news

News March 21, 2024

+2 பொதுத்தேர்வு நாளையுடன் நிறைவு

image

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வுகள், நாளையுடன் (மார்ச் 22) நிறைவடைகிறது. தேர்வுகள் எளிமையாக இருந்ததால் பலர் சதம் அடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. நாளை உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மே 6ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும்.

News March 21, 2024

நான்கு தொகுதிகளில் திமுக – பாஜக நேருக்கு நேர்

image

தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 4 தொகுதிகளில் திமுகவுடன் நேருக்கு நேர் மோதுகிறது. கோவை – அண்ணாமலை vs கணபதி ராஜ்குமார், தென் சென்னை – தமிழிசை vs தமிழச்சி தங்கப்பாண்டியன், நீலகிரி – எல்.முருகன் vs ஆ.ராசா, மத்திய சென்னை – வினோஜ் செல்வம் vs தயாநிதி மாறன்.

News March 21, 2024

20 தொகுதிகளில் பாஜக போட்டி என அறிவிப்பு

image

தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அதன்படி, பாஜக – 20, பாமக 10, அமமுக -2, ஐஜேகே -1, புதிய நீதிக் கட்சி – 1, ஜான் பாண்டியன் – 1, தேவநாதன் – 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தமாகாவிற்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும், 4 கூட்டணி கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 21, 2024

தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

image

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கோவை – அண்ணாமலை, நீலகிரி – எல்.முருகன், தென் சென்னை – தமிழிசை செளந்தரராஜன், நெல்லை – நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி – பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய சென்னை – வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி – நரசிம்மன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதே போல பெரம்பலூர் – பாரிவேந்தர், வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகின்றனர்.

News March 21, 2024

முட்டை தோசையை விரும்பும் தோனி

image

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி முட்டை தோசையை விரும்பி உண்பார் என லீலா பேலஸ் சமையல் கலைஞர் நகுல் புராணிக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “தோனி சென்னை வரும் போதெல்லாம் இங்கு அடிக்கடி உணவருந்துவார். குறிப்பாக, தோசையை விரும்பி சாப்பிடுவார். முட்டை தோசை என்றால் ரசித்து சாப்பிடுவார். தனக்கு எப்படிபட்ட தோசை வேண்டும் என்பதையும் சில நேரம் முன்கூட்டியே சொல்லிவிடுவார்” என்றார்.

News March 21, 2024

மாரடைப்பை ஏற்படுத்தும் ஐஸ் வாட்டர் குடிக்கும் பழக்கம்

image

ஐஸ் வாட்டர் குடிப்பதால் மாரடைப்பு ஏற்படும் என்ற அதிர்ச்சித் தகவலை சீன மருத்துவ அறிவியல் அகாடமி வெளியிட்டுள்ளது. “கோடையில் ஃபிரிட்ஜில் வைத்த நீரை அருந்துவது கொழுப்புகள் கரைவதை தடுக்கும். உடலில் எதிர்ப்பு சக்தியை குறைப்பதோடு ரத்த நாளங்களையும் சுருக்கும். அத்துடன் செரிமான உறுப்புகள், ஊட்டச்சத்துகளை சுவீகரிக்கும் ஆற்றலையும் பாதிக்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 21, 2024

ஜப்பான் நிலநடுக்கத்தில் சிக்கிய இயக்குநர் ராஜமௌலி

image

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இயக்குநர் ராஜமௌலி சிக்கியதாக அவரது மகன் கார்த்திகேயா X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஜப்பானில் இப்போது பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. நாங்கள் 28ஆவது மாடியில் இருந்த போது, தரை மெதுவாக நகர ஆரம்பித்தது. நாங்கள் அனைவரும் பயத்தில் இருந்தோம்” என தனது ஸ்மார்ட் வாட்சில் நிலநடுக்கத்திற்கான எச்சரிக்கை வந்த குறுஞ்செய்தியை புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.

News March 21, 2024

இரட்டை இலையை முடக்கக் கோரி புதிய மனு

image

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பில் புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி படுதோல்வி அடைவதை பார்க்க தொண்டர்கள் விரும்பவில்லை. அதிமுகவின் இரு பிரிவினருக்கும் தனித்தனி சின்னம் ஒதுக்க வேண்டும். தொண்டர்களையும், கட்சியையும் பாதிக்கும் என்பதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

News March 21, 2024

ஆளுநர் ரவி பதவி விலக வேண்டும்

image

உச்சநீதிமன்ற கண்டனத்திற்கு ஆளாகியுள்ள ஆளுநர் ரவிக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தமிழக அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ரவி, உடனடியாக பதவி விலக வேண்டும் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். பொன்முடி வழக்கில், நீதிமன்றம் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்ததையடுத்து, பொன்முடிக்கு இன்று அல்லது நாளை பதவிப்பிரமாணம் செய்துவைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

News March 21, 2024

விஜயபாஸ்கர் காரில் ED அதிகாரிகள் சோதனை

image

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பயன்படுத்தும் காரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று அதிகாலை முதல் ED அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். 9 மணி நேரமாக தொடர்ந்து சோதனை நடைபெற்று வரும் நிலையில், அவரது காரில் ஆவணங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா
என்பதை கண்டறிய அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

error: Content is protected !!