news

News March 18, 2024

வெளிநாடுகளில் சாதனை படைத்த ‘3’

image

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘3’. அன்று சுமாரான வெற்றிப்பெற்ற இப்படம் சமீபத்தில் ரீ-ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து சிங்கப்பூர், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் பிரான்சில் இப்படம் 2000 டிக்கெட்டுகள் விற்பனையாகி, அதிக டிக்கெட்டுகள் விற்பனையான தமிழ் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. முன்னதாக பாபா 1000 டிக்கெட்டுகள் விற்பனையானது.

News March 18, 2024

கோவை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

கோவை ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி இன்று மாலை கோவைக்கு செல்கிறார். இந்த நிலையில், தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர், பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி முழுவதும் தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர்.

News March 18, 2024

ஜாமின் கோரி செந்தில் பாலாஜி மீண்டும் மனுத் தாக்கல்

image

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜுன் 14இல் அவர் கைது செய்யப்பட்டார். பல முறை அவர் ஜாமின் கோரி நீதிமன்றங்களில் மனுத் தாக்கல்
செய்திருந்த நிலையில், அவரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மக்களவை தேர்தல் பரப்புரை தீவிரமடைய உள்ள நிலையில், தற்போது 2ஆவது முறையாக அவர் உச்சநீதிமன்றம் சென்றுள்ளார்.

News March 18, 2024

6 மாநில உள்துறை செயலர்களை மாற்ற உத்தரவு

image

6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றம் செய்ய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் உயரதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், குஜராத், உ.பி., பீகார், ஜார்கண்ட், ஹிமாச்சல், உத்தராகண்ட் மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல மேற்கு வங்க டிஜிபியை மாற்றவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

News March 18, 2024

கொங்கு மண்டலத்தை குறி வைத்த திமுக

image

கடந்த 40 ஆண்டுகளில் திமுகவுக்கு பெரிய அளவில் தேர்தல் வெற்றி கிடைக்காத பகுதி கொங்கு மண்டலம். குறிப்பாக 2016ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வராமல் போனதற்கு மிக முக்கிய காரணம் கொங்கு மண்டலத்தில் அடைந்த தோல்வி. 2021 சட்டப்பேரவை தேர்தல் வரை அது எதிரொலித்தது. இந்நிலையில், அந்த குறையை போக்கும் விதமாக பொள்ளாச்சி, கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட தொகுதிகளில் திமுகவே நேரடியாக களம் காண்கிறது.

News March 18, 2024

அஷ்வினுக்கு ஐபிஎல் டிக்கெட் கிடைக்கவில்லை

image

CSK போட்டிக்கான ஐபிஎல் டிக்கெட்டுகள் எனக்கு கிடைக்கவில்லை என அஷ்வின் வருத்தம் தெரிவித்துள்ளார். X பக்கத்தில் பதிவிட்ட அவர், “ஐபிஎல் டிக்கெட்டுகளுக்கு அதிக டிமாண்ட் இருக்கிறது. எனது குழந்தைகள் போட்டியை பார்க்க விரும்புகிறார்கள்” எனத் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வாங்க குவிந்ததால், இணையதளங்கள் முடங்கின. பின்னர், 10 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.

News March 18, 2024

நாளை முதல் காங்கிரஸ் விருப்ப மனு

image

காங். சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 40 மக்களவைத் தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடக்கவுள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் நாளை (19.03.24) முதல் நாளை மறுநாள் (20.03.24) வரை விருப்ப மனு பெறப்பட உள்ளது. பொதுத்தொகுதிக்கு ₹30,000, தனித்தொகுதி, மகளிருக்கு அனைத்து தொகுதிகளுக்கும் ₹15,000, சட்டமன்ற தொகுதிக்கு ₹10,000 செலுத்தி மனுவை பெறலாம்.

News March 18, 2024

அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற ஐபிஎல் அணிகள்

image

▶மும்பை இந்தியன்ஸ் – 138 போட்டிகள்,
▶சென்னை சூப்பர் கிங்ஸ் – 131 போட்டிகள்,
▶கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 119 போட்டிகள்,
▶ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 114 போட்டிகள்,
▶டெல்லி கேப்பிட்டல்ஸ் – 105 போட்டிகள்,
▶பஞ்சாப் கிங்ஸ் – 104 போட்டிகள்,
▶ராஜஸ்தான் ராயல்ஸ் – 101 போட்டிகள்,
▶சன்ரைசர்ஸ் ஐதராபாத் – 78 போட்டிகள்

News March 18, 2024

BREAKING : கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை

image

அதிமுகவின் கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் ஓபிஎஸ் இரட்டை இலை, சின்னத்தை பயன்படுத்தி வந்தார். இதற்கு எதிராக இபிஎஸ் தரப்பு தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

News March 18, 2024

தமிழகத்தில் இருந்து போட்டியிடுகிறேன்

image

தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த தமிழிசை செளந்தரராஜன் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இதனை உறுதி செய்த தமிழிசை, மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியில் போட்டியிடவில்லை, தமிழகத்தில் இருந்து போட்டியிட உள்ளதாக கூறினார். மேலும், எந்த தொகுதி என்பதை கட்சித் தலைமை அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!