news

News March 16, 2024

ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டுக்கு மாற்றமில்லை

image

ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட இருப்பதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மறுத்துள்ளார். மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக விரைவில் நடைபெறவுள்ளது. இதனால் போட்டிகள், இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படலாம் என செய்திகள் வெளியாகின. இதுகுறித்து ஜெய் ஷா அளித்துள்ள பேட்டியில், “ஐபிஎல் போட்டிகள், வெளிநாட்டுக்கு மாற்றப்படாது” எனக் கூறியுள்ளார்.

News March 16, 2024

இந்தியா இன்னும் வேகமாக வளரும்

image

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பிரதமர் மோடி இந்தியா டுடே நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டார். அங்கு பேசிய அவர், “உலக நாடுகள் அனைத்தும் நிலையில்லாமல் ஸ்தம்பித்து போயிருக்கும்போது இந்தியா மட்டும் வளர்ச்சியை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. நமது நாடு இன்னும் வேகமாக வளரும்” என்று பேசினார். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கியே தீருவேன் என்றும் அவர் உணர்ச்சிபொங்க பேசினார்.

News March 16, 2024

டிரோன் மூலம் பாதுகாப்புப் பணி

image

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி எல்லைகளில் டிரோன்கள் மூலம் பாதுகாப்புப் பணி தீவிரப்படுத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு கரன்சிகள், போதைப் பொருட்கள் ஊடுருவலை தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், தேசிய, மாநில, மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடி அமைக்கப்படும் என்றார். மேலும், பணம், மது, பரிசுப் பொருட்கள் விநியோகமும் தடுக்கப்படும் எனக் கூறினார்.

News March 16, 2024

25 ஆண்டுகளில் 35 கோடி வாக்காளர்கள் அதிகரிப்பு

image

1999-2024 வரையிலான வாக்காளர்கள், வாக்களித்தவர்களின் விவரம்.
*1999 – 62 கோடி வாக்காளர்கள் – 37.05 கோடி பேர் வாக்களித்தனர்
*2004 – 67 கோடி வாக்காளர்கள் – 38.93 கோடி பேர் வாக்களித்தனர்
*2009 – 72 கோடி வாக்காளர்கள் – 41.70 கோடி பேர் வாக்களித்தனர்
*2014 – 83 கோடி வாக்காளர்கள் – 55.38 கோடி பேர் வாக்களித்தனர் *2019 – 91 கோடி வாக்காளர்கள் – 61.20 கோடி பேர் வாக்களித்தனர் *2024 – 97 கோடி வாக்காளர்கள்

News March 16, 2024

மக்களவைத் தேர்தலில் 544 தொகுதிகள்?

image

மக்களவைத் தேர்தலில் மொத்தம் 544 தொகுதிகள் என குறிப்பிட்டது பற்றி தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. மணிப்பூரில் ஓராண்டுக்கும் மேலாக கலவர சூழல் உள்ளது. இந்நிலையில், இன்னர் மணிப்பூரில் ஏப்.19, அவுட்டர் மணிப்பூரில் ஏப்.19, 26-ல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அவுட்டர் மணிப்பூர் தொகுதிக்கு மட்டும் 2 கட்டங்களாக தேர்தல் நடப்பதால் 544 தொகுதிகள் எனக் குறிப்பிட்டதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

News March 16, 2024

உங்களுக்கு இந்த மெசேஜ் வந்துச்சா?

image

கடந்த 2 நாட்களாக நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு பிரதமரின் அலுவலகத்தில் இருந்து மெசேஜ் வருகிறது. விக்ஸித் பாரத் என்ற பெயரில் வாட்ஸ்அப் செயலியில் வரும் இந்த மெசேஜ், மத்திய அரசின் மூலம் அனுப்பப்படுகிறது. அதில் பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால நடவடிக்கைகள் குறித்து கருத்து கேட்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் இதுபோன்ற மெசேஜ்கள் விதிமீறல் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பத் தொடங்கியிருக்கின்றனர்.

News March 16, 2024

அனுதாப ராணி என அழைத்தார்கள்

image

“அனுதாப ராணி” என மக்கள் தன்னை அழைத்ததாக நடிகை சமந்தா கூறியுள்ளார். மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டபோது, அதுகுறித்து பொதுவெளியில் பகிர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக கூறிய அவர், நோயின் தாக்கத்தால் சினிமா வாழ்க்கையில் உச்சத்தில் இருந்தும், தன்னால் அதை அனுபவிக்க முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து சமந்தா விரைவில் மீண்டுவர வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்.

News March 16, 2024

இதை செய்தால் நல்ல மைலேஜ் கிடைக்கும்

image

பெட்ரோல் விலை கையை கடிக்கும் நிலையில், கீழ்காணும் வழிமுறையை இருசக்கர வாகன ஓட்டிகள் பின்பற்றினால் நல்ல மைலேஜ் கிடைக்கும். 1) பைக்கை குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் செய்ய வேண்டும் 2) ஸ்பீடோமீட்டரில் உள்ள எக்கனாமி என்று குறிப்பிடப்பட்டிருக்கும் வேகத்துக்குள் பைக்கை ஓட்டுங்கள் 3) டயர்களில் போதிய காற்று அழுத்தம் இருப்பதை உறுதிப்படுத்துங்கள் 4) இன்ஜின் ஆயிலை கால வரம்புக்குள் மாற்றுங்கள்

News March 16, 2024

தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது காங்கிரஸ்

image

தொழிலாளர்களுக்கான தேர்தல் வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில், ”நாடு முழுவதும் குறைந்தபட்ச ஒருநாள் ஊதியம் ₹400 என்று நிர்ணயம் செய்யப்படும், தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை, மருந்துகள், சிகிச்சைகள் ஆகியவை வழங்கப்படும், பாஜக அரசின் தொழிலாளர் விரோத சட்டங்கள் நீக்கப்படும், தனியார் நிறுவனங்களில் பணிப் பாதுகாப்பு வழங்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

News March 16, 2024

விராட் கோலிக்கு தெ.ஆப்பிரிக்க வீரர் எச்சரிக்கை

image

ஐபிஎல்லில் கோலி ரன்குவிக்க வேண்டும், இல்லையெனில் டி20 உலக கோப்பை அணியில் இடம் கிடைப்பது கடினம் என்று தெ.ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஸ்டெயின் எச்சரித்துள்ளார். அவர் கூறுகையில், “கோலி சில போட்டிகளில் விளையாடாமல் இருந்ததால், ரன்குவிப்பில் சில வீரர்கள் முந்தி சென்று விட்டது போல தோன்றுகிறது. இதனால் ஐபிஎல் தொடரில் ரன்குவிக்கவில்லையெனில், கோலியின் இடத்துக்கு ஆபத்து ஏற்படும்” என்றார்.

error: Content is protected !!