கம் (8.7), 905 பேரின் உயிரைக் குடித்தது. இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மியான்மர் நாட்டை உருக்குலையச் செய்துள்ளது.

News March 28, 2025

முட்டை விலை உயர்ந்தது

image

நாமக்கல்லில் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு முட்டைக்கு 10 காசு உயர்ந்த நிலையில் இன்று மேலும் 25 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. முட்டையின் தேவை அதிகரித்திருப்பதால் விலை உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சில்லறை விற்பனையிலும் முட்டை விலை உயரும் என்பதால், இது மக்களுக்கு கூடுதல் சுமையை அளிக்கும்.

News March 28, 2025

விஜய் கட்சிக்கு புதுப்பெயர் வைத்த அண்ணாமலை!

image

தவெக கூட்டத்தில் மோடியை விஜய் விமர்சித்ததற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். அரசியல் என்பது சும்மா மைக் எடுத்து பேசிவிட்டு போவது அல்ல எனக் கூறிய அவர், முதலில் விஜய் களத்திற்கு வர வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், ஊடக வெளிச்சத்துக்காக மோடியை விஜய் விமர்சிப்பதாக குறிப்பிட்ட அண்ணாமலை, ஆதவ் அர்ஜுனாவை சேர்த்ததன் மூலம் தமிழக வெற்றிக் கழகம், தமிழக லாட்டரி கழகமாக மாறிவிட்டது என விமர்சித்தார்.

error: Content is protected !!