India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சற்றுமுன் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் விசாரணைக்காக 9 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால், தற்போது அவரை ED கைது செய்துள்ளனர். முன்னதாக இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் பிஆர்எஸ் தலைவர் கவிதா ஆகியோரை ஏற்கெனவே அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
2024 ஐபிஎல் தொடரில் 7 அணிகளின் கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னை- ருதுராஜ் கெய்க்வாட், மும்பை- ஹர்திக் பாண்டியா, ஐதராபாத்- பேட் கம்மின்ஸ், கொல்கத்தா- ஷ்ரேயஸ் ஐயர், டெல்லி- ரிஷப் பண்ட், பஞ்சாப்- ஜிதேஷ் சர்மா, குஜராத்- ஷுப்மன் கில் ஆகியோர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். 16 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு சீசனில், அதிக அணிகளில் கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகாரில் ₹100 கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகள் கவிதா, கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து தற்போது டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதால் அவரும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகாரில், அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு கேட்ட அவரது கோரிக்கையை டெல்லி ஐகோர்ட் இன்று நிராகரித்தது. இதையடுத்து வாரண்டுடன் சென்ற ED அதிகாரிகள், கெஜ்ரிவால் வீடு முழுவதும் சோதனை நடத்துகின்றனர்.
சமூக வலைதளங்களில் ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, திரைப் பிரபலங்கள் பதிலளித்து வருவது வழக்கம். அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகை ஒருவர் கேட்ட கேள்விக்கு, நடிகை ஜோதிகா ‘நச்’ என்று பதிலளித்துள்ளார். “நான் சூர்யாவின் 15 வருட ரசிகை. ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் வருவது போல், சூர்யாவை எனக்கு ஒரு நாள் கடன் தருவீர்களா?” என கேட்டதற்கு, “அதற்கு வாய்ப்பில்லை” என தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு சரியான கொட்டு வைத்துள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், அதை பற்றி அவர் கவலைப்பட மாட்டார். தலையில் எவ்வளவு கொட்டினாலும் அவருக்கு வலிக்காது. அவர் இரும்பு தலையர். ஆளுநரின் நடவடிக்கை கவலை அளிப்பதாக உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது அவரின் நடத்தைக்கு சிறந்த எடுத்துக்காட்டு” என்றார்.
ஐபிஎல் 17ஆவது சீசன் தொடர் நாளை தொடங்க உள்ளது. சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டியில், சென்னை- பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. நாளை மாலை 6.30 மணிக்கு தொடங்கும் தொடக்க விழாவை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் மற்றும் ஜியோ சினிமா App-இல் இலவசமாக காணலாம். ருதுராஜ் (CSK) மற்றும் டு பிளெசிஸ் (RCB) தலைமையிலான அணிகள் மோதவுள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கப்போவது யார்?
டெல்லி அரசு 2021இல் புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. டெல்லியில் மது விற்பனையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டது. 2022இல் பொறுப்பேற்ற புதிய தலைமைச் செயலர், அதில் ஊழல் இருப்பதாக கூறி, லெப்டினன்ட் கவர்னரிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். அதே ஆண்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதில் ரூ.100 கோடி ஊழல் நடந்ததாக கூறி அமலாக்கத்துறை விசாரணையில் இறங்கியுள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையால் ஆம் ஆத்மி தலைவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். முதல்வரை அடிபணிய வைக்க பாஜக பல தடைகளை ஏற்படுத்தி வருவதாக அவர்கள் விமர்சித்துள்ளனர். இதை டெல்லி மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், அவர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள் என கூறியுள்ளனர். இந்த வழக்கில் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.
பாஜகவின் ஏஜெண்டாக செயல்படும் ஆளுநர் ரவி உடனே பதவி விலக வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். “ஆளுநராக நியமிக்கப்பட்டதில் இருந்து அரசியலமைப்புக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். திமுக மீது உள்ள வன்மத்தால், அவர் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கவில்லை. ஆளுநரை வெளியேற்றும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை நீதிமன்றத் தீர்ப்பு உணர்த்துகிறது’ என கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.