India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம் கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர், சேலம் ஆகிய 10 தொகுதிகளில் பாமக மாம்பழம் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேகதாது அணையை கட்டிய தீருவோம் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியது கண்டனத்திற்குரியது என எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோகும் நிலையிலும் முதல்வர் ஸ்டாலின் அமைதியாக இருப்பதா? என கேள்வி எழுப்பிய அவர், கர்நாடக அரசை எதிர்த்து சட்ட நடவடிக்கைகள் எடுத்து தமிழக அரசின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அவர், சுயேச்சை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக, மக்களவைத் தேர்தலில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுவார் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது ஓ.பன்னீர்செல்வமே போட்டியிடுகிறார்.
டாடா IPLஇன் அடுத்த 5 ஆண்டுக்கான அசோசியேட் ஸ்பான்ஸராக, முன்னணி விளையாட்டு ஃபேண்டஸி தளமான My11Circle தேர்வு செய்யப்பட்டுள்ளது. முந்தைய IPL தொடர்களின் அசோசியேட் ஸ்பான்சரான DREAM11 உடன் போட்டியிட்டு இதனைக் கைப்பற்றியிருக்கிறது My11Circle. “புது விளையாட்டு அனுபவம் மற்றும் உற்சாகமான போட்டிகளுடன், கிரிக்கெட் ரசிகர்களுக்கு தனித்துவமான ஃபேண்டஸி கேமிங் அனுபவத்தை My11Circle கொடுக்கும்” என BCCI கூறியுள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்ததையடுத்து அவரது வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றம் நிலவிவருகிறது. ஆம் ஆத்மி கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அங்கு பாதுகாப்பு படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். கெஜ்ரிவால் வீட்டை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சற்றுமுன் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் விசாரணைக்காக 9 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால், தற்போது அவரை ED கைது செய்துள்ளனர். முன்னதாக இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் பிஆர்எஸ் தலைவர் கவிதா ஆகியோரை ஏற்கெனவே அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
2024 ஐபிஎல் தொடரில் 7 அணிகளின் கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னை- ருதுராஜ் கெய்க்வாட், மும்பை- ஹர்திக் பாண்டியா, ஐதராபாத்- பேட் கம்மின்ஸ், கொல்கத்தா- ஷ்ரேயஸ் ஐயர், டெல்லி- ரிஷப் பண்ட், பஞ்சாப்- ஜிதேஷ் சர்மா, குஜராத்- ஷுப்மன் கில் ஆகியோர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். 16 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு சீசனில், அதிக அணிகளில் கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகாரில் ₹100 கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகள் கவிதா, கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து தற்போது டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதால் அவரும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகாரில், அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு கேட்ட அவரது கோரிக்கையை டெல்லி ஐகோர்ட் இன்று நிராகரித்தது. இதையடுத்து வாரண்டுடன் சென்ற ED அதிகாரிகள், கெஜ்ரிவால் வீடு முழுவதும் சோதனை நடத்துகின்றனர்.
சமூக வலைதளங்களில் ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, திரைப் பிரபலங்கள் பதிலளித்து வருவது வழக்கம். அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகை ஒருவர் கேட்ட கேள்விக்கு, நடிகை ஜோதிகா ‘நச்’ என்று பதிலளித்துள்ளார். “நான் சூர்யாவின் 15 வருட ரசிகை. ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் வருவது போல், சூர்யாவை எனக்கு ஒரு நாள் கடன் தருவீர்களா?” என கேட்டதற்கு, “அதற்கு வாய்ப்பில்லை” என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.