India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் பெற்று வெற்றி பெறும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலை விட இரு மடங்கு வாக்கு வித்தியாசத்தில் இந்த முறை காங்கிரஸ் வேட்பாளர்கள் வெல்வார்கள் என்றும் அவர் பேசியிருக்கிறார். இதுகுறித்து உங்களது கருத்து என்ன?
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் GT வீரர் நூர் முகமது வீசிய 9ஆவது ஓவரை எதிர்கொண்ட சஞ்சு, பேக்வேர்டு பாயிண்ட்டில் ஒரு ரன் அடித்தார். அப்போது பந்தை பிடித்த ஃபீல்டர், அதை பவுலர் ஸ்டம்பை நோக்கி வீச, எதிர் திசையில் இருந்த மோஹித் ஷர்மா அந்தப் பந்தை பிடிக்காததால் அது பவுண்டரிக்கு சென்றது. இதன் மூலம் RR அணிக்கு 5 ரன்கள் கிடைத்தது.
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து திருநங்கை மஹாமண்டலேஷ்வர் ஹிமாங்கி போட்டியிடுவாரென அகில பாரத இந்து மகாசபா (ABHM) அறிவித்துள்ளது. குஜராத்தின் பரோடாவில் பிறந்த இவர், மும்பைக்கு இடம்பெயர்ந்த பின்னர் இஸ்கான் அமைப்பில் சேர்ந்தார். ராம கதா உள்ளிட்ட பல்வேறு நாடகங்களை மேடையில் ஹிமாங்கி அரங்கேற்றி உள்ளார். இந்தியாவில் 48,044 மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்காளர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
வெயிலின் தாக்கம் அதிகமாவதன் காரணமாக காய்கறி மற்றும் பழங்களின் விலை அதிகரித்துள்ளன. குறிப்பாக பீன்ஸ் விலை இன்று கிலோவுக்கு ₹50 உயர்ந்து ₹90க்கு (கோயம்பேடு சந்தை நிலவரம்) விற்பனை ஆனது. எலுமிச்சை கிலோ ₹80, பீட்ரூட் கிலோ ₹30, கத்திரிக்காய் கிலோ ₹30, கேரட் கிலோ ₹35, இஞ்சி கிலோ ₹110, உருளை கிழங்கு கிலோ ₹24, அவரைக்காய் கிலோ ₹40 என்று விற்பனை ஆகிறது.
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அதிரடியாக விளையாடி வரும் ராஜஸ்தான் அணி வீரர் ரியான் பராக் 50 ரன்களை கடந்தார். டாஸ் வென்ற GT முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய RR அணி தற்போது வரை 14 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்துள்ளது. இதில் ரியான் பராக் 35 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்சருடன் 55 ரன்களை விளாசியுள்ளார். இந்தப் போட்டியை எந்த அணி வெல்லும்.?
பிரதமர் மோடியின் புகைப்படத்தை கர்நாடக முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா பயன்படுத்த தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட் தராததால், அதிருப்தியடைந்த ஈஸ்வரப்பா, ஷிவமோகாவில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இந்நிலையில், தன்னை பாஜக வேட்பாளர் போல காட்டிக்கொள்ள, பிரதமர் மோடியின் புகைப்படங்களை அவர் தவறாக பயன்படுத்தி வருவதாக பாஜக தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. ‘ஐ ஆம் ஹாட்டி’, ‘ஐ ஆம் நாட்டி’, ‘ஐ ஆம் சிக்ஸ்டி’ என்ற கேப்சனுடன் ஹாயாக போஸ் கொடுத்தவாறு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலர் அவரை கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
கராச்சியில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் குவிந்ததால், பாகிஸ்தான் போலீசார் திணறி வருகின்றனர். ரமலான் பண்டிகையை ஒட்டி பாகிஸ்தானில் பல்வேறு பகுதியில் இருந்து யாசகம் பெறுவதற்காக அங்கு பிச்சைக்காரர்கள் குவிந்துள்ளனர். இதனை பயன்படுத்தி குற்றவாளிகள் பலரும் கூட்டத்தில் ஊடுருவியதால் வழிப்பறி போன்ற குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் போலீசார் கவலை அடைந்துள்ளனர்.
எஸ்ஐபி (SIP) முதலீட்டு திட்டங்களில் கடந்த மார்ச்சில் மட்டும் இந்தியர்கள் ரூ.19,270 கோடியை முதலீடு செய்துள்ளனர். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சிறிது சிறிதாக முதலீடு செய்யும் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய மார்ச்சில் 42 லட்சத்து 87 ஆயிரத்து 117 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எஸ்ஐபி திட்டங்கள் மூலம் நிர்வகிக்கப்படும் சராசரி சொத்துக்களின் மதிப்பு ரூ.10,71,665.63 கோடியாக அதிகரித்துள்ளது.
அவசரத் தேவைக்கு பணம் தேவை. அதே நேரம், வங்கிக்கு சென்று பணம் எடுக்க முடியாத சூழலில் இருப்போருக்கு ஆன்லைன் ஆதார் ஏடிஎம் சேவையை இந்திய அஞ்சலக வங்கி செயல்படுத்தி வருகிறது. இந்த சேவையை பெற ஆதாருடன் உங்கள் வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டிருந்தால் போதும். அஞ்சலக ஊழியர் வீட்டுக்கே வந்து பணத்தை கொடுத்து விடுவார். மேலும் டெபாசிட், பேலன்ஸ் சேவையையும் பெறலாம். அதிகபட்சமாக ரூ.10,000 பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.