news

News March 20, 2024

சட்டப்பேரவை தேர்தலில் பலத்தை காட்டுவேன்

image

2026 தேர்தலில் நான் யார் என காட்டுவேன் என சசிகலா சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ”மூன்று அணிகளாக தற்போது அதிமுக உள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்குள் ஒரே அணியாக மாறும். 2026இல் எங்களுக்கும் திமுகவுக்கும் இடையே தான் நேரடி போட்டி இருக்கும். அதில், அதிமுக அபார வெற்றிபெற்று மீண்டும் அரியணை ஏறும். இந்த மக்கள் விரோத திமுக அரசு முற்றிலும் அகற்றப்பட்டு மக்கள் நிம்மதி அடைவார்கள்” என்றார்.

News March 20, 2024

தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது

image

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தொலைதூர, இணையவழி தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. தொலைதூர மற்றும் இணையவழியில் ஏராளமான மாணவர்கள் அண்ணாமலை பல்கலை.,யில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் எழுதிய தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த முடிவுகளை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

News March 20, 2024

சித்திரை திருவிழா : மதுரை ஆட்சியருக்கு நோட்டீஸ்

image

மதுரை சித்திரை திருவிழாவின் போது, சாமி சிலை மீது பம்புகள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்க தடை கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிக பிரஷர் கொண்ட பம்புகள் மூலம் ரசாயனப் பொடிகள் கலந்து தண்ணீர் பீய்ச்சுவதால் சிலை மற்றும் ஆபரணங்கள் பாதிக்கப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஆட்சியருக்கு உத்தரவிட்டது.

News March 20, 2024

கூகுளுக்கு ரூ.2,254 கோடி அபராதம்

image

செய்தி பிரசுர உரிமையாளர்களுடனான ஒப்பந்தத்தை மீறியதற்காக கூகுளுக்கு பிரான்ஸ் அரசு ரூ.2,254 கோடி அபராதம் விதித்துள்ளது. முன்னணி இணையதளமான கூகுள், செய்திகளை தேடிப்பிடித்து தருகிறது. இதன் மூலம் கிடைக்கும் மறைமுக வருவாயை பகிர்வது தொடர்பாக பிரான்சை சேர்ந்த செய்தி பிரசுர உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனை மீறியதற்காக பிரான்ஸ் அரசின் போட்டி ஆணையம் அபராதம் விதித்துள்ளது.

News March 20, 2024

மீடியா முன்னாடி மூச்சு விடக்கூட பயமாக இருக்கு

image

தேர்தல் நேரமாக இருப்பதால், மீடியா முன்னாடி மூச்சு விடக்கூட பயமாக இருக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் கலகலப்பாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. காவேரி மருத்துவமனையின் வடபழனி கிளையை திறந்து வைத்து பேசிய அவர், “கடந்த 25 வருஷமாக நான் எந்தவொரு கல்லூரி, கட்டட திறப்பு விழாக்களிலும் பங்கேற்பதில்லை. நான் விழாக்களில் கலந்துகொண்டால், அதில் எனக்கும் பங்கு இருப்பதாக வதந்தி கிளப்பி விடுவார்கள்” என்றார்.

News March 20, 2024

பாஜக-ஓபிஎஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி?

image

பாஜக-ஓபிஎஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிகளை இறுதி செய்ய ஓபிஎஸ் கமலாலயம் வந்த நிலையில், பாஜக தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை. இதை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட ஓபிஎஸ், பாஜகவுடன் மீண்டும் பேசுவோம் என கூறிச் சென்றார். ஓபிஎஸ் 2 தொகுதிகளை கேட்டதாகவும், ஆனால் பாஜக ஒரு தொகுதி மட்டுமே தர முன்வந்ததாகவும் கூறப்படுகிறது.

News March 20, 2024

வெல்லப்போவது CSK-வா? அல்லது RCB-யா?

image

சென்னை- பெங்களூரு இடையேயான முதல் ஐபிஎல் போட்டி, நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இதுவரை சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் போட்டிகளில், CSK-7, RCB-1 போட்டிகளில் வென்றுள்ளன. 2008இல் இருந்து ஒரு போட்டியில் கூட CSK-வை சேப்பாக்கத்தில் வீழ்த்தாத RCB அணி, 16 வருட வரலாற்றை மாற்றுமா? அல்லது CSK வெற்றியை தொடருமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். உங்கள் கருத்து என்னவென்று கமெண்டில் சொல்லுங்க?

News March 20, 2024

பிப்ரவரியில் ரூ.18.2 லட்சம் கோடி யுபிஐ பரிவர்த்தனை

image

நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.18.2 லட்சம் கோடிக்கு யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. ரொக்கமாக பணத்தை எடுத்து செல்ல விரும்பாதோர், யுபிஐ வசதிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிப்ரவரி மாதத்தில் 122 கோடி பரிவர்த்தனைகளின் மூலம் ரூ.18.2 லட்சம் கோடி பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் ரூ.40,000 கோடி முதல் ரூ.80,000 கோடி வரை பரிவர்த்தனை நடந்துள்ளது.

News March 20, 2024

மதுபான விநியோகத்திற்கு தடை

image

சர்வதேச கருத்தரங்குகளில் மதுபானம் விநியோகிக்கக் கூடாது என ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பாமக வழக்கறிஞர் கே.பாலு தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மதுபானம் விநியோகிப்பது குறித்து தமிழக அரசு அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. மேலும், வழக்கு விசாரணை முடியும் வரை கூடுதல் கட்டணம் வசூலித்து அதற்கு அன்பளிப்பாக மதுபானம் வழங்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

News March 20, 2024

ஐபிஎல் ‘Fans Park’ தேதி வெளியானது

image

2024 ஐபிஎல் தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளதால், ஐபிஎல் ‘Fans Park’ என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பெரியத் திரையில் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக காண BCCI சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் மார்ச் 22 (CSK – RCB) மற்றும் 23 (KKR – SRH) ஆகிய தேதிகளிலும், கோவை மாவட்டத்தில் மார்ச் 30 (LSG – PBKS) மற்றும் 31 (GT – SRH) ஆகிய தேதிகளிலும் ஒளிபரப்ப உள்ளது.

error: Content is protected !!