news

News March 29, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச்.29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News March 29, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச்.29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News March 29, 2025

இ(பி)றந்த குழந்தைக்கு வந்தது உயிர்…அதிசயமா? அலட்சியமா?

image

அரசு சுகாதார மையத்தில் இறந்ததாகக் கூறப்பட்ட பச்சிளம் குழந்தை, தனியார் ஹாஸ்பிடலில் உயிர்பிழைத்த சம்பவம் பிஹாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பகதூர் பைதா – ஜோதி குமாரி தம்பதிக்கு பிறந்த குழந்தை அசைவற்று இருந்ததால் அது இறந்துவிட்டதாக அரசு டாக்டர் கூறியுள்ளார். பின்னர், தனியார் ஹாஸ்பிடலில் ஆக்சிஜன் செலுத்தியபோது குழந்தை அழத் தொடங்கி இருக்கிறது. இதனால், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News March 29, 2025

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே படுதோல்வி…!

image

சேப்பாக்கத்தில் CSK அணியை வென்று 17 ஆண்டுகால சோக வரலாற்றுக்கு RCB முடிவு கட்டியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த RCB அணியில், கேப்டன் ரஜத் பட்டிதார் அரைசதம் விளாசினார். 20 ஓவர்களில் அந்த அணி 196 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய CSK அணியில், கேப்டன் ருதுராஜ் டக் அவுட் ஆனார். இறுதிவரை போராடியும் CSK அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. 2008-க்கு பிறகு சேப்பாக்கத்தில் ஆர்சிபி வென்றுள்ளது.

News March 29, 2025

ராசி பலன்கள் (29.03.2025)

image

➤மேஷம் – நட்பு ➤ரிஷபம் – நலம் ➤மிதுனம் – நன்மை ➤கடகம் – லாபம் ➤சிம்மம் – செலவு ➤கன்னி – அன்பு ➤துலாம் – தடங்கல் ➤விருச்சிகம் – மகிழ்ச்சி ➤தனுசு – ஆதாயம் ➤மகரம் – தாமதம் ➤கும்பம் – இன்பம் ➤மீனம் – வரவு.

News March 29, 2025

தினமும் ரூ.42. 86 லட்சம் சம்பாதிக்கும் ரிஷப் பண்ட்…!

image

18-வது ஐபிஎல் சீசனில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் ரிஷப் பண்ட். ரூ.27 கோடிக்கு அவரை லக்னோ அணி ஏலத்தில் எடுத்தது. இதனை ஐபிஎல் நடைபெறும் ஒவ்வொரு நாளைக்கும் கணக்கிட்டு பார்த்தால், பண்ட்டின் ஒருநாள் வருமானம் ரூ.42,85,714. ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,78,571-ம், ஒவ்வொரு நிமிடத்திற்கும் ரூ.2,976-ம் அவர் சம்பாதிக்கிறார். இந்த தொகைக்கு தகுதியான வீரரா ரிஷப் பண்ட்?

News March 29, 2025

அனைத்து தொகுதிகளிலும் Mini Stadium: து.முதல்வர் அறிவிப்பு

image

மாநிலம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் மாணவர், இளைஞர் பயன்பெற Mini Stadium அமைக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இதுவரை 5 தொகுதிகளில் ஸ்டேடியம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும், 9 தொகுதிகளில் பணிகள் நடந்து வருவதாகவும் குறிப்பிட்ட அவர், நிலம் இருக்கின்றன அனைத்து தொகுதிகளிலும் ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

News March 29, 2025

ரூ.7.5 லட்சம் பிணையில்லா கல்விக் கடன் பெறலாம்…!

image

மத்திய அரசின் வித்யாலக்‌ஷ்மி திட்டத்தில் மாணவர்கள் எந்த பிணையும் இல்லாமல் கல்விக் கடன் பெறலாம். நாட்டின் 860 உயர்தர கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். https://www.vidyalakshmi.co.in இணையதளத்தில் உங்கள் விவரங்களை பதிவிட்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். ஆவணங்களை வங்கி சரிபார்த்த பிறகு, உங்கள் கல்வி நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் தொகை வரவு வைக்கப்படும்.

News March 29, 2025

ஷிண்டேவை விமர்சித்த வழக்கு.. குணால் கம்ராவுக்கு முன்ஜாமின்

image

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால முன்ஜாமீன் வழங்கியுள்ளது. அத்துடன் ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய மும்பை கார் காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீண்டும் மும்பை சென்றால் காவல்துறை தன்னை கைது செய்வார்கள் என்பதால், முன்ஜாமின் கேட்டு குணால் மனு தாக்கல் செய்திருந்தார்.

News March 28, 2025

தம்பதிகளே… இதற்கு மட்டும் கூச்சப்படாதீங்க!

image

கணவன்- மனைவி, ஒரு விஷயத்துக்காக மட்டும் எப்போதும் தயங்கவே கூடாது. Sorry கேட்க ஒருபோதும் யோசிக்காதீர்கள். ஈகோ, கோபம் என எதுவானாலும் மன்னிப்புக் கேட்டுவிட்டால், எல்லாமே சரியாகிவிடும். கணவர் வந்து கேட்கட்டும், மனைவி முதலில் கேட்கட்டும் என ஒத்திப் போடுவதை தவிருங்கள். இருவரும் பேசாமல் இருப்பதால் எதுவும் மாறாது. Sorry சொல்லி உணர்வை வெளிப்படுத்துங்க. எவ்வளவு மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை உணர்வீர்கள்.

error: Content is protected !!