news

News March 16, 2024

உங்களுக்கு இந்த மெசேஜ் வந்துச்சா?

image

கடந்த 2 நாட்களாக நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு பிரதமரின் அலுவலகத்தில் இருந்து மெசேஜ் வருகிறது. விக்ஸித் பாரத் என்ற பெயரில் வாட்ஸ்அப் செயலியில் வரும் இந்த மெசேஜ், மத்திய அரசின் மூலம் அனுப்பப்படுகிறது. அதில் பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால நடவடிக்கைகள் குறித்து கருத்து கேட்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் இதுபோன்ற மெசேஜ்கள் விதிமீறல் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பத் தொடங்கியிருக்கின்றனர்.

News March 16, 2024

அனுதாப ராணி என அழைத்தார்கள்

image

“அனுதாப ராணி” என மக்கள் தன்னை அழைத்ததாக நடிகை சமந்தா கூறியுள்ளார். மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டபோது, அதுகுறித்து பொதுவெளியில் பகிர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக கூறிய அவர், நோயின் தாக்கத்தால் சினிமா வாழ்க்கையில் உச்சத்தில் இருந்தும், தன்னால் அதை அனுபவிக்க முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து சமந்தா விரைவில் மீண்டுவர வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்.

News March 16, 2024

இதை செய்தால் நல்ல மைலேஜ் கிடைக்கும்

image

பெட்ரோல் விலை கையை கடிக்கும் நிலையில், கீழ்காணும் வழிமுறையை இருசக்கர வாகன ஓட்டிகள் பின்பற்றினால் நல்ல மைலேஜ் கிடைக்கும். 1) பைக்கை குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் செய்ய வேண்டும் 2) ஸ்பீடோமீட்டரில் உள்ள எக்கனாமி என்று குறிப்பிடப்பட்டிருக்கும் வேகத்துக்குள் பைக்கை ஓட்டுங்கள் 3) டயர்களில் போதிய காற்று அழுத்தம் இருப்பதை உறுதிப்படுத்துங்கள் 4) இன்ஜின் ஆயிலை கால வரம்புக்குள் மாற்றுங்கள்

News March 16, 2024

தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது காங்கிரஸ்

image

தொழிலாளர்களுக்கான தேர்தல் வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில், ”நாடு முழுவதும் குறைந்தபட்ச ஒருநாள் ஊதியம் ₹400 என்று நிர்ணயம் செய்யப்படும், தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை, மருந்துகள், சிகிச்சைகள் ஆகியவை வழங்கப்படும், பாஜக அரசின் தொழிலாளர் விரோத சட்டங்கள் நீக்கப்படும், தனியார் நிறுவனங்களில் பணிப் பாதுகாப்பு வழங்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

News March 16, 2024

விராட் கோலிக்கு தெ.ஆப்பிரிக்க வீரர் எச்சரிக்கை

image

ஐபிஎல்லில் கோலி ரன்குவிக்க வேண்டும், இல்லையெனில் டி20 உலக கோப்பை அணியில் இடம் கிடைப்பது கடினம் என்று தெ.ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஸ்டெயின் எச்சரித்துள்ளார். அவர் கூறுகையில், “கோலி சில போட்டிகளில் விளையாடாமல் இருந்ததால், ரன்குவிப்பில் சில வீரர்கள் முந்தி சென்று விட்டது போல தோன்றுகிறது. இதனால் ஐபிஎல் தொடரில் ரன்குவிக்கவில்லையெனில், கோலியின் இடத்துக்கு ஆபத்து ஏற்படும்” என்றார்.

News March 16, 2024

பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

image

தேர்தல்களில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தேர்தல்களில் பணப் பட்டுவாடா மற்றும் அதிகார பலத்தை தேர்தல் ஆணையம் அனுமதிக்காது. இதுகுறித்து வரும் புகார்கள் மீது விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

News March 16, 2024

ISPL இறுதிப் போட்டியில் பங்கேற்ற அமிதாப் பச்சன்

image

ISPL கிரிக்கெட் இறுதிப் போட்டியை அமிதாப் பச்சன் காண வந்தது அவரது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சமீபத்தில் அவருக்கு காலில் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தானே நகரில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று வீரர்களை அவர் ஊக்கப்படுத்தினார். இறுதிப் போட்டியில் மும்பை அணியை கொல்கத்தா அணி வீழ்த்தியது. மும்பை அணியின் உரிமையாளர் அபிஷேக் பச்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 16, 2024

GATE முடிவுகள் இணையத்தில் வெளியானது

image

GATE 2024 தேர்வுகளுக்கான முடிவுகள் இணையத்தில் சற்றுமுன் வெளியானது. இந்தத் தேர்வுகள் பிப்ரவரி 3, 4, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் முதுகலை பட்டப் படிப்பு மற்றும் டாக்டரேட் படிப்புகளில் இணையலாம். <>GATE <<>>இணையதளத்தில் நேரடியாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

News March 16, 2024

ஓபிஎஸ் தரப்புக்கு மீண்டும் பின்னடைவு

image

இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், இதுகுறித்து தேர்தல் ஆணையத்தை அணுகும்படியும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவாகும்.

News March 16, 2024

ஆந்திர சட்டசபைக்கு மே 13ல் தேர்தல்

image

ஆந்திரா சட்டசபைக்கு மே 13ல் தேர்தல் நடைபெறுகிறது. 175 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 18ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 25ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீது ஏப்ரல் 26ஆம் தேதி பரிசீலனை நடக்கிறது. மனுக்களை திரும்ப பெற ஏப்ரல் 29ஆம் தேதி கடைசி நாளாகும். இதையடுத்து மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறும். அதில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ல் எண்ணப்படும்.

error: Content is protected !!