India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2ஜி வழக்கு தொடர்பான CBIயின் மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க ஏற்றுக் கொண்டது டெல்லி உயர்நீதிமன்றம். 2ஜி அலைக்கற்றையை விற்பனை செய்ததில் அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாக கூறி அப்போதைய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் அனைவரும் நிரபராதிகள் என்று 2017ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கெஜ்ரிவாலின் குடும்பத்தினரை காங்., எம்.பி ராகுல் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, நேற்றிரவு கெஜ்ரிவால் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர், தேவையான சட்ட உதவிகளை செய்ய காங்கிரஸ் கட்சி தயார் என உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவில் உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹760 உயர்ந்து ₹49,880க்கு விற்பனையான நிலையில், இன்று ₹280 குறைந்து ₹49,600க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ₹35 குறைந்து ₹6,200க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ₹2 குறைந்து ₹79.50க்கும் கிலோவுக்கு ₹2,000 குறைந்து ₹79,500க்கும் விற்பனையாகிறது.
மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் 33 பேர் போட்டியிட உள்ளனர். அதில் 32 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எதிர்பாராத விதத்தில் 5 பேருக்கு வாரிசு அடிப்படையில் சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெயவர்தன், லோகேஷ் தமிழ்செல்வன் தனபால், ஆற்றல் அசோக்குமார் சவுந்தரம், சிங்கை ராமச்சந்திரன் கோவிந்தராஜ், பாபு பவுன்ராஜ் ஆகியோர் போட்டியிடும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.
மக்களவைத் தேர்தலுக்கான பாமகவின் வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில், தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பெயர் இடம்பெறவில்லை. 2019 தேர்தலில் தருமபுரியில் போட்டியிட்டு அன்புமணி தோல்வியடைந்தார். தொடர்ந்து, மாநிலங்களவை எம்.பியாக உள்ள அவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால் மீண்டும் அவர் மாநிலங்களவை எம்.பியாகவே தொடருவார் எனத் தெரிகிறது.
2024 ஐபிஎல்லில் ஒரு ஓவரில் 2 பவுன்சர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கடந்த சீசனில் ஒரு பவுன்சருக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டிருந்தது. அதற்கு மேல் வீசப்படும் பவுன்சர் நோபாலாக கருதப்பட்டது. இந்நிலையில் 2024 சீசனில், 2 பவுன்சர்கள் வீச பந்துவீச்சாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 3வதாக பவுன்சர் வீசினால் அது நோபாலாக கருதப்படும்.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில், திண்டுக்கல், அரக்கோணம், தருமபுரி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உட்பட 9 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், காஞ்சிபுரம் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. காஞ்சிபுரம் தனித் தொகுதி என்பதால் அங்கு வேட்பாளரை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது.
இந்த வாரம் அமேசான் பிரைம் உள்ளிட்ட OTT தளங்களில் வெளியாகும் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ▶ஜியோ சினிமாவில் 7 ஆஸ்கர் விருதுகளை பெற்ற ஓப்பன்ஹெய்மர் படம். ▶நெட்ஃபிளிக்ஸில் தீபிகா படுகோன், ஹ்ரித்திக் ரோஷனின் நடிப்பில் வெளியான ஃபைட்டர். ▶டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மம்மூட்டி நடித்த ஆப்ரகாம் ஓஸ்லர். ▶அமேசான் ப்ரைமில் தொகுப்பாளர் ரக்ஷன் நடித்த மறக்குமா நெஞ்சம் திரைப்படம் வெளியாகியுள்ளது.
இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான தங்கர் பச்சான் பாமக சார்பாக தேர்தல் அரசியலில் களம் இறங்குகிறார். அழகி, பள்ளிக்கூடம் உள்ளிட்ட தமிழின் சிறந்த படைப்புகள் சிலவற்றை இயக்கியிருக்கும் தங்கர் பச்சான், நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் தொகுதியில் பாமக சார்பாக போட்டியிடுகிறார். பாமக தலைமை இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தங்கர் பச்சான் ஏற்கெனவே சமூக பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வந்தவர்.
மக்களவைத் தேர்தலுக்கான பாமகவின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதன்படி 1.திண்டுக்கல் – கவிஞர் திலகபாமா 2.அரக்கோணம் – வழக்குரைஞர் பாலு 3.தருமபுரி – அரசாங்கம் 4.சேலம் – அண்ணாதுரை 5.விழுப்புரம் – முரளிசங்கர் 6.கள்ளக்குறிச்சி – தேவதாஸ் 7.ஆரணி – கணேஷ்குமார் 8. மயிலாடுதுறை-
ஸ்டாலின் 9.கடலூர் – இயக்குனர் தங்கர்பச்சான் 10. காஞ்சிபுரம் – அறிவிக்கப்படவில்லை.
Sorry, no posts matched your criteria.