news

News March 22, 2024

பயந்த சர்வாதிகாரி ஜனநாயகத்தை கொல்ல முயற்சி

image

கெஜ்ரிவால் கைதுக்கு INDIA உரிய பதிலடி கொடுக்குமென காங்கிரஸ் எம்.பி ராகுல் தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதுக்கு கண்டனம் தெரிவித்து அவர் தனது தனது X பக்கத்தில், ‘ஒரு பயந்த சர்வாதிகாரி ஜனநாயகத்தை கொல்ல விரும்புகிறார். ஊடகங்களை கைப்பற்றி, கட்சிகளை உடைத்து, நிறுவனங்களிடம் பணம் பறித்து, எதிர்க்கட்சியின் கணக்கை முடக்குவதோடு, முதல்வர்களை கைது செய்வது வாடிக்கையாகி விட்டார்’ என்றார்.

News March 22, 2024

பாஜகவுக்கு நன்கொடையளித்த டாப் நிறுவனங்கள்!

image

எஸ்.பி.ஐ சமர்ப்பித்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பாஜகவுக்கு அதிக நன்கொடையளித்த நிறுவனங்களில், ஐதராபாத்தைச் சேர்ந்த மேகா இன்ஜினியரிங் (ரூ.584 கோடி) முதலிடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து ரிலையன்ஸ் உடன் தொடர்புடைய 2. Qwik Supply -ரூ.395 கோடி, 3.வேதாந்தா குழுமம் – ரூ.226 கோடி, 4. பார்தி ஏர்டெல் – ரூ.197 கோடியை நன்கொடையாக அளித்துள்ளன.

News March 22, 2024

ஈஷா யோகா மையத்தில் 6 பேர் மாயம்!

image

ஈஷா யோகா மையத்தில் கடந்த 2016 முதல் பணியாற்றிய 6 பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர் என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. தென்காசியை சேர்ந்த திருமலை என்பவர் ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய தனது சகோதரர் காணாமல் போனதாக புகார் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கை துரிதப்படுத்தி விசாரித்து ஏப்ரல் 8இல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

News March 21, 2024

வாட்ஸ்அப்பில் வருகிறது புது அப்டேட்!

image

காது கேளா மாற்றுத்திறனாளி பயனர்களுக்காக அசத்தலான அப்டேட் ஒன்றை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பயனாளர்களுக்கு பல்வேறு சிறப்பம்சங்களை வாட்ஸ்அப் அளித்து வருகிறது. அந்த வகையில், குரல் செய்தியை புரிந்து கொள்ள முடியாதவர்கள் & காது கேளாதவர்களுக்கு குரல் குறிப்புகளை உரையாக மாற்றி தருவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் இது அறிமுகமாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

News March 21, 2024

CSKvsGT: டிக்கெட் விற்பனை 23ஆம் தேதி தொடக்கம்

image

சென்னை- குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, வரும் மார்ச் 26ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் (மார்ச் 23) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் ரூ.7,500-க்கு விற்பனையான டிக்கெட்டுகள், இம்முறை ரூ.6,000-க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. டிக்கெட் விலை ரூ.1,700 தொடங்கி ரூ.6,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News March 21, 2024

தொட்டதெல்லாம் பொன்னாகும் ராசிகள்

image

கும்ப ராசியில் செவ்வாய் பகவான் நுழைந்தது 12 ராசியினருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில ராசியினருக்கு ராஜ யோகம் காத்திருக்கிறது. அந்த வகையில் ரிஷபம், விருச்சிகம், தனுசு மற்றும் கும்ப ராசியினர் இனிமேல் தொட்டதெல்லாம் பொன்னாகப் போகிறது. குறிப்பாக ஆடம்பர வாழ்க்கை, வழக்குகளில் வெற்றி, நிலப் பிரச்னைகளில் சுமூகத் தீர்வு, கடன் தொல்லையில் இருந்து விடுபடுவது போன்ற பல்வேறு சுப பலன்களை அனுபவிக்க உள்ளனர்.

News March 21, 2024

லோகேஷை கிண்டலடித்த நடிகை காயத்திரி

image

‘இனிமேல்’ என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜை, நடிகை காயத்திரி கிண்டலடித்துள்ளார். காதல் கதைக்களத்தில் உருவாகும் இந்தப் பாடல் குறித்து, “உங்கள் படத்தில் காதல் செய்தால் தலையை வெட்டிவிட்டு, நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்” என அவர் காமெடியாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஸ்ருதிஹாசன் இயக்கும் இந்த பாடலை கமல்ஹாசன் எழுத, ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

News March 21, 2024

கெஜ்ரிவால் கைது: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

image

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். “தோல்வி பயம் காரணமாகவே, பாஜக அரசு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்களை பாஜக அரசு இடைவிடாமல் துன்புறுத்தி வருகிறது. பாஜகவின் இத்தகைய செயல் பொதுமக்களின் கோபத்தை தூண்டுகிறது. இது ஜனநாயகத்தின் சீரழிவு மற்றும் அதிகார துஷ்பிரயோகம்” எனக் கூறியுள்ளார்.

News March 21, 2024

இரண்டு மாதங்களில் 2 முதல்வர்கள் கைது!

image

தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களில் 2 முதல்வர்கள் கைது செய்யப்பட்டது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலமோசடி வழக்கில் ஜன.31இல் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் இன்று அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கைகள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

News March 21, 2024

பலத்தை நிரூபிக்க நானே களமிறங்குகிறேன்

image

ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், “15க்கும் அதிகமான தொகுதிகளை பாஜகவிடம் கேட்டோம். ஆனால் கிடைக்கவில்லை. நானே களத்தில் நின்று தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க போகிறேன். இரட்டை இலையை பெறுவதற்கு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். சின்னத்தை பெறுவதற்காகத் தான் தேர்தலில் களம் இறங்குகிறேன்” என்றார்.

error: Content is protected !!