India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அம்பேத்கார் பிறந்தநாளான இன்று (ஏப்.14) சமத்துவ நாளாக திமுக அறிவித்துள்ளது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்க முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சாதி-சமய வேறுபாடுகளை ஒழிப்பதில் அடையாள சின்னமாக விளங்கிய அம்பேத்கர் பிறந்த நாளில் அவரை போற்றி அவர் வழியில் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிட அனைவரும் பாடுபடுவோம் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
U 23 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் 19 வயதான இந்தியாவின் இளம் வீரங்கனை ராதிகா வெள்ளி வென்றுள்ளார். கிர்கிஸ்தானில் மகளிர் 68 கிலோ பிரிவின் இறுதிச் சுற்றில் ராதிகா, ஜப்பானின் நோனோகா ஓசாகியுடன் மோதினார். இதில் 2 – 15 என்ற கணக்கில் அவர் போராடித் தோற்றார். இறுதிச் சுற்றில் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து அவர் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
சிவபெருமான் நடராஜராக நடனம் புரியும் 5 சபைகள், தமிழகத்தில் உள்ளன. * ரத்தின சபை (திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு கோயில்) * கனக சபை ( சிதம்பரம் கோயில்) * வெள்ளி சபை (மதுரை சுந்தரேஸ்வரர் கோயில்) * தாமிர சபை (நெல்லையப்பர் கோயில்) * சித்திர சபை (குற்றாலம் கோயில்) இறைவன் தன் ஆனந்தத் தாண்டவத்தின் மூலம் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களை நிகழ்த்துவதாக ஐதீகம்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 29-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான மும்பை – சென்னை அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்க உள்ளது. சொந்த மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை ருசிக்கும் ஆர்வத்துடன் மும்பை அணி தயாராகி வருகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 36 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், MI – 20 போட்டிகளிலும், CSK 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலில் பெண்களின் வாக்குகளை கவரும் வகையில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 கொடுத்ததை திமுக விளம்பரமாக வெளியிடுகிறது. நாளை அனைத்து மகளிரின் வங்கிக் கணக்கிலும் ரூ.1000 செலுத்தப்படவுள்ள நிலையில், அனைவருக்கும் ஆயிரம் என்று கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, தகுதி பார்ப்பதாக கூறி மகளிரை நிராகரித்து திமுக ஏமாற்றுவதாக #வரல_ஆயிரம் என நூதனமான முறையில் அதிமுக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது தெலுங்கு தேசம் கட்சியினர் என்று ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து கூறிய அக்கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான அம்பாதி ராம்பாபு, ஜெகன் மீதான தாக்குதலின் பின்னணியில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு இருப்பதாக குற்றம்சாட்டினார்.
மக்களவைத் தேர்தலில் 3ஆவது இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதியாக இருக்கிறாராம். வெற்றி, வாக்குச் சதவிகிதம் என்கிற இலக்குகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு, இதனை மனதில் வைத்து வேலைகளைச் செய்யுமாறு கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாராம். பாஜக 3ஆவது இடத்தைப் பிடிக்க வாய்ப்பிருக்கும் தொகுதிகளில் அவர் தனி கவனம் செலுத்தி வருகிறாராம்.
இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதலை தொடங்கியிருப்பது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலை தாக்குவோம் என ஈரான் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, பேலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் ஏவியது. இதேபோல் 100க்கும் மேற்பட்ட டிரோன்களையும் ஏவியது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு, அவற்றை சுட்டுவீழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று காலை 8:30 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கையை ஏற்கெனவே வெளியிட்ட நிலையில், பாஜக தேர்தல் அறிக்கை மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக இதில் கச்சத்தீவை மீட்பது தொடர்பான வாக்குறுதி இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ரோகித் ஷர்மா CSK அணிக்காக விளையாடுவார் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “CSK அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இந்த ஆண்டு மட்டுமே இருப்பார். அடுத்த ஆண்டு ரோகித் ஷர்மாவை CSK அணியின் கேப்டனாக பார்க்கலாம். தோனிக்கு மாற்றாக ரோகித் சர்மா இருப்பார்” எனக் கூறினார்.
Sorry, no posts matched your criteria.